முஹமது நபி பெண்களுக்கான சுதந்திரத்தை, கல்வியை, சொத்துரிமையை பல நூற்றாண்டுகளுக்கே முன்பே வலியுறுத்தியவர். எளிய வாழ்வையும், சமத்துவத்தையுமே இஸ்லாம் முன்னிருத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளை ஏற்க மறுக்கிறது. பிற்போக்கான மதம் என்கிற கட்டமைக்கப்பட்ட பொதுபுத்திக்கு மாறாக நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு முற்போக்கானதாக (Strikingly Progressive) இருக்கிறது .
மேற்குலக நாடுகளின் எண்ணெய் அரசியல் வேறு இஸ்லாமை ஒரு மோசமான ஆயுதமாக பறைசாற்றி மத அடிப்படை வாதிகளை ஊட்டி வளர்க்கிறது. இந்தச் சூழலில் உண்மையான இஸ்லாமை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் முன் உள்ளது. இன்றைய சூழலில் அந்தக் கடினமான பணியில் அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய மாபெரும் தார்மீகப் பொறுப்பு மற்றவர்களிடம் உள்ளது.
இஸ்லாம் மீது பயங்கரவாதம் திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கிறது . மேலும் அது உலக அளவில் நடந்துவரும் சதி. இதைப் பேசாமல் ,இதற்கு எதிராக போராடாமல் இருக்க முடியாது .பௌத்த பேரினவாதத்தின் பெயரால் பர்மாவிலும் ,இலங்கையிலும் அரசியல் அப்பாவி மக்களை கொன்று குவித்தது ,இந்தியாவில் இந்து மதத்தின் பெயரால் . இதற்கு எப்படி சாதாரண இந்துக்களும் ,பௌத்தர்களுக்கும் தொடர்பு இல்லையோ அதே போல அங்கு மத அடிப்படைவாதிகள செய்கிற படுகொலைகளுக்கு சாதாரண இஸ்லாமியர்கள் பொறுப்பாக மாட்டார்கள் . எந்த மத அடிப்படைவாதம் கொடூரமானது தான் .ஆனால் இஸ்லாம் மீது மட்டும் பயங்கரவாத பதம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது . அதை எதிர்கொள்ளாமல் ,பேசாமல் கடந்து போவது சாத்தியமில்லை .
Jothimani Sennimalai
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
தவா பணியை ஒவ்வொரு இஸ்லாமியனும் செய்தாகவேண்டும் என்பது ஒரு இஸ்லாமிய கட்டாய கடமை என்கிற கருத்தை நாம் மீண்டும் சகோதரி ஜோதிமணி அவர்களின் பதிவால் நினைவூட்டப்படுகிறோம்.... ஆனால் நம்மில் எத்தனைபேர் இதனை செய்கிறோம் ?!..
- தக்கலை கவுஸ் முஹம்மத்
No comments:
Post a Comment