துண்டு காகிதம் இருந்தால்
காகித கப்பல் செய்யலாம்
படிக்கிற செய்தித் தாளில்
வெடிக்கிற ஏவுகணை
செய்ய முடியுமா
செய்து முடித்தாரே கலாம் !
கோவில் படிகளில்
மல்லாந்து கிடந்தால்
பறக்கிற விமானம்
கண்ணுக்கு தெரியலாம்
கண்டம் தாவி
அண்டம் அழிக்கும்
ஏவுகணை தெரியுமா ?
பொக்ரான் இன்னமும் பாலைவனமா
ஆக்கம் தரும் அணுப் பூக்களின்
வாசம் தரும் மலர் சோலை அல்லவா அது !
இந்திய வரலாற்றில்
தலையில் கனமே
இல்லாத ஒருவர்
நாட்டின் தலைமகன் என்றானார் !
இருள் படர்ந்த இந்திய வானில்
ஏவப்பட்ட புதிய சூரியன் !
கலாம் என்றிருந்ததால்
காலம் என்றாகி விடுவதே
சரி என்று கருதியோ இன்று
காற்றினில் கரைந்தாரே
கண்ணீரில் நம் கண்களை நிறைத்தாரே !
அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, 9/8/15 அன்று தமிழ் சங்கம் உகாண்டா ஏற்பாடு செய்திருந்த ‘இந்தியக் கனவுகள்’ என்கிற கருத்தரங்கில் என் கவிதாஞ்சலியின் மலர்ந்த சில கண்ணீர் பூக்கள் !
Raheemullah Mohamed Vavar
No comments:
Post a Comment