Monday, January 13, 2014

சென்னை புத்தகக் கண்காட்சி

எனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்றாலும் தீவீர வாசிப்பாளனோ,விமர்சகனோ இல்லை.

ஒருப் பார்வையாளனாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் கண்டவைகளை எழுதுகிறேன்.

அதிகமான அரங்குகளில் இன்னும் சுஜாதா,கல்கி மற்றும் தி.ஜா வின் புத்தகங்கள் காணப்பட்டன. அதனையடுத்து ஜெயமோகனின் புத்தகங்கள்.

இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு அத்தனை வரவேற்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஆன்மீக புத்தகங்கள் மற்றும் ஜோதிடப் புத்தகக் கடைகளும் அதிகம், கூட்டமும் அதிகம். மக்கள் எப்போதும் ஒருத் தேட்டத்தில் இருக்கிறார்கள் என்பதாக நினைக்கிறேன்.

அடுத்து ரியோ ஒகோவா என்னும் ஜப்பானிய எழுத்தாளரின் தமிழ் மொழிப் பெயர்ப்புப் புத்தகங்களுக்குத் தனியாக ஒரு கடை அதில் ஜப்பானியர்களே விற்பனையாளர்கள்,ஆனாலும் வரவேற்பு அதிகமில்லை.

தத்துவ அறிஞர் ஜே.கே அவர்களின்
அறக்கட்டளைச் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் ஆங்கிலப் புத்தகங்களே இருந்தன.

குழந்தைகளுக்கானப் பயிற்சி புத்தகங்களுக்கானக் கடைகளும் அதிகம் விற்பனையும் பரவாயில்லை என்றே நினைக்கிறேன். அதேப் போன்றே குழைந்தைகளுக்கானக் கணிணியில் பயிற்சி செய்வதற்கு உதவும் மென்பொருள் விற்பனையும் அதிகம்.

இளைஞர்கள் தமிழ் நாவல்களை வாங்குவதைவிட ஆங்கில நாவல்கள் வாங்குவதற்கு ஆர்வமாக இருந்ததைக் காண முடிந்தது.

வேலைக்கானத் தேர்வுக் கையேடுகளும்
அதிகம் விற்பனையாவதைக் காண முடிந்தது.


ஒரு இடத்தில் இஸ்லாமியப் புத்தகங்கள் விற்பனைச் செய்யும் கடை அதன் நேர் எதிரில் இஸ்லாத்தை இழிவு செய்யும் புத்தகங்கள் விற்பனைச் செய்யும் கடை, முரண்.

ஆண்டுக்கொரு முறை நடக்கும் இந்தப் புத்தகக் கண்காட்சி எழுத்தாளர்களுக்குத் தங்கள் புதியப் புத்தகங்களைவெளியிட ஒரு வாய்ப்பு. வாசகனுக்கு எல்லாப் புத்தகங்களும் ஒரு இடத்தில் கிடைக்கும்,
வேறு விசேஷங்களில்லை.


37 வதுப் புத்தகக் கண்காட்சியாம் இன்னும் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கலாம்.
ஒரு சடங்காகவே நடைபெருவதாக எண்ணத் தோன்றியது.


Mohamed Salahudeen

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails