Thursday, August 25, 2016

ஸ்காட்லாண்ட் காவல்துறையின் அங்கீகரிக்கப்பட்ட சீருடையில் ஒன்றாக “ஹிஜாப்” அறிவிப்பு!

By Abdul Gafoor

லண்டன்.

25.08.2016.

ஸ்காட்லாண்ட் நாட்டின் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட சீருடையில் ஒன்றாக ஹிஜாப் உள்ளதாக அந்நாட்டின் காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறையில் பணி புரியும் பெண்கள் ஹிஜாப் அணிந்து வேலைக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஹிஜாபை ஒரு சீருடையாக அறிவித்துள்ளது ஸ்காட்லாண்ட் காவல்துறை.

இது குறித்து ஸ்காட்லாண்ட் காவல்துறையின் தலைமை அதிகாரி பில் கோர்ம்லி கூறுகையில், “எங்கள் காவல்துறையால் ஹிஜாப் ஒரு சீருடையாக அறிவிப்பதை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். முஸ்லீம் மற்றும் அனைத்து மதத்தினரின் பங்கு ஸ்காட்லாண்ட் காவல்துறைக்கு மிகவும் அவசியம். மக்களுக்காக சேவை செய்யவதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கு கொள்ள வேண்டும். எங்களுடைய காவல்துறைக்கு முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


கடந்த ஆண்டு வரை ஸ்காட்லாண்ட் காவல்துறையில் முஸ்லீம்களின் பங்கு 2.6%-மாக இருந்ததை இந்த ஆண்டு 4%-க்கு அதிகரிக்க போவதாக அந்நாட்டு காவலதுறை கூறியுள்ளது. ஸ்காட்லாண்ட் காவல்துறையின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி கடந்த ஜீன் மாதம் வரை 17,242 காவல்கதுறையினர் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source:thoothuonline.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails