Sunday, June 29, 2014

மெளனம் ஓர் ஆயுதம் !


ஸவ்ர் குகையே ! – எங்கள்

தாஹா நபியிருந்த

பவர் குகையே !



அன்று

சத்தியம் சொல்லப்

புறப்பட்ட

எங்கள் சந்தன மலர்களைப்

பத்திரப்படுத்துத் தந்தாயே !

பகை மேகங்கள்

விழுங்கப் பார்த்ததே…!


தேவையா இந்த கேள்வி !

தேவையா இந்த கேள்வி !

நீங்க நோன்பு வைத்திருக்கீங்களா !
ஏன் இதனை இப்பொழுது கேட்குறீங்க

நோன்பு காலமாச்சே அதனால் கேட்டேன்
கேட்பதனால் உங்களுக்கு நன்மை வரப்போகுதா !
சும்மா கேட்டேன்.வருத்தப் படாதீங்க

Saturday, June 28, 2014

ரமளான் நல்வாழ்த்துக்கள்!

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜூன் 29, 2014 (ஞாயிறு) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
இறையாணை பெற்றிங்கே இஸ்லாமின் உயர்நெறிகள்
முறையான உள்ளச்சம்; முகிழ்க்கின்ற நற்பயிற்சி
மறைஞானம் அளித்துநல்ல மனக்கட்டு செய்துவைக்க
நிறைவான ரமளானே நீவந்தாய்; மகிழுவமே!

மலர்கின்றாய் வானத்தில்; மனமெல்லாம் ஞானத்தில்!
உளமொன்றி வணக்கங்கள்; உலகெங்கும் இணக்கங்கள்
பலங்கொள்ளும் மேன்மக்கள்; பண்புநிறை ஆன்மாக்கள்
வளங்கூட்டச் செய்வதிலே உயர்வெற்றி வாழ்விதிலே!

வழிகாட்டும் வான்மறையை வாழ்வினிலே பிணைத்துவிட
பழிபாவம் தவிர்ந்திடுதே! பசிதாகம் தவிப்பிலையே!
விழிப்பாகும் இதயந்தான் உண்மைக்குக் கண்திறக்க
அழுக்கெல்லாம் எரிகிறதே! ஆன்மாவும் ஒளிர்ந்திடுதே!

மண்ணிதிலே நடப்பெல்லாம் மாநபிகள் கடந்தபடி!
கண்துயிலும் போதினிலும் செவிமடுப்போம் போதனைகள்.
எண்ணமது சிறந்துவிடின் எல்லாமே சிறந்துவிடும்
விண்ணகமே எம்மிலக்கு; உலகமிது ஓர்களமே!

கவிஞர். பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

ஃபிரான்ஸ் 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை கட்டுகிறது !

ஐரோப்பாவின் மிக பெரிய முஸ்லீம் சமூகத்தை கொண்ட ஃபிரான்ஸில், மக்கள் வீதிகளில் தொழாமல் தடுக்க 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள் ஃபிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டு வருகிறது.முஸ்லிம்கள் பள்ளிகளில் போதுமான இட வசதி இல்லாமல் வீதியில் தொழுகிறார்கள்.இதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையில் ஃபிரான்ஸ் அரசாங்கம் இறங்கியுள்ளது.

Mohammed Moussaoui, ஃபிரான்ஸ் முஸ்லீம் கவுன்சில் (CFCM) தலைவர், திட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது ,சில பள்ளிகள் வடிவமைப்பிலும் சில பள்ளிகள் முடியும் நிலையிலும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஃபிரான்ஸில் மொத்த மக்கள் தொகையான 65 மில்லியன் மக்களில் ஏழு மில்லியன் முஸ்லிம்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Friday, June 27, 2014

பொருள் ஈட்ட பயணம் செல்கின்றோம்..



ஏன் இத்தனை தடவை போகிறீர்கள் என்று யாரும் கேட்பதில்லை

இறை நேசம் கொண்டு புனித இடமாம் மக்காவுக்கு ,மதினாவுக்கு ஹஜ் அல்லது உம்ரா பல் முறை செய்யும் போது ஏன் இத்தனை தடவை போகிறீர்கள் என்றுசிலர் கேட்கிறார்கள் . அவர்கள் அதன் அருமையை அறிவதில்லை .இறைவன் வசதி தந்துள்ளான் அவர்கள் நன்மையை நாடி மற்றும் ஆத்ம திருப்திக்கு செல்கின்றார்கள் .அவர்களுக்கு இறைவன் அந்த பாக்கியத்தை தந்துள்ளான்
தனிப்பட்ட நல்ல காரியங்களை நல்ல மனதோடு பாருங்கள் .
இடாதவர் இடுபவரையும் கெடுக்கும் நிலை வேண்டாம்

போகிறவர்கள் அனைத்து நல்ல செயல்களும் இங்கு செய்யத்தான் செய்கின்றனர் (தர்மம் ,தொழுகை ஜகாத்து போன்ற நல்ல காரியங்கள் )

ஒரு முறையான ஹஜ் கடமையும் நிறைவேற்றி விடுகின்றனர் .

“பிறை சொன்ன சேதி என்ன?”


மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற
,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே
பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில்
,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே!

இருளகற்றி ஒளிவீசி வானில்நான்
…..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே!
அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம்
….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே!

வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம்
…வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே
உரமிட்டு வைத்திருந்து என்வரவை
….உற்சாகமாய்க் காணவந்தீர் வாயிலிலே!

ரமலான்

ரமலான்- நிஷா மன்சூர்


ரமல் என்றால் கருக்குதல் என்று பொருள்.
கரும்பு விளைவிக்கப்பட்ட விளைநிலத்தில் அறுவடைக்குப்பிறகு கருக்குவார்கள்.அது எதற்காக...???
மண்ணின்/நிலத்தின் வளத்துக்காக.அப்போதைக்கு அவை கருக்கப்பட்டாலும் கருக்கப்படுவதன் நோக்கம் மீண்டும் உயிர்ப்புடனும் வளமையுடனும் வளரவேண்டும் என்பதுதான்.

அதுபோல நான்/என்னுடைய என்னும் மாயையான நம் சுயத்தைக் கருக்குவதற்கும் எல்லா படைப்பினங்களுக்கும் மூலமாக இருக்கும் ரட்சகனில் தன்னை அடையாளப்படுத்துவதற்கும் அந்த ரப்புல் ஆலமீன் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு அற்புதமான பயிற்சிதான் நோன்பு என்பதாகும்.

Friday, June 20, 2014

மேலப்பாளையமும், ரமலான் மாதமும்.

  பெரும் பாலும் முஸ்லிம் மக்கள் ரமலான்  மாதம் வந்து விட்டால் தமது ஊரில் இருந்து நோன்பு வைக்கவே விரும்புவார்கள்.காரணம்; தமது வசதிக்கு தக்க   நோம்புக்கு உண்ண, உறங்க ஏற்பாடு வச்சுக்கலாம். அதனாலதான்.
மேலப்பாளையத்து மக்களும் அந்த மாதிரி அவா கொண்டவர்கள் தான்.இத சொல்லும்போது  மேலப்பாளையம் மக்கள் வாய்க்கு ருசியா,பல வகை உணவு வகைகளைக் கொண்டு தான் நோன்பு வைப்பாங்களோ? என்று முடிவுக்கு வந்துடாதீங்க.
ரொம்ப ரொம்ப சாதாரணமான வகை உணவுகளே நோன்புக்கும் இருக்கும்.
அரிசிச்சோறுடன்,வார நாட்களை பிரித்து இறைச்சி,மீன்,முட்டை,பருப்பு ஏன் துவையல் புளியாணமும், சோறும் உண்டே நோன்பு வைக்கும் மக்கள் கூட இருக்கிறார்கள்.

"நெய்யும் தொழிலே செய்யும் தொழில்" என்று இருந்த காலத்தில்  அதி காலை ஸகர் வேளைகளில் பழைய சோறை வெங்காயம், பச்ச மிளகாயைக் கடித்துக்கொண்டு உண்டுமுடித்து நோன்பு வைப்பார்கள்.
மறுநாள் காலை வழக்கம் போல் காக்குழியில் தறி நெய்ய இறங்கி ஒரு "சாம்போ"......."ஒன்னரை சாம்போ" நெய்து முடிப்பார்கள். மற்ற மாதங்களில் எப்படி தங்கள் வாழ்க்கை நடை முறை இருக்குமோ  அவ்வாறே நோன்பு காலங்களிலும்தொடர்ந்தார்கள்.இதெல்லாம் அக்கம் பக்க வீடுகளில்  சின்னஞ்சிறிய வயதுக் காலங்களில் பார்த்திருக்கிறேன்.

      ரமலான் மாதத்தில் என்னுடைய அமீரக மற்றும் அரபக நண்பர்களிடம் ஏதாவது விஸா நடைமுறைகள் பற்றிக் கேட்டால் “இப்போ இங்கே ரமலான் மாதம். பாதி நாள் வேலை இருக்காது.பெருநா கழிச்சித்தான் அதெல்லாம் நடக்கும்,அப்படி இல்லேன்னா கொஞ்சம் மெதுவா இருக்கும்” இப்படி ஏதாவது ஒரு தகவல் தருவார்கள்.
நான் தான் அரபு நாடு வந்து இத பாக்கலியே.அதனால்அவங்க சொல்றது    சரியா இருக்குமோன்னு நம்பிக்கிடுவேன்..

Thursday, June 19, 2014

இஸ்லாத்தில் சாதிக‌ள் இல்லை !!!

ஓரிறை,ஓர் வேத‌ம் என‌ ஏக‌த்துவ‌த்தை பின்ப‌ற்றும் இஸ்லாமிய‌ர்க‌ள் ஏன் ஹ‌ன‌பி,ஷாபி(இந்தியாவில்), ச‌ன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக‌ பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ரே.இந்த‌ பிரிவினைக‌ளை இஸ்லாம் ஆத‌ரிக்கிற‌தா?? இஸ்லாத்தில் சாதீய‌ம் என்ற‌ ஒரு க‌ருத்து இருக்கிற‌தா ??

இதற்கு பதில் "நிச்ச‌ய‌மாக‌ இல்லை" என்ப‌தே.மேலும் இந்த‌ நெறிமுறைக‌ளின் வீரிய‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ம்.

இத‌ற்கான‌ ஆணித்த‌ர‌மான‌ விடையையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் த‌ருகிறான்.

"நிச்ச‌ய‌மாக‌ எவ‌ர் த‌ம்முடைய‌ மார்க்க‌த்தை ( த‌ம் விருப்ப‌ப்ப‌டி ப‌ல‌வாறாக‌ப் பிரித்து) ப‌ல‌ குழுக்க‌ளாக‌ பிரிந்து விட்ட‌ன‌ரோ அவ‌ர்க‌ளுட‌ன் (ந‌பியே !) உம‌க்கு எவ்வித‌ ச‌ம்ப‌ந்த‌முமில்லை;அவ‌ர்க‌ளுடைய‌ விஷ‌ய‌மெல்லாம் அல்லாஹ்விட‌மே உள்ளது.அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌வ‌ற்றைப் ப‌ற்றி முடிவில் அவ‌னே அவ‌ர்க‌ளுக்கு அறிவிப்பான்."

6:159 ஸூர‌த்துல் அன் ஆம்.

Wednesday, June 18, 2014

" உத்தம நபிகளின் உண்மைத் தோழர்கள் "- அபூ ஹஷிமா வேவர்

மகிழ்ச்சியான செய்தி ....இதுதான்

மகிழ்ச்சியான செய்தி ....இதுதான் ...மகள்

வீட்டிலிருந்தே படிக்கும் முடிவை மாற்றி என் வீட்டிலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலவிலிருக்கும் காலேஜில் BBA படிக்க முடிவு செய்து ....................என்னோடு கடந்த 2 நாளைக்கு முன்பு கேட்டுச்சு ...

அத்தா உங்க முடிவு தான் எனக்கு வேணும் என் தோழிகள் யாவரும் காலேஜ் சேர்ந்து விட்டார்கள் ...நானும் படிக்கிறேன்

நான் சொன்னேன் ...எனக்கு அனாவசிய சிந்தனை எப்பவுமே கிடையாதும்மா இன்ஷாஅல்லாஹ் அவனின் நாட்டம் நீ படிக்க வேண்டுமெனயிருக்கும் போல தெரியுது அதன்படியே நடக்கட்டும் ...அவன் நிச்சயம் துணை செய்வான் போயி பிஸ்மில்லாஹ் னு அட்மிஷன் போட்டு வா ம்மானு சொ்ல்லிட்டேன் ....................மனைவி கேட்டார்

வேதனையால் வராத கண்ணீர்கள்

தொலைக் காட்சியில்
ஊடகங்களில்
செய்தித்தாள்களில்
படிக்கும் போது
பார்க்கும் போது
வேதனையால் வராத கண்ணீர்கள்
மன அழுத்தங்கள்
முகநூலில் படிக்கும் போது பார்க்கும் போது வருகின்றது
நாம்

முகநூலில்
ஈடுபட்டிருப்பதால்

உலகில் நடக்கும் கொலைகள் .போர்கள்
குறிப்பாக இப்பொழுது நடந்து கொண்டிருக்கும்
அளுத்கம, பேருவளை - தற்போதைய நிலவரம்
ஈராக் உள்நாட்டுப் போர் 

------------

24 - இஸ்லாமிய அமைப்புகளுக்கும்

தமிழத்தில் உள்ள
24 இஸ்லாமிய கட்சிகளும்
சில நேரங்களில் ஒன்று சேர்கின்றன.

அதாவது...
இஸ்லாமியனையோ/ இஸ்லாத்தையோ
சீண்டும்
ஏதாவது ஒரு திரைப்படத்தை
எப்பவாவது தடைசெய்யனும்
என்கிற கோரிக்கையோடு
நீங்கள் ஒன்று சேர்ந்து
வேகமாக கலாட்டா செய்வது நிஜம்தான்.

Sunday, June 15, 2014

ரமழானிலிருந்து மாறத் தொடங்குவோம்


ரமழானிலிருந்து மாறத் தொடங்குவோம்

இந்த ரமழான் மாதத்தை பயனுள்ள வகையில் நாம் கழித்ததற்கு அடையாளமாகவும் என்றென்றும் இர்ரமழான் நம்முடைய வாழ்வில் நீங்கா இடம்பிடிக்கும் விதமாகவும் ஒருசில நற்செயல்களை நாம் வழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். கீழே ஒருசில இஸ்லாமிய நற்செயல்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவை அனைத்தையும் நாம் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் உண்மையிலேயே நாம் தூய முஸ்லிம்களாக மாறிவிடுவோம் என்பதில் இம்மியளவும் சந்தேகம் இல்லை. அதேசமயம் அவற்றில் மூன்றில் ஒரு பகுதியையாவது நடைமுறைக்கு கொண்டு வந்தே ஆகவேண்டும் என்னும் வைராக்கியத்தோடு முயற்சி செய்ய வேண்டும் என்பதை இங்கே வேண்டுகோளாக இக்கட்டுரை முன் வைக்கின்றது. இவ் வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பொருந்தும்.

1. இஃக்ளாஸ்

எந்த ஒரு செயலைச் செய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்காக செய்யப்பட வேண்டும். கலப்பற்ற எண்ணம் – இஃக்ளாஸ் என இதைத்தான் நாம் அழைக்கிறோம். இஃக்ளாஸின் உயர் படித்தரம் என்னவெனில் இறைவனுக்காக செய்யப்படும் செயல்கள் மட்டுமே நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமிக்க வேண்டும். பிறருக்காகவோ நமக்காகவோ எந்தவொரு செயலையும் நாம் செய்யவே கூடாது.

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்ட வேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளை இடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்” (அல்குர்ஆன் 98-5)

Saturday, June 14, 2014

உனக்குத்தான் முடியலயே ..அந்த நேரத்திலும்

எனக்கு 11 வயது ...அத்தா ரெம்ப கஷ்டமான நோயினால் பாதிக்கப்பட்டு வேலயெதுக்கும் போக முடியாத சிரமமான சூழல் ....அது நோன்பு காலம்

நானும் அக்கா அம்மா முனு பேரும் தான் நோன்பு வைப்போம் அத்தா வைக்க முடியாது உடல் நிலை காரணம் ....ராத்திரி 3.30 மணிக்கு தெரு தெருவாய் தப்ஸ் அடித்துக்கொண்டு பக்கீர்மார்கள் அந்த நேர நாய்களின் சப்தத்துக்கு மத்தியிலும் அத்தனை தெருவுக்கும் போயிட்டு வருவாங்க ...தூங்குவோரை எழுப்பிவிடுவதான் அவர்கள் சேவை ...அப்ப

Thursday, June 12, 2014

ஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் சாதனை - தி இந்து

ஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் சாதனை - தி இந்து

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்காக தேர்வு
எழுதியவர்களில் 1,122 பேர் தேர்வாகியுள்ளனர். இதில், தமிழகத்தில் தமிழக
மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த 109 பேரில், பினோ ஜெபின் என்ற பார்வையற்ற மாணவியும், முகமது அஸ்ரப்
என்ற மாற்றுத் திறனாளி மாணவரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும்
சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
இம்மையத்தைச் சேர்ந்த 46 பேர் இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 http://tamil.thehindu.com/tamilnadu/

17 வயது மாணவர் பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு


சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் 17 வயதில் எம்.சி.ஏ. முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள அறிவாற்றல் மிக்க இளம் மேதாவி மாணவர் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பி. முஹம்மது ஸுஹைல் எம்.டெக்., பி.ஹெச்.டி. ஆய்வுப் படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீண், பி.முஹம்மது ஸுஹைலிடம் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை புதன்கிழமை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அறிவாற்றல் மிக்க மாணவர் பி.முஹம்மது ஸுஹைல் தனித்திறன் மிக்க மாணவராகத் திகழ்கிறார். இவரைப் போன்று இளம் வயதில் பன்முகத்திறன் மிக்க அறிவாற்றல் நிறைந்த மாணவர்கள் உரிய அறிமுகம், அடையாளம், மதிப்பு கிடைக்காமல் உள்ளனர்.

Saturday, June 7, 2014

இறையியல் 'உலமா' பட்டம் பெற்ற அறிஞர்கள்.


இறையியல் 'உலமா' பட்டம் பெற்றதால் மட்டும் மதிக்கப் படுவது கிடையாது

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இறையியல் 'உலமா' பட்டம் (இஸ்லாம் பற்றிய அறிவு) பெற்ற அறிஞர்கள்.

இஸ்லாமிய கல்வி போதிக்கும் பாடசாலைகளில் (மதரஸாக்களில்) மார்க்க அறிவு போதிக்கும் போது மார்க்க முறைப்படி வாழவும் பயிற்சிக்கப் படுகின்றது . சில ஆண்டுகள் கற்ற பின்பு போதிய அளவு மார்க்க அறிவு பெற்ற பின்பு தேர்வு நடத்தி அதில் மதிப்பெண்கள் பெற்ற பின்பு அந்த உலமா' பட்டம் (சனது) கொடுக்கின்றார்கள்.

அப்பட்டம் பெற்றதால் அவர்கள் முழுமையாக இஸ்லாமிய கல்வி பெற்றதாக நினைக்காமல் மேற்கொண்டு இஸ்லாமிய அறிவைப் பெறவும் அதனை ஆய்வு செய்யவும் முற்படுகின்றார்கள் .

நீயோ பாவமன்னிப்பால் எங்களை ரட்சித்தாய் !






இறைவா...
நாங்கள்
பாவங்களால்
உன்னை
அலட்சியம் செய்தோம்
நீயோ
பாவமன்னிப்பால்
எங்களை ரட்சித்தாய் !
நாங்கள் தவறுகள் செய்தோம்
நீ
மன்னித்துக் கொண்டே இருந்தாய் !

ஜும்மா தொழுகைக்கு வந்த (யுவன்) காலிக் மற்றும் ஜெய்

யுவனும் நடிகர் ஜெய்யும் பள்ளிவாசலுக்கு வந்து செல்வதை படம் பிடித்து பேஸ் புக்கில் போடவேண்டுமா என நண்பர்கள் சிலர் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப் போடுவது தப்பில்லை... இந்த காலகட்டத்துக்கு இதுவும் தேவைதான்.

குறைஷிப் படைத் தளபதியான காலித் பின் வலீத் அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தபிறகு பல வெற்றிகளை முஸ்லிம்கள் பெற்றார்கள். மக்களில் சிலர் காலிதின் வீரத்தால் வெற்றி கிடைத்தது என்று பேசிக் கொண்டார்கள்.
இந்த பேச்சு அப்போதைய கலீபா உமர ( ரலி ) அவர்களின் காதில் விழுந்தது. அவர்கள் அல்லாஹ்வின் நாட்டத்தால்தான் வெற்றி கிடைத்தது என்பதை மக்களுக்கு உணர்த்த காலித் பின் வலீதை தளபதி பதவியில் இருந்து திரும்பி அழைத்துக் கொண்டு வேறொரு சாதாரண வீரரை தளபதியாக்கினார்கள்.

உமர் செய்தது சரிதான்.. ஆனால் , இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் உமரையோ அபுஜஹலையோ இஸ்லாத்தில் இணைக்க அல்லாஹ்விடம் அண்ணல் நபிகள் துஆ செய்தார்கள். அல்லாஹ் உமருக்கு அந்த பாக்கியத்தை தந்தான். அப்போது உமர் இஸ்லாத்தில் சேர்ந்தது மக்காவில் பெரிய " பேச்சு " .( talk of the town ) அதுவும் கூட மேலும் பலர் இஸ்லாத்தில் இணைய தூண்டுதலாக இருந்தது.

இஸ்லாம் மாற்றுமக்களை தன்பால் ஈர்ப்பதை மக்களுக்கு சொல்ல வேண்டியது நம் கடமை .
Abu Haashima Vaver

Wednesday, June 4, 2014

ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்…

முஸ்லிம்களுக்கு ஊடகங்கள் வாய்ப்புகளை மறுக்கினறன என்ற ஏக்கம் ஒரு காலத்தில் இருந்தது. அதைத் தீர்க்கும் வகையில்… ஃபேஸ் புக் எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கியது.
முஸ்லிம்கள் அதில் அதிகமாக பங்கேற்றனர். ஆனால் அது சமுதாயத்திற்கு நன்மை தருவதற்கு பதில் தீமைகளையும், ஆபத்துகளையும் உருவாக்கி வருகிறது.

குறிப்பாக, சிலர் தங்களை மாவீரர்களாக காட்டிக் கொள்வதற்கும் ‘அளப்பரிய” சமுதாய உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கும் ஃபேஸ் புக்கை பயன்படுத்துகிறார்கள்.

அனைவரும் கவனிக்கும் பொது தளத்தில் எழுதுகிறோமே… என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் எழுதும் கருத்துக்கள் நடுநிலையாளர்களை முகம் சுழிக்க வைக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails