Thursday, August 4, 2016

சாப்பிட்ட பின்னர் பல்லுக்குள் உணவுப் பொருள் மாட்டிக் கொண்டால் ...

                                                   படஉதவிsource
பல்லுக்கு இடையே உணவுப் பொருள் மாட்டிக் கொண்டால் அதனை எடுக்க பல் குச்சியினை பயன்படுத்தக் கூடாது -- டாக்டர் சிராஜுதீன்
சாப்பிட்ட பின்னர் பல்லுக்குள் உணவுப் பொருள் மாட்டிக் கொண்டால் அதனை எடுக்க பல்குச்சியினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : டாக்டர் சிராஜுதீன்

டாக்டர் சிராஜுதீன், திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது சார்ஜா ரோலா பகுதியில் உள்ள அல் சுரூக் கிளினிக்கில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த கிளினிக் சார்ஜா ரோலாவில் இருந்து துபாய் செல்லும் சாலையில் ஓரியண்ட் டிராவல்ஸ் மேல் முதல் தளத்தில் அமைந்துள்ளது.

இவர் சென்னை பாரத் பல்கலைக்கழகத்தில் பி.டி.எஸ். பட்டத்தை கடந்த 20009-ஆம் ஆண்டு முடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் சார்ஜாவில் உள்ள மருத்துவ நிலையத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

அவரை முதுகுளத்தூர்.காம் இணையத்தள ஆசிரியர் முதுவை ஹிதாயத் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

பல்லில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க அடிக்கடி டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பல்லில் சொத்தை ஏற்படும் போது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனே டாக்டரிடம் சென்று காண்பிக்க வேண்டும். இல்லையெனில் அந்த பிரச்சனை பெரிதாகி பல்லை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக நேரிடும்.


அமீரகத்தை பொறுத்த வரையில் பல் சிகிச்சைக்கு செலவு அதிகம் என்பதாலும், ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ் வசதி இல்லாத காரணத்தாலும் ஒரு சிலர் டாக்டரிடம் செல்லாமலேயே இருந்து கொள்கின்றனர். இது பல்லுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பால் குடிக்கும் குழந்தைக்கு பால் குடித்தவுடன் சிறிது வெதுவெதுப்பான தண்ணீரை பாட்டில் மூலம் வழங்கினால் பாலின் கறை பல்லில் இல்லாமல் பாதுகாக்கலாம்.

பொதுவாக 9 வயது முதல் 12 வயது பல்லின் தன்மை முறையற்று இருக்கும். இதனால் கவலை கொள்ளத் தேவையில்லை. 13 வயதுக்கு மேற்பட்டவுடன் பல்லை டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பல் விலக்குவதற்கு சாப்ட் எனப்படும் பல் பிரஷை கொண்டு பல் துலக்கினால் போதுமானது. மீடியம் மற்றும் கடினத்தன்மை கொண்ட பல் பிரஷை கொண்டு பல் துலக்க வேண்டும் என அவசியமில்லை.

மேலும் பிரஷில் சிறிய அளவு பற்பசை எடுத்துக் கொண்டால் போதும். பிரஷ் முழுவதும் பற்பசை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இன்று சந்தையில் அதிகமான பற்பசைகள் வந்துள்ளன. பொதுவாக அதிகமான பற்பசைகளில் வேதிப்பொருட்கள் உள்ளன். விலை அதிகமாக இருக்கிறது என்பதற்காக நல்ல பற்பசை என நினைக்க கூடாது. எனவே டாக்டரின் ஆலோசனை பெற்று பற்பசைகளை உபயோகிப்பது நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

காலையில் பல் துலக்கினால் போதும். இரவில் சாப்பிட்ட பின்பு தூங்க செல்லும் முன்னர் பல்லில் உணவுப் பொருட்கள் தேங்கியிருக்காமல் பார்த்துக் கொண்டால் போதுமானது. இரண்டு நேரம் பல் துலக்க வேண்டும் என கட்டாயமில்லை.

சாப்பிட்ட பின்பு பல்லுக்கு இடையே இருக்கும் உணவுப் பொருட்களை எடுக்க பல்குச்சியினை பயன்படுத்த கூடாது. இது சில நேரங்களில் பற்களின் இடையே உள்ள சதையை குத்தி காயத்தை ஏற்படுத்தலாம். எனவே அதற்கென உள்ள உபகரணத்தை பயன்படுத்தியோ அல்லது நூல் போன்ற பொருளை பயன்படுத்தியோ எடுக்கலாம்.

நீரிழிவு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆறு மாதம் ஒன்றுக்கு டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

அதிகமான யோசனை, தூக்கமின்மை, பணிச்சுமை ஆகியவற்றின் காரணமாகவும் பல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

அமீரகத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் சார்ஜாவில் உள்ள மருத்துவ மையத்தில் டாக்டரை சந்தித்து இலவசமாக ஆலோசனை செய்து கொள்ளலாம்.

தொடர்பு எண் : (00971 ) 06 5685 022  /  056 2861120

dr srajudeen <drsrajudeen12@gmail.com>
 from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails