நால்வகை ஹதீதுகள்
ஒரு ஹதீதை ஏற்கலாமா ஏற்கக்கூடாதா என்ற பரிசீலனையில் ஹதீதுகள் இஸ்லாமிய அறிஞர்களால் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
1. ஆதாரப்பூர்வமானவை - ஸஹீஹ்
2. இட்டுக்கட்டப்பட்டது - மவ்ளூவு
3. விடப்படுவதற்கு ஏற்றது - மத்ரூக்
4. பலவீனமானது - ளயீப்
முதல் வகை ஹதீதுகளை மட்டுமே முஸ்லிம்கள் ஏற்று நடக்க வேண்டும். மற்ற மூன்று வகை ஹதீதுகளையும் விட்டுவிடவேண்டும்.
"தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது" என்று முகம்மத் நபி கூறினார் என்பது திர்மிதீயில் உள்ள முதலாவது ஹதீத்.
1. நபிகள் நாயகத்திடமிருந்து நேரடியாக இதைக் கேட்டவர் இப்னு உமர் என்ற நபித்தோழர்.
2. இப்னு உமரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர் முஸ்அப் பின் ஸஃது.
3. முஸ்அப் பின் ஸஃதுவிடமிருந்து கேட்டவர் ஸிமாக்.
4. ஸிமாக் என்பாரிடமிருந்து கேட்டவர்கள் இருவர். 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா
5.1. இஸ்ராயீலிடமிருந்து கேட்டவர் வகீவு
5.2. அபூ அவானாவிடமிருந்து கேட்டவர் குதைபா
6.1. வகீவுவிடமிருந்து கேட்டவர் ஹன்னாத்
6.2. குதைபாவிடமிருந்து கேட்டவர் திர்மிதீ
7. ஹன்னாத்திடமிருந்து கேட்டவர் திர்மிதீ
இந்த அறிவிப்பாளர்களின் சங்கலித் தொடர் ஒரு ஹதீதை ஆதாரப்பூர்வமானது என்று அறிவிக்க அவசியமானது.
இந்தச் சங்கிலித் தொடரில் உள்ளவர்கள் அனைவரும்
1. நம்பமானவர்களாக இருக்க வேண்டும்.
2. உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. நேர்மையில் சந்தேகமற்றவர்களாக இருக்க வேண்டும்
4. அவர்களுக்கு அறிவிப்பவரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இவற்றில் தேரினால்தான் அதை ஆதாரப்பூர்வமான ஹதீதுகள் ஆகும்.
அத்துடன் மிக முக்கியமாக ஹதீதின் கருத்துகள் குர்-ஆனுக்கு முரண்படும் வகையில் இருக்கக் கூடாது.
அப்படி இல்லாமல். ஹதீதின் தரம் தெரியாமலா அந்த ஹதீத் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கின்றது, அவர் பெரும் மேதை, இவர் வரலாற்று ஆசிரியர், இவர்கள் கூறியிருப்பதை ஏற்க முடியாதா? என்றெல்லாம் கூறி தவறான செய்திகளையெல்லாம் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
நான்கு லட்சம் ஹதீதுகளை இமாம் புகாரி திரட்டினார். ஆனால் அவற்றுள் நான்காயிரத்துக்கும் சற்று அதிகமான ஹதிதுகளை மட்டுமே ஏற்கப்பட்டன.
அதாவது ஒரே ஒரு விழுக்காடு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அப்படியானால் எந்த அளவுக்குத் தீயவர்கள் ஹதீதுகளில் கலப்படம் செய்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்க்கலாம்.
இமாம் புகாரியைப் பொருத்தவரை தான் தொகுத்தவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை ஆதாரப் பூர்வமானவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவை என்ற கருத்தையே கொண்டிருந்தார்.
தவறான ஹதீதை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விசயம் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
அதுபோலவே, ஆதாரப்பூர்வமானவை என்று அறிவிக்கப்பட்ட ஹதீதுகள் கால ஓட்டத்தில் நம்பகத்தன்மை இல்லாதவை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.
அதற்கான முக்கிய அளவுகோள் குர்-ஆனோடு ஒப்பிட்டு அதன் கருத்துக்களை நோக்குவதுதான்.
குர்-ஆனோடு எந்த வகையில் முரண்பட்டாலும் அவற்றை மறுதளிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமினுடைய கடமை.
குர்-ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீதுகள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹதீதுகள் விடயத்தில் மெளனம் காத்து விட வேண்டும்.
ஹதீதுகள் முக்கியம் என்று குர்-ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.
http://anbudanbuhari.blogspot.in
No comments:
Post a Comment