கல்வியில் எப்படி அதிக நாட்டம் உடையவரோ, அதே போல் சன்மார்க்க நெறிகளையும் பின்பற்ற கூடியவர். .ஐந்து வேலை தொழுகை தவறாத மன்சூர் அவர்கள், ஜமாஅத் செல்வதில் அதீக நாட்டம் உடையவர். தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் சென்னை கிரசென்ட் தனியார் மெட்ரிக் பள்ளியில் முடித்தார் மன்சூர்.
பின்னர் டெல்லியில் உள்ள இந்திய ஆட்சி பனி அகடாமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இதனை தொடர்ந்து காரைக்கால் மாவாட்ட துணை ஆட்சியராகவும், பின்பு புதுவை மாநில சுற்றுலா துறை இயக்குனராகவும், புதுவை மாநில சிவில் சப்ளை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் முத்துப்பேட்டை மன்சூர் அவர்களை, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவராக நியமித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. அன்பு சகோதரர் மன்சூர் அவர்களின் மக்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம். ஆமீன்.
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி http://muthupet.org
No comments:
Post a Comment