Thursday, January 21, 2016

'இஸ்லாம் சில வரிகளில்'

என் அலுவலகம் அமைந்துள்ள பாண்டிச்சேரி, லாஸ்பேட்டை பகுதியின் மிகப் பெரிய பள்ளிவாசல் என்றால் அது இந்த 'நூரே ஹிதாயத்துல் இஸ்லாமியா' பள்ளிவாசல் தான். மிக ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றது இந்த பள்ளி. 'இஸ்லாம் சில வரிகளில்' என்ற தலைப்பிலான சிறு நூல் பிறசமய மக்களுக்கு இலவசமாக இங்கிருந்து விநியோகிக்கப்படுகின்றது. இதுவரை குறைந்தபட்சம் 50,000 பிரதிகளாவது இப்புத்தகம் அச்சிடப்பட்டிருக்கும்.
அப்படியான நூலில், எதிர்க்குரல் தளத்தின் முகவரியை, பிரதான பக்கத்தில் அச்சிட போவதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறிய போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக. அவர்கள் கூறியப்படியே அச்சிடப்பட்டு வெளிவந்தது. இந்த சம்பவம் நடந்து நான்கு-ஐந்து வருடங்கள் இருக்கும்.

இப்போது பத்தாவது பதிப்பு வரை இப்புத்தகம் வந்துவிட்டது. 'நாம் தான் சில ஆண்டுகளாக எதிர்க்குரல் முகப்பு பக்கத்தில் எழுதுவதில்லையே, நம் தளத்தை புத்தகத்தில் இருந்து எடுத்திருப்பார்கள்' என்ற நினைப்போடு சமீபத்திய நூல் ஒன்றை எடுத்து பார்த்தேன். ஆச்சர்யம்....அதே பக்கத்தில் எதிர்க்குரல் முகவரி உட்கார்ந்திருந்தது (பார்க்க படம்)

'என்ன இப்பல்லாம் எழுதுறது இல்ல போல, பரவாயில்லை இருக்கட்டும். தொடர்ந்து எழுதுங்க' என்று சொல்லிட்டு போனார் அந்நூலுடன் சம்பந்தப்பட்ட பெரியவர்.

Aashiq Ahamed 



இந்த தளத்தை பற்றி

எதிர்க்குரல்: தளத்தை பற்றி அறிய  //www.ethirkkural.com/2010/02/blog-post.html

1 comment:

Aashiq Ahamed said...

ஜசாக்கல்லாஹ் அப்பா

LinkWithin

Related Posts with Thumbnails