Wednesday, August 26, 2015

குறைந்து வரும் முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் : ஆர் எஸ் எஸ் பொய் பிரச்சாரம் அம்பலமாகியது…!


புது தில்லி: கடந்த சில தசம ஆண்டுகளில் இந்து மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இந்திய முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இதனை புதிய சென்சஸ் புள்ளிவிபரம் உறுதிப்படுத்தியிருக்கிறது. முஸ்லிம் மக்கள்தொகை அதிகரித்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சிவிகிதம் இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டும் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு,   ஆர் எஸ் எஸ் பொய் பிரச்சாரத்தை அம்பலமாக்கி உள்ளது .

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மதவாரியான மக்கள்தொகை புள்ளிவிபரத்தை மக்கள்தொகை ஆணையர் மற்றும் பதிவாளர் நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டார்.

121.09 கோடி:

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.09 கோடி. இந்த மக்கள் தொகையில், 96.63 கோடி பேர் இந்துக்கள்.  இது மொத்த மக்கள்தொகையில் 79.8% ஆகும். 17.22 கோடி பேர் முஸ்லிம்கள்.  இது மொத்த மக்கள்தொகையில் 14.23%. ஆகும். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.78 ( 2.3% ) கோடியாகும்.

சுதந்திரக்குப் பிந்தைய நிலவரம்:

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், முஸ்லிம் மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வந்திருக்கிறது. இதற்கு காரணம் முஸ்லிம் சமூகத்தில் குழந்தைபிறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அண்மைகாலமாக முஸ்லிம் சமூகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது. இதனால், இந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது.

2001, 2011 காலகட்டத்தில் இந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 16.76% ஆகவும், முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 24.6% ஆகவும் உள்ளது. இது இதற்கு முந்தைய கணக்கெடுப்புடம் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருக்கிறது. முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 19.92% ஆகவும், முஸ்லிம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29.52% ஆகவும் இருந்திருக்கிறது.

முஸ்லிம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முன்னேற்றம்

முஸ்லிம் சமூகத்தில் ஆண் – பெண் விகிதாச்சாரம் ஏற்றம் கண்டுள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம் சமூகத்தின் ஆண்-பெண் விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற நிலையில் உள்ளது. இதற்கு முந்தைய கணக்கெடுப்பில் முஸ்லிம் சமூகத்தின் ஆண்-பெண் விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற அளவில் இருந்தது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்து சமூகத்தில் ஆண்-பெண் விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 939 பெண்களாக இருக்கிறது.

நாட்டிலேயே அசாம் மாநிலத்தில் அதிகளவில் முஸ்லிம்கள் இருக்கின்றனர். அங்கு முஸ்லிம் மக்கள் விகிதாச்சாரம் (34.22%). அசாமை தொடர்ந்து உத்தராகண்ட், கேரளாவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளனர்.

மொத்த வளர்ச்சி விகிதம்

2001-2011 காலகட்டத்தில் நாட்டின் மொத்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 17.7%. இதே காலக்கட்டத்தில் மதவாரியான மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்

மதம்
   

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்

இந்து மதம்
   

16.8%  ( 2001 - ல்  19.92%) 3.12% குறைவு

முஸ்லிம் மதம்
   

24.6% ( 2001 – ல்  29.52%) 4.92% குறைவு

கிறிஸ்தவம் மதம்
   

15.5%

சீக்கிய மதம்
   

8.4%

பெளத்த மதம்
   

6.1%

ஜைன மதம்
   

5.4%
http://www.thoothuonline.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails