துபாயில் தரையிரங்கும்போது விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர் காயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
“விமானம் விபத்துகுள்ளாகும் போது பயணிகளை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்ட இளம் தீயணைப்பு வீரர் தனது உயிரை இழந்துள்ளார். அவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்” என துபாய் பிரதமர் முகமது பின் ரஷித் அல் மக்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
பிறர் உயிர் காக்க தன்னுயிர் ஈந்த தலைமகனே பல குடும்பங்கள் தளிர்க்க தன் குடும்பம் மறந்த குலமகனே
அறியாத உன்னை அறிகிறோம் யாவரும் உன் சேவையை பற்றியே பேசுகிறோம் யாவரும்
விமானம் கொண்டது உயிர் பறிக்கும் நெருப்பது உன் மனம் கொண்டது அவ்வுயிர் காக்கும் நெருப்பது ஒரு உயிரா இரு உயிரா இல்லை இல்லை மொத்தம் இருநூற்றியென்பதை தாண்டியது
அவனே பயணங்களை ஏற்படுத்துகிறான் அவன் துணையோடு பயணிக்கிறோம் இடையில் கொள்ளும் இன்னல்களுக்கு அவனே காப்பாளன்
அவன் அனுப்பி நீ வந்தாய் அவன் கட்டளைக்கு அடிபணிந்தாய் ஆபத்து சூழ்ந்த உயிரனைத்தையும் காப்பாற்றி கரைசேர்த்தாய்
இறைவன் உன்னை பொருத்திக்கொள்ளட்டும் சுவர்க்கத்தில் உயர்ந்த இடத்தை தந்து அருள் புரியட்டும்....
No comments:
Post a Comment