Monday, December 31, 2012

“கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)”

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான “தி கார்டியன் (The Guardian)”, இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது. “கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள்.
இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு…

“கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவதென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு.

என்னுடைய வாழ்வில், நான் ஹீரோக்களாக காணும் மால்கம் எக்ஸ், முஹம்மது அலி, பிரின்ஸ் பஸ்டர் என்று மூவருமே இஸ்லாத்தை தழுவியவர்கள். இவர்களை எந்த வகையில் இஸ்லாம் கவர்ந்தது?, அது அவர்களது வாழ்வில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியது? என்பதை அறிய விருப்பம்.

Sunday, December 30, 2012

கலாச்சாரம் என்ற போர்வையில்...

நபியே!) உம்முடைய மனைவிகளுக்கும், உமது பெண் மக்களுக்கும் மூமின்களின் பெண்களுக்கும், அவர்கள் தலை முந்தானைகளை இறக்கிக் கொள் ளும்படியும் நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாமல் இருக்க இது எளிய வழியாகும். அல்லாஹ் மன்னிப்பவன் கருணையாளன் ஆவான். -அல்குர்ஆன் 33:59

மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
(அல்குர்ஆன் 24:31)

(நபியே!) மூமினான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத் தலங்களை (கற்பை) பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு மிக பரிசுத்தமான செயலாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை அறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 24:30)

கலாச்சாரம் என்ற போர்வையில் கண்டபடி வாழ்ந்து வாழ்வை நாசமாக்கிக் கொள்ளாமல் அடக்க ஒடுக்கத்துடன்,மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுத்து மற்றவர்களின் இச்சையை தூண்ட வாழாமல் நெறியுடன்     வாழ்ந்து இறையன்பைப் பெறுவோமாக.
-----------------------------------------------------------------------------

Thursday, December 27, 2012

என்னால் மாத்திரம் முடியாது!உங்களாளும் முடியாது! ஆனால் நம்மால் முடியும்

அஸ்ஸலாமு அலைக்கும்(வறஹ்)
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!!
நவீன உலகில் வசதிவாய்ப்புக்கள் அதிகரித்தும்.தொடர்பாடல்கள் விரிவாகியும்.மனித நடத்தைகள் ஆடம்பரமகியும் காணப்படும் இந்த காலகட்டத்தில் இஸ்லாமும்.இஸ்லாமியமும் நிலை தடுமாறுவதை பல சந்தர்பங்களில் கான்கின்றோம்..குறிப்பாக சொல்லப்போனால் நாம் எந்நேரமும் பயன்படுத்தும் முகநூல்(facebook),.இணையதளம்,.மின்னஞ்சல்,.தொலைபேசி,.பொன்ற பலவற்றை சொல்லிக்கொன்டே..போகலாம்…இவை அனைதும் ஷைத்தான் என்றாலும் பரவாயில்லை..இதை நாம் ஏன் இஸ்லாத்திற்கு சாதகமாக பயன்படுத்த முடியாது.?இந்த விழிப்புனர்வை நமது சகோதரர்கள் மத்தியில் கொன்டுசெல்ல வேன்டும்..அப்படியாயின் என்னால் மாத்திரம் முடியாது!உங்களாளும் முடியாது! ஆனால் நம்மால் முடியும்…நாம் ஒன்றுசேரவேண்டும்.. இதற்காக நம்மால் உருவாக்கப்பட்டதே’முஹாஸபா அமைப்பு’

ஏதேதோ எழுத எண்ணி..!

உன்னப்பத்தி ஏதேதோ
எழுத எண்ணி ஒரு
வார்த்த சிக்காம ஒரு
வழியா எழுதப்போறேன்

ஓங்கி வளந்த மரமொன்னு
ஒருவழியும் புரியாம ஒத்தையில
நிக்கயில நட்பொன்ன தூக்கிட்டு
வழி காட்ட வந்தவளே

வந்தவழி போனவழி
யெல்லாம் முல்லு வழி
ஒத்தவழி காட்டிபுட்ட - அதுவும்
பட்டு விரிச்சப் புல்லுவெளி

Wednesday, December 26, 2012

அமீரகத்தில் மழையாமே!

திருட வருவதுபோல் -  வானம்
இருள வந்தது மழை
விடிந்து வருவதற்குள்
முடிந்து போனது

பெய்த மழையை அளவிட
மழைமானி தேவையில்லை
விழுந்த துளிகளை
எடுத்து
எண்ணியே சொல்லிவிடலாம்
இத்தனை மழையென்று

இருப்பினும்

இந்தியாவில் இஸ்லாம் - (பகுதி 1)

 எழுதியவர் தோப்பில் முஹம்மது மீரான்

இந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.

இதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.

தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.

ஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.

Sunday, December 23, 2012

குடியிருப்பவர் அடையாள அட்டை குறித்து விவரனமான தகவல்கள்

குடியிருப்பவர் அடையாள அட்டை !
அடையாள அட்டை என்றால் என்ன ?
குடியிருப்பவர் அடையாள அட்டை தேசிய மக்கள் தொகையைப் பதிவேட்டிலிருந்து பெறப்படுகிறது. கடலோர கிராமங்களில் தொடக்கி உருவாக்கப்பட்டு வரும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நாட்டில் உள்ள அனைத்து வழக்கமாக வசிக்கும் நபர்களுக்கான ஒரு பதிவேடு ஆகும். இதில் ஒவ்வொரு வழக்கமாக வசிக்கும் நபருக்கும் ஒரு அடையாள எண் இருக்கும். இவ்வடையாள அட்டை, அடையாள எண்ணைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் தனிநபர் விவரங்களையும் கொண்டிருக்கும். நீங்கள் இந்தியாவில் வழக்கமாக வசிப்பவர்தான் என்ற அடையாள ஆவணத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

Saturday, December 22, 2012

மக்கா ஹரம் ஷரிப் தளம் விரிவாக்கம் Makkah Haram Mataaf extension


காபாவில் கழற்றி மாட்டக்கூடிய வகையில் அமையவிருக்கும் புதிய பாலம்.

Friday, December 21, 2012

முஸ்லிம்பெண்மணி- குழந்தை வளர்ப்பு ஒரு இஸ்லாமிய பார்வை

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்….

நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்… அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள மனைவியை…..

பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும் மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில் தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.

குழந்தை வளர்ப்புன்னு சொல்லிட்டு வாழ்க்கைத்துணையை பற்றி ஏன் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்! குழந்தை வளர்ப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கை துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது…..
இன்னும் நாம் அனைவரும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் இந்த து ஆ வை அதிகமாக ஒவ்வொரு தொழுகையிலும்
கேட்க வேண்டும்….

    எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!
    இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74


Thursday, December 20, 2012

யார் காஃபிர்.. (இறை மறுப்பாளர்)


ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமைப் பார்த்து காஃபிர் (இறை மறுப்பாளர்) என்று ஃபத்வா (தீர்ப்பு) கூறுவதே தவறு.
மௌலானா ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா உரை
தலைப்பு : யார் காஃபிர்..

Tuesday, December 18, 2012

What a Meticulous Planning & Timing


Meticulous Planning & Timing saves a Plane with Landing Gear failure

Sunday, December 16, 2012

ஸஃபர் மாதம் – பீடை மாதமா?

எழுதியவர் :அபூ ரம்லா.
மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.

அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?

அப்படி அந்த நாள், அந்த மாதம் பீடை மாதம் என்றிருக்குமேயானால் யாருக்கும் எந்த நலனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை. திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாது நிறுத்தும் அந்த முஸ்லிம்களின் குடும்பத்தில் குறிப்பிட்ட அந்த மாதத்தில் குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது தள்ளித்தான் போட முடியுமா? அப்படியே பிறந்து விட்டால் அந்த குழந்தை பீடை மாதத்தில் பிறந்துள்ளது என்பதற்காக நிராகரித்து விடுவார்களா? அல்லது ஓரந்தான் கட்டுவார்களா?

நல்ல(!) நேரம்

மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.

உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.

ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், "காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?" என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.

Saturday, December 15, 2012

சங்க நடவடிக்கையில் உன் பங்கு என்ன தம்பி?

                                                   நீடூர் ஏ. எம். சயீத், பி.ஏ.,பி.எல்.


அன்புள்ள தம்பிக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்.  இறைவன் அருளால் நலம்; ; நலமறிய ஆவல்.

    சென்ற கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த அன்பு வேண்டுகோளின்படி நீயும் உனது நண்பர்களும் உற்சாகமுடன் மீலாத்விழா வெகு சிறப்பான முறையில் கொண்டாடியது அறிந்து மகிழ்ந்தேன் ஒரு சில தவிர்க்க முடியாத வேலைகளின் காரணமாக அப்புனித விழாவில் நான் பங்கு பெறும் பேறு கிடைக்காமல் போய்விட்டது.  இது போன்ற இஸ்லாமியத் திருநாட்களில் நீங்கள் விழா நடத்தும் போது உங்களில் பலர் மேடையேறிப் பேசுவது மிக சிறப்பாக இருக்கும்.

    இஸ்லாத்தைப் பற்றி, அப்புனித மதத்தின் தீர்க்கதரிசி முஹம்மது நபி அவர்களைப் பற்றி, பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனும் திறம் பெற்றிருக்க வேண்டும்.  மற்ற மத நண்பர்களோ நம் மதத்திலேயே நமது நாகரிகம், கலை, பண்பாடு முதலியவற்றை அறியாத பாமர மக்களோ நம்மிடம் விளக்கம் கேட்கும் போது கொஞ்சமும் தயங்காது விரிவுரை தருவதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.  இதற்குப்பல வழிகள் இருக்கின்றன.

    பொதுவாக ஒவ்டிவாரு முஸ்லிம் கிராமத்திலும் சங்கங்கள் இயங்கிவருகின்றன.  திருமண வைபவங்களில் கலந்து பணியாற்றுவதையே பிரதானக் கடமையாக அவைகள் கருதுகின்றன.  அப்படி இல்லாது இன்னும் பல பணிகளில் அவைகள் ஈடுபட வேண்டும்.

    ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பொருள் பற்றி அங்கத்தினர்களிடையே கருத்தரங்கு, விவாதம், பேச்சு முதலியவை நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்.  பெரிய மனிதர்களை அழைத்து பார்வையாளர்களாக இருக்கச் செய்ய வேண்டும்.  இஸ்லாமியக் கருத்துக்களைப் பின்னணியாக வைத்து பலவித எழுத்தோவியங்கள் அங்கத்தினர்கள் எழுதி மாதம் ஒரு முறை கையெழுத்துப் பத்திரிக்கை கொண்டு வரவேண்டும்.  வருடத்திற்கு ஒரு சிறப்பு மலர் உருவாக்கி அதை அச்சிலேற்றி விநியோகிக்க வேண்டும்.

    மனிதன் எதையும் தானாக செய்வதில்லை.  ஏதாவது ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அந்தச் செயலில் ஈடுபடுகிறான்.  இளம் வயதிலிருந்து அவனுக்கு அந்தப் பழக்கம் பதிந்துவிடுகிறது.  பள்ளியில் இருக்கும் மாணவன் கல்வி தனது கடமை என்று புத்தகங்களை ஊன்றிப் படிப்பதில்லை.  பரீட்சை என்று வந்த பிறகே அதில் வெற்றி பெறுவதற்காக இரவும் பகலுமாக கடைசி நேரத்தில் உட்கார்ந்து படிக்கிறான்.
    குடும்பச் செலவுகள் அதிகமாக அதிகமாகத்தான் பணத்தின் தேவையை உணர்ந்து அதை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்று பாடுபடுகிறான்.  வருமானத்துக்குத் தகுந்த செலவு என்பதை விட, செலவுக்குத் தகுந்த வருமானம் வேண்டும் என்று தன் முயற்சியில் ஈடுபடுகிறான்.

    இன்று நமது சமுதாயத்தில் நம் மதத்தைப்பற்றி ஒன்றும் அறியாத இளைஞர் பலர் உண்டு.  நவீனக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தும் அவர்கள் ஓய்வு நேரத்தில் மத இலக்கியங்களைப் படித்து பார்க்க ஞானம் பெறுவது தலையாய கடமை என்பதை உணராதிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

    நான் சொன்ன திட்டப்படி இளைஞர்கள் இஸ்லாபமியக் கருத்துக்கள் பற்றி பேச்சு மேடையும் எழுதுதற்கு நிர்ப்பந்தத்தையும் அமைத்துக் கொண்டால் எப்படியாவது மல மத இலக்கியங்களைப் படித்தாக வேண்டும்,  படித்தவைகளிலிருந்து குறிப்புகள் எடுக்க வேண்டும், மார்க்க அறிஞர்களின் கூட்டுறவு பெற்று விளக்கங்கள் பல அறிய வேண்டும் என்பன போன்ற வாய்ப்புக்கள் ஏற்படும்.  அதற்காகத்தான் இத்தகைய காரியங்களில் உங்கள் சங்க அங்கத்தினர்கள் ஈடுபட வேண்டுகிறேன்.

    பொருளாதாரம் என்பது முதுகெலும்பு.  அது இல்லாமல் எந்த இயக்கமும் ஏறுநடைபோட முடியாது.

    கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் இன்னும் பல அநாவசியச் செலவுகளுக்கும் எவ்வளவோ பொருளை பாழ்படுத்தும் நாம் நல்ல காரியங்களுக்காக நன்கொளை அளிப்பதற்குத் தயங்குகிறோம்.  அப்படி இல்லாது நல்லவகையில் தம்மால் இயன்ற பொருளுதவி செய்து, இதுபோன்ற நடவடிக்கைகள் சிறப்புற அமைய உதவமுன் வரவேண்டும்.

    படிக்க முடியாத ஏழை மாணவர்கள் பலர் இருக்கலாம்.  ஆவர்களில் திறமையான மாணவர்கள் மேல்படிப்பிற்குச் செல்ல உங்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வேலை கிடைக்காமல் எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கையில் தோல்வி மனப்பான்மையுடன் திரிவதை நாம் காண்கிறோம்.  அவர்களுக்குத் தேடித்தர உங்கள் ஸ்தாபனம் ஈடுபட வேண்டும்.

    ஒவ்வொரு கிராமத்தினரும் அந்தந்த ஊர் பிரச்சினைகளைத் தாங்களே தீர்வுகாண்பார்களேயானால் எங்கும் சுபிட்சமும் சாந் மும்நிலவும்.  அதே போன்று மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்கின்ற ஒருவன், தன்கடமையினைச் செவ்வனே செய்ய வேண்டும், மற்றவர்கள் அன்பையும் அனுதாபத்தையும் பெறும் அளவுக்கு தனது திறமையையும், பண்பையும் அதை;துக் கொண்டால் தர்ம சிந்தை மற்றவர்களிடம் தானகப் பிறக்கும்.  ஊர் மக்கள் அனைவரும் சகோதர மனப்பான் நோக்குடன். ஒருவர்க்கொருவர் உதவிக் கொண்டு ஊர் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டுமானால் எல்லோரும் தொண்டு செய்யும் பெரு நோக்கு கொள்ள வேண்டும்.

    சிறுவர்கள் பலர் தீய பழக்கங்கள் மேற்கொண்டு திரிவதைக் கண்டு அவர்களைத் திருத்த முடியாது கண்ணீர் வடிக்கும் பரிதாபமான பெற்றோரை நாம் சந்திக்கிறோம்.

    மனிதன் பிறக்கும்போது பத்தரை மாற்றுத் தங்கமாகத்தான் இருக்கிறான்.  சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தான் அவனைத் தீய வழிகளில் ஈடுபடுத்தி விடுகின்றன.  அவன் தீயவழிக்குச் சென்ற சூழ்நிலையை ஆராய்ந்து மற்ற சிறுவர்கள் அதற்குப் பலியாகாமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.  ‘நான் என்ன சொல்லியும் கண்டித்தும் அவன் திருந்தவில்லை’ என்று சொல்லித் தோல்வியைக் காணபிப்பதைவிட, “அவனை எப்படியும் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவருவதே என் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கும்” என்று சொல்லுவதுதான் இஸ்லாhமியச் சகோதரனின் சூளுரையாக அமையவேண்டும்.

    இந்தச் சங்கத்தில் அங்கத்தினனாக இருப்பதே அவமானம் என்று சொல்லும்படி பல சங்கங்கள் இயங்கி வருகின்றன.  இந்தச் சங்கத்தில் அங்கத்தினனாகச் சேர்வதே மிகக்கடினம், சேர்ந்து விட்டால் மிகப் பெரும்கவுரவம் இருக்கும் என்னும் அளவுக்கு நமது சங்க நடவடிக்கைகள் ஆக்க வேலைகளில் ஈடுபடவேண்டும்.

    நன்கு உருவான பிறகு மற்ற ஊர்ச்சங்கத்தினரைப் பேச்சரங்குகளுக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் அழைத்து, பங்கு பெறச் செய்யலாம்.  இவையெல்லாம் பொழுதுபோக்கு என்று கருதுவதைவிட நமது உரிமையும் கடமையும் அதிலே பிணைந்து கிடக்கின்றன என்பதை நாம் உணர்ந்தால் நமக்கு வெற்றி வெகுதூரமில்லை.  வாழ்த்துக்கள்.

அன்பு அண்ணன்
‘சயீத்’
சென்னை – 1.

முஸ்லீம்கள் அறியவேண்டிய முக்கிய சில விளக்கங்கள்


முஸ்லீம்கள் அறியவேண்டிய முக்கிய சில விளக்கங்கள்
அல் ஹாபிழ் மௌலவி எஸ். சுஹ்பத் அலி மிஸ்பாஹி
பேராசிரியர் - அல் பத்ரியா அரபுக்கல்லூரி – கறம்பக்குடி – புதுக்கோட்டை
முன்னாள் பேராசிரியர் - திவுரும்பொல ஜாமிஆ மனாருல் ஹ{தா

    ஈமான் என்றால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை எவ்வித திருத்தமும் மாற்றமுமின்றி உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிவதற்கு ஈமான் என்று கூறப்படும்.

இஸ்லாம்

முஸ்லிம் என்றால் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதுடன் அவனால் தடுக்கப்பட்டவர்களைத் தவிர்ந்து கொள்பவருக்கு முஸ்லிம் என்று சொல்லப்படும்.  எனவே ஒரு முஸ்லிம் இறைவனின் சட்டதிட்டங்களை நிலைமைக்கேற்ப அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.  உதாரணமாகத் திருமணம் செய்ய நாடுபவன் திருமணத்தின் சட்டங்களையும் அதே போல ஒரு வியாபாதி இஸ்லாமிய வியாபாரச் சட்டங்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.  அதன் அடிப்படையில் அறிய வேண்டிய அவசியச் சட்டங்கள் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை நான் தொகுத்துள்ளேன்.  அப்புத்தகத்தின் ஒரு சில கருத்துகளையே இங்கு கட்டுரையாக தொகுத்து வழங்குகிறேன்.

மாந்திரீகம்
சிலை பூஜை மற்றும் இணை வைக்கும் வார்த்தைகளைக் கொண்டு மந்திரிப்பவரிடம் சென்று தாயத்துப் போடுவது செய்வினை போன்ற எக்காரியங்களுக்காகவும் அவர்களிடம் செல்வது கூடாது.  ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் ஏகத்துவக் கொள்கைக்கு மாற்றமான இணை வைக்கும் வார்த்தைகளைக் கூறி மந்திரிக்கிறார்கள்.  சில காரியங்கள் பயனளித்து விடுவது எதார்த்தத்தில் அமைந்ததாகும்.  இதுவே அவர்கள் செய்யும் காரியம் சரியானது என்பதற்கு ஆதாரமாகாது.

ஜோசியம் பார்க்கலாமா?

குறிகாரன் ஜோசியக்காரன் போன்றவர்களிடம் செல்வதும் குற்றமாகும்.  மேலும் அவர்களின் கருத்தை நம்புவது பெரும் பாவமாகும்.  யுhர் குறிகாரனிடம் சென்று அவர் கூறும் சொல்லை நம்பினாரோ அவரின் நாற்பது நாட்கள் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று ஒரு நபி மொழி  முஸ்லிம் என்ற நூலில் வந்துள்ளது.

‘யார் ஜோசியக்காரனிடம் சென்று அவர் கூறுவதை நம்பினாரோ அவர், முஹம்மது நபியின் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தை விட்டும் நீங்கிவிட்டார்.”     (நபி மொழி: நூல் : முஸ்லிம்)

அதிர்ஷ்டக்கல் மோதிரம்
மோதிரங்களி;ல் பதிக்கப்படும் அதிசயக் கல், ஜாதிக் கல் போன்ற உயர்ரகக் கற்களுக்கு மனித வாழ்க்கையில் நன்மை தீமை மற்றும் அந்தஸ்தை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கின்ற சக்தி உள்ளதா? ஆதை நம்பலாமா? என்றால் கற்கள் மூலமாக பிரதிபலிப்புகள் ஏற்படுகின்றன என்பதெல்லாம் இணை வைப்போரின் கொள்கையாகும்.  அதை முஸ்லிம்கள் நம்புவது கூடாது.  மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகள் அனைத்தும் இறைவனால் ஏற்படுகின்றன, என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும்.  அனைத்துக் காரியங்களும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்டு விட்டன.

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுதல் நட்சத்திரங்களின் மூலம் ஃபால் பார்ப்பதை இஸ்லாம் தடுக்கிறது.  மேலும் வெளிச்சம் காற்றோட்டம் கிடைக்கும் படியான வீடுகளை இன்ஜீனியரின் ஆலோசனைப்படி கட்டலாம், அதுவே சிறந்ததுமாகும். வாஸ்து பார்ப்பது, ஃபால் பார்ப்பது, போன்றவை அந்நியரின் மூடு நம்பிக்கையாகும்.  ஹதீஸ்களில் அவற்றைக் கண்டித்துக் கடுமையான பல எச்சரிக்கைகள் வந்துள்ளதால் இவைகளை நம்புவது பெரும் குற்றமாகும்.

ஸஃபர் பீடை மாதமா?

ஸபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதித் திருமணம் போன்ற சுப காரியங்களைத் தாமதப்படுத்தக் கூடாது.  ஏனென்றால் “ஸபருல் முளஃப்பர்”, “ஸபருல் கைர்” (வெற்றியின் மாதம், நன்மையின் மாதம்) என்பதே ஸபர் மாதத்தின் முழுப் பெயராகும்.  இஸ்லாமிய வரலாற்றில் பல வெற்றிகள் இம்மாதத்திலேயே கிடைத்திருக்கின்றன.  எனவே ஸஃபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதுவது சரியல்ல.  அவ்வாறு கருதுவது அறியாமைக் கால மூட நம்பிக்கையாகும்.  “தொற்று நோய், பறவை ஜோசியம், ஸபர் (பீடை) ஆகியன இஸ்லாத்தில் கிடையாது.” (நபி மொழி: நூல் புகாரீ)



மனிதருள் மாணிக்கம்’

(படத்தில் - லால்பேட்டை மர்ஹூம் ந.ப. முகம்மது இப்ராஹீம் ஹஜ்ரத் முன்னாள் நீடூர் -நெய்வாசல் மிஸ்பாகுல் ஹுதா முதல்வர் மற்றும் மர்ஹூம் சல்லல்லாஹ் பாவா அவர்கள்)
இருவரும் எங்கள் தந்தைக்கு மிகவும் வேண்டியவர்கள் . எங்கள் தந்தை Hajee.S.E.Abdul Kader sahib அவர்கள் இறந்த செய்தி கேள்விப்பட்டு வந்த சல்லல்லாஹ் பாவா உடல் நலம் குன்றி ஒரு மாதம் சென்ற பின் அவர்களும் எங்கள் ஊரிலேயே இறந்து விட்டார்கள்

இறைவன் படைப்பினில் மனிதன் சிறப்புள்ளவன்.  அத்தகைய மனிதரில் ஒரு சிலரே மாணிக்கங்களாகத் திகழ்கின்றனர்.  இறைவனடி எய்திய நாஜிர் N.P.முகம்மது இப்ராகிம் ஹஜ்ரத் . அவர்கள் அப்படியொரு மாணிக்கமாகத் திகழ்ந்தவர்கள்.  இஸ்லாமிய உலகம் மறக்க முடியாத மாபெரும் மேதைகளில் ஒருவராக அவர்களைப் போற்றினாலும் மிகையாகாது.  அந்த அளவுக்கு தன்னலத்தைத் துறந்து மார்க்கக் கல்விக்காக அல்லும் பகலும் பாடுபட்டிருக்கிறார்கள்.

எங்கள் குடும்பத்துக்கு அவர்கள் மிகவும் பழக்கமுண்டு.  ‘பாவா, பாவா’ என்று தான் எங்கள் வீட்டு குழந்தைகள் அவர்களைப் பிரியமுடன் அழைப்பார்கள்.  எங்கள் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவராகவே அவர்களை நாங்கள் மதித்தோம்.  ஆதனால் தான் அவர்களுடைய சிறப்புக்களை, மற்றவர்களைவிட அதிகமாக அறியும் வாய்ப்பு எங்களுக்கு உண்டு.

தலைவலி, சாதாரண ஜுரம் ஆகியவற்றுக்கெல்லாம் நாங்கள் பாதிக்கப்படும் போது டாக்டர்களை நாங்கள் நாடுவதே இல்லை.  ஹஜ்ரத்தின் உதவியையே நாடுவோம்.   அவர்கள் தரும் நாட்டு மருந்தினால் விரைவில் குணமடைவோம்.  அத்தனை வலிமை அந்த மருந்திற்கு உண்டு.

உறவினர்களும் தனக்கென ஒரு குடும்பமும் இருந்துங்கூட தாம் வசித்து வந்த இல்லத்தை அரபிக் கல்லூரிக்கு தானம் செய்துவிட்ட அந்த வள்ளல், உயிர் பிரியும் வரை மத்ரசாவின் முன்னேற்றத்தைப்பற்றியே எண்ணத்தைச் சுழலவிட்டுக்கொண்டிருந்து அந்த மேதை, எந்நாளும் நம் இதயத்தில் இருப்பார்கள்.

நற்குணங்களுடன் கூடிய உழைப்பு, புத்தி பூர்வமான செயல் நேர்த்தி, உண்மையைக் கடைபிடிப்பது, அன்பைப் பெருக்குவது, வஞ்சனையற்ற உழைப்பைத் தருவது, கஷ்டப்படுபோரின் துயரைத்துடைக்க முயற்சிப்பது, நேர்மைத்திறனுடன் எல்லா சந்தர்ப்பங்களிலும் நடந்து கொள்வது, ஆண்டவனிடம் உறுதியான நம்பி;க்கைகொண்டு அச்சம் தவிர்ப்பது, “மத்ரசா நலனே பிரதானம்” என்ற கொள்கையுடன் நாஜீரு; வேலை ஆற்றியது - இத்தனை பண்புகளும் நிறைந்திருந்த நாஜிரின் வாழ்க்கை நீடூர் மத்ரசாவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.

 
ஆக்கம் : மர்ஹூம் நீடூர் ஏ. முஹம்முது சயீது பி.ஏ.,பி.எல்.

‘இலட்சியப் பெண்’

 அன்புகெழுமிய தோழி தில்ஷாத்திற்கு ரமீஜா வரைவது.  ஆண்டவன் உனக்கு சாந்தியும், சமாதானமும் தந்தருள்வானாக!
 திருமணத்திற்கு முன் நாம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது, நாம் இருவரும் திருமணமாகி கணவர் இல்லம் சென்று விட்டோம்.  பல மைல்களுக்கப்பால் பிரிந்து வாழும் நாம் பல வருஷங்களாக சந்திக்க முடியாமல் போயிற்று.  நாம் நேரில் தான் சந்தித்து அளவளா இயலாவிட்டாலும் கடிதத்தொடர்பு மூலமாவது நம் நட்பை வளர்த்துக் கொண்டிருக்கலாமல்லவா! தன் மனத்தின் மகிழ்ச்சியையோ அல்லது துக்கத்தையோ உற்ற தோழியிடம் சொன்னால் தான் மனம் அமைதியடையும்.  நான் உன் முகவரியை அடையமுடியவில்லை.  அடிக்கடி அலுவலக மாற்றலின் காரணமாக நம்மைப் போன்ற குடும்பத்தினர் வாழ்வு, புகைவண்டி பிரயாணம் போல் இருக்கிறது.  இருவருக்கும் கடிதத் தொடர்பு தொடர்ந்து நடக்கத்தான் நான் இதை எழுதுகிறேன்.

”நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?”

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ”நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.

(பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ”உனக்கு போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ”அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை.

மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தன் தோளை விளையாட்டை பார்க்கும் சாதனமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள்.

இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.கணவன் – மனைவி, இல்லறம் இனிக்க …

Friday, December 14, 2012

இறைவா! என்னை மன்னிப்பாய்!

ஆளோ அவளோ ஒருசிறுமி
அன்று பார்த்தேன் பயணத்தில்
நீளும் விழிகள் சிரித்திருக்கும்
நீண்ட கூந்தல் தங்கநிறம்
மாலைப் பரிதி போன்றிருக்கும்
மனதைத் தீண்டும் வண்ணமவள்
கோல மயில்போல் மகளெனக்கு
கொடுப்பாய் இறைவா என்றிறைஞ்ச
-
இறங்கிச் செல்ல எழுந்தவளும்
எடுத்தாள் செயற்கைக் கால்களையே
பறங்கிப் பூவைப் போன்றமகள்
பாவம் கால்கள் இல்லாமல்!
கிறங்கிப் போனேன் புலம்பிவிட்டேன்
கால்கள் உண்டே நான்செல்ல!
இரக்கப் பார்வை எனக்குள்ளே
இறைவா! என்னை மன்னிப்பாய்!
-
கால்கள் கண்கள் செவிப்புலனும்
கருணை இறைவன் கொடையன்றோ
நாள்கள் ஓடும் காலத்தில்
நன்றி மறத்தல் முறையாமோ?
-

Thursday, December 13, 2012

ஜப்பானில் இஸ்லாம் வளர்ச்சி - உமர் மிடா - திருக்குர்ஆன் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


                                                                         Haji Umar Mita

ஜப்பானிய இஸ்லாமிய வரலாற்றுப் பதிவேடுகளில் காணப்படும் மிகச்சிறந்த பெயர்தான்  உமர் மிடா.ஜப்பானிய முஸ்லிம்களின் பெருமை என அழைக்க எல்லாவிதத்திலும் தகுதியுடையவரே இவர்.

இஸ்லாம் ஆரம்ப நூற்றாண்டுகளிலே சீனாவில் பல இடங்களில் பரவிவிட்டது.அதன் பின்பு இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் இஸ்லாம் அறிமுகமானது.ஆனால் இஸ்லாத்தின் வடக்கு நோக்கிய பயணம் 15 நூற்றாண்டில் பிலிப்பைன்சை ஆக்கிரமித்திருந்த ஸ்பானிய குடியேற்றத்தால் தடுக்கப்பட்டது.பிலிப்பைன்சுக்கு அடுத்ததாக ஜப்பான் ஒரு பௌத்த நாடாக
இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஒரு சில முஸ்லிம்கள் ஜப்பானில் வாழ்ந்தாலும் முஸ்லிம்களின் குறிப்பிட்டுக் கூறக்கூடிய குடியேற்றம் பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பகுதியிலேயே இடம்பெற்றது.பிரித்தானிய மற்றும் டச்சு போர்க்கப்பல்களில் பணி புரிந்த மலே இன மக்களே ஜப்பானின் முதல் முஸ்லிம் குடியேற்றவாசிகள்.மலே இனத்தவர்களின் முதல் குடியேற்றம் இடம்பெற முன் 1890 இல் உஸ்மானிய கிலாபத்தின் போர்க் கப்பல் ஒன்று ஜப்பானுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் நோக்கில் வந்தது."எர்துக்ருள்" என்று அழைக்கப்படும் இக்கப்பல் தனது பயணத்தின் நோக்கத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்டு தனது தாய் நாட்டுக்கு 609 பேருடன்  திரும்பிக் கொண்டிருந்த வேளையில் 1890 செப்டெம்பர் மாதம் 540 பேருடன் கடலில் மூழ்கியது.

கொடாறு யமாகோ என்பவரே ஜப்பானிலிருந்து முதன் முதலாக ஹஜ்ஜை நிறைவேற்ற சென்றவர்.1909 மும்பையில் வைத்து ரஷ்ய எழுத்தாளரான அப்துர் ராஷித்  இப்ராஹீம் எம்பவர் மூலம் இஸ்லாத்தை அறிந்து கொண்ட கொடாறு யமாகோ இஸ்லாத்தை தழுவினார்.பின்னர் அவர் தனது பெயரை உமர் யமாகோ என்று மாற்றிக்கொண்டார்.உஸ்மானிய கிலாபத்தின் இறுதி கலிபாவான அப்துல் ஹமீது II இடம் டோக்கியோ நகரில் பள்ளிவாசல் ஒன்று கட்ட அனுமதி கேட்ட உமர் யமாகோ, அதற்கு கலிபாவின் அனுமதி கிடைக்க 1938 இல் பள்ளிவாசலை கட்டிமுடித்தார்.

Monday, December 10, 2012

தொழுகை ஓதுதலை ஒலிபரப்ப வேண்டாம்!

பள்ளிவாசலில் தொழுவதை வெளி மைக்கின் மூலம் ஒலிபரப்ப வேண்டாம் என்று தமிழகத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான மவ்லவீ, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்களைத் தலைவராகக் கொண்ட நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானம். ஒவ்வொரு மஹல்லாவும் பொறுப்புணர்வுடன் அதை ஏற்று நடப்பது மிகவும் அவசியம் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.

நோன்பு கால தராவிஹ் தொழுகைக்கு மைக்கை தெருவுக்குத்தெரு கட்டி வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளையும் பற்றி சிறிதுகூட கவனத்தில் கொள்ளாமல்; தொல்லைக்குள்ளாக்கும் செயலை ஏதோ நன்மையான காரியமாக் கருதி அதை நடைமுறைப்படுத்தி வருவது அமைதி மார்க்கமான இஸ்லாம் காட்டித் தந்த வழியல்ல.
கூட்டுத்தொழுகை என்பது பள்ளிவாசலுக்கு வருகின்றவர்களுக்கு மட்டுமே. அதை வெளி மைக் மூலமாகவும் தெருவுக்குத்தெரு குழல் ஒலிபெருக்கி மூலமாகவும் ஒலிபரப்பும்போது வீட்டிலுள்ள பெண்கள் தனித்து தொழும்போது அது எவ்வளவு இடையூறை விளைவிக்கும் என்பதை எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

சில ஊர்களில் நோன்பு காலத்தில் தராவிஹ் தொழுகை மட்டுமின்றி, நோன்பு திறந்து சிறிது நேரத்திற்குள் குர்ஆன் சி.டி.யை மைக்கில் போட்டு நோன்பாளிகளின் நிம்மதியைக் கெடுக்கும் செயலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘திருக்குர்ஆன் ஓதக்கேட்டால் அதை செவி தாழ்த்திக் கேளுங்கள்’ என்பது இறைக்கட்டளை. நோன்பாளிகள் நோன்பு திறந்தவுடன் சற்று ஓய்வாக இருக்கும் அந்த நேரத்திலும் குர்ஆனை ஒலிக்கச்செய்வது முறையா?

Thursday, December 6, 2012

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன?

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி


பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன?

ஆசிரியர்:
பஃழீலதுஷ் ஷைகு அல்அல்லாமா ஸாலிஹ் இப்னு பவ்ஸான் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ்
தமிழாக்கம்:
முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்
பொருளடக்கம்:

Source :  http://www.islamkalvi.com/portal/?p=6716

Android க்கான ஃபயர்பாக்ஸ் உங்கள் உலகளாவிய வலை

Monday, December 3, 2012

ஏங்கி நின்றேன்...!

பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்...
பகல் உணவில் கூட பால் தந்த ...
அந்த அன்னையின் பாசம்...
இன்று தூரமாகி போனதை எண்ணி...
ஏங்கி நின்றேன்...!

பள்ளிப்பருவம் எட்டியதும்...
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து...
பாடசாலை அனுப்பி வைத்ததை நினைத்து...
ஏங்கி நின்றேன்...!

படித்தது போதும் என்று...
பாதிலேயே கல்வி விட்டு....
பன்னாட்டு விமான நிலையம் கண்டு...
புலம்பெயரும் கனவுகள் சுமந்து...
பாசத்தை தூரமாக்கி....
ஏங்கி நின்றேன்...!

வாப்பா பார்த்து, உம்மா பார்த்து...
வரதட்சணை கண் மறைத்து...
வாயாடிப் பெண்ணை மணந்து...
அன்புக்காக...
ஏங்கி நின்றேன்...!

Monday, November 26, 2012

அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் எங்க ஊரு!


அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் எங்க ஊரு!

எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஒவ்வொருவருக்கும் அவங்க அவங்க சொந்த ஊரைப்போல வராது (ஒரு சிலருக்கே தவிர) . அது ஒரு குக்கிர
ாமமே ஆனாலும் தங்கள் ஊரைப் பற்றிக் கேட்டால் சந்தோஷமாக, சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்வார்கள்

'இந்தியா' என்றாலே (எங்கள்) நினைவில் முன்வந்து நிற்கும் கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான நான் பிறந்து, வளர்ந்து, காரைக்கால் என்ற எங்கள் ஊரைப் பற்றி எழுதுவதில் ஆனந்தமும், பெருமிதமும் கொள்கிறேன் :) :) ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களான‌ பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகியவற்றில் பாண்டிச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தின் எல்லையோடும், மாஹே கேரள எல்லையிலும், ஏனம் ஆந்திர எல்லையிலும் அமைந்துள்ளன.

இவற்றில் 2 வது பெரிய பிராந்தியமான‌ காரைக்கால், அந்த‌ மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரமாகும். காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.

காரைக்கால் பீச்சில் குழந்தைகள் விளையாட பலவித விளையாட்டுகளோடு கூடிய 'பார்க்'கும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் இதமாக வருடிக் கொடுக்கும் கடல் காற்றை குழந்தைகளின் விளையாட்டுகளோடு ரசித்தபடி சுவாசிக்க, உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் கடல் இல்லாத பக்கத்து ஊர் மக்களும் 'காரைக்கால் கடற்கரை'க்கு விரும்பி வந்த வண்ணம் இருப்பார்கள்

Sunday, November 25, 2012

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

எழுதியவர்/ S.H.M. இஸ்மாயில் ஸலஃபி


“உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.

நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.

மற்றும் சிலர் சட்டம் இருக்கின்றதோ இல்லையோ பாசத்தின் பெயரில் குழந்தைகள் தவறு செய்யும் போது கண்டுகொள்ளாதிருந்து விட்டு தவறுகள் பெருத்த பின்னர் கவலைப்படுகின்றனர்.

இது இப்படியிருக்க, குழந்தைகளைத் தண்டிக்கும் சிலர் கொடூரமாக நடந்து கொள்கின்றனர். குழந்தைகளை நல்வழிப் படுத்தல் என்பதுதான் தண்டனையின் நோக்கம். தண்டிக்காமலேயே வழிகாட்டுவதன் மூலம் அந்த இலக்கை அடையமுடியுமாக இருந்தால் தண்டனை இல்லாமலேயே நல்லுபதேசத்தின் மூலமே அடைய முயற்சிக்க வேண்டும்.

சிலர் தமது கோபத்தைத் தீர்ப்பதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் கையில் கிடைத்ததை எடுத்து தண்டிக்கின்றனர். இல்லையில்லை தாக்குகின்றனர். இது குழந்தைகளை நல்வழிக்குட்படுத்துவதற்குப் பதிலாக மனரீதியில் பாதிப்படையச் செய்யலாம். வீட்டை விட்டு வெருண்டோட வைக்கலாம். போதை, தீய நட்பு, கெட்ட பழக்க வழக்கங்கள் போன்ற தவறுகளுக்கு உள்ளாக்கலாம். இத்தகைய தண்டனை முறையை இஸ்லாமும் ஏற்காது. இதயத்தில் ஈரமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். எனவே தண்டித்தல் குறித்த சில வழிகாட்டல்களை வழங்குதல் நல்லதெனக் கருதுகின்றேன்.

1. கோபத்தில் இருக்கும் போது தண்டிக்காதீர்கள்:
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்பார்கள். அதனால்தான் கோபப்பட்டவர் வீட்டில் பொருட்களை, கண்ணாடியை யெல்லாம் உடைப்பதைப் பார்க்கின்றோம். கோபத்தில் நாம் பேசினால் நமது பேச்சு சரியாக இருக்காது. தண்டித்தால் அது நியாயமாக இருக்காது. சின்னக் குற்றத்திற்குப் பெரிய தண்டனையளித்து அநியாயம் செய்துவிடுவோம். எனவே, உங்கள் கோபம் தணியும் வரையும் இருந்து நீங்கள் நிதானத்திற்கு வந்த பின்னர் நிதானமாகத் தண்டியுங்கள்.

நமது பெற்றோர்கள் சிலரின் செயற்பாடு ஆச்சர்யமாக இருக்கின்றது. மூத்தவன் இளையவனைத் தள்ளிவிட்டான். இளையவனின் தலையில் இரத்தம் வடிகின்றது. பாதிக்கப்பட்ட இளையவனைக் கவனிப்பதற்கு முன்னர் மூத்தவனுக்கு நாலு மொத்து மொத்தாவிட்டால் இவர்களுக்கு ஆத்திரம் அடங்காது. இதனால் தவறு செய்த பிள்ளை அடிக்குப் பயந்து ஓடி வேறு பிரச்சினைகளைத் தேடிக் கொண்டு வருகின்றது. பிறகு இரு குழந்தைகளுக்குமாக மருத்துவம் செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு!

எனவே, தண்டிப்பதிலும் நிதானமும் நியாயமும் தேவை. எனவே, கோபத்தில் இருக்கும் போது தண்டிப்பதைத் தவிருங்கள். நிதானமான நிலையில் தண்டியுங்கள். கோபம் அடங்கிய பின்னர் எப்படி தண்டிப்பது என்று கேட்கின்றீர்களா? குழந்தை இதன் பிறகு இந்தத் தவறை செய்யக் கூடாது என்று உணரும் அளவுக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்து வதற்காகத் தண்டியுங்கள். கோபத்தைத் தீர்ப்பதற்காகத் தண்டிப்பதென்றால் அது முறையான தண்டனையல்ல.

மத்திய உளவுத் துறைக்கு புதிய இயக்குனர்!

மத்திய உளவுத் துறையின் புதிய இயக்குனராக 1977 ஆம் வருட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆசிப் இப்ராஹீம் நியமிக்கப் பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய உளவுத் துறையின் இயக்குனராக பொறுப்பு வகித்து வரும்  நேசால் சந்து வரும் டிசம்பர் 31 அன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து மத்திய உளவுத் துறையின்  புதிய இயக்குனர் பொறுப்புக்கு  ஆசிப் இப்ராஹீமை பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு தேர்வு செய்துள்ளது.

மத்திய உளவுத் துறையில் சிறப்பு இயக்குனராகப் பொறுப்பு வகிக்கும் ஆசிப் இப்ராஹீம், கடந்த 20 வருடங்களாக உளவுத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Source : http://www.inneram.com/

Saturday, November 24, 2012

ஹிஜ்ரா காலண்டர் 1434H

ஹிஜ்ரா காலண்டர் 1434H

எழுதியவர்/பதிந்தவர்/உரை P. முகமது சிராஜுதீன்

Hijra Calendarஹிஜ்ரி 1434-ஆம் வருடத்தின் நாட்காட்டியை பார்க்க:

www.islamkalvi.com/hijracalendar/1434/index.html
Image format:

To download all images click here
இதன் இமேஜ் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Click below for PDF version
View PDF version | Download PDF version

Source : http://www.islamkalvi.com

Friday, November 23, 2012

மிஸ்டர் திரு ஜனாப் சேக்


தமிழ்நாட்டில் சில முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிம் நபரை மரியாதையாக அழைப்பதற்கு ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உ-ம் ஜனாப் அப்துல் காதர் அவர்களே. இந்த ஜனாப் வந்த வரலாறு என்ன என்று காண்பதற்கு முன் அது தொடர்பான உலக வழக்கங்கள் சிலவற்றை முதலில் காண்போம்.

ஆங்கிலத்தில் ஆடவரை மிஸ்டர் என்று அழைப்பார்கள். இது பெரும்பாலும் குடும்பப் பெயர் சொல்லி அழைக்கவே பயன்படும். உ-ம்: மிஸ்டர் கேட்ஸ். அல்லது முழுப் பெயரையும் சேர்த்து அழைக்கும்போதும் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. உ-ம்: மிஸ்டர் பில் கேட்ஸ். முதல் பெயரை மட்டும் அழைப்பதற்கு வட அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களிலும், இன்று சில நாடுகளிலும், வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும்கூட முதல் பெயரை அழைப்பதற்கு மிஸ்டரைப் பயன்படுத்துகிறார்கள்.

துவக்கத்தில் மிஸ்டர் என்பது மனைவி கணவனை அழைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. மிஸ்டர் என்றால் கணவன், காவலன், புருசன், துணைவன், நெருக்கமானவன், உயிரானவன், மணமகன், வீட்டுக்காரன் என்றெல்லாம் பொருள் உண்டு.

Thursday, November 15, 2012

Wish you a very happy, blessed new Hijri Islamic New year

Wish you a very happy, blessed new Hijri Islamic New year   May Allah bless each and everyone of you during this blessed New Year!

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

 

ஒவ்வொரு ஹிஜ்ரி ஆண்டும் ஒரு புத்தாண்டு .


இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது. பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அல்லாஹ்(ஜல்) தனது இறுதித்தூதராக முஹம்மது(ஸல்) அவர்களை அவர்களது 40வது வயதில் தேர்ந்தெடுத்தான். அவர்களது 40வது வயதிலிருந்து 63வது வயதுவரை அல்லாஹ் தன்புறத்திலிருந்து வஹீ இறக்கி சிறிது சிறிதாக அல்குர்ஆன் வசனங்களை அருளி அதை நிறைவு செய்தான்.

    அதுவே உலகம் அழியும்வரை உலக மக்கள் அனைவருக்கும் இறுதிவேதம் என்று பிரகடனப்படுத்தினான். எவற்றை இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு இறக்கி கட்டளையிட்டானோ அதாவது நானே உங்களைப் படைத்த இறைவன் எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள் என்னை மட்டுமே வணங்கி வழிபடுங்கள். என்னிடமே உங்களுடைய தேவைகள் அனைத்தையும் கேளுங்கள் என்ற அதே போதனையைத்தான் வஹீயாக அறிவித்தான். ஆனால் அல்லாஹ்வின் மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்க்கும் புரோகிதரர்கள் வழமைப்போல் என்ன செய்தார்கள் தெரியுமா?

    இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் செய்த போதனைக்கு நேர்முரணாக அவர்களையும் இன்னும் பல நல்லடியாளர்களையும் சிலைகளாக வடித்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டிய கஃபத்துல்லாஹ்வில் சிலை வணக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். சிலை வணக்கம்தான் அசலான வணக்க வழிபாடு என்றிருந்த அன்றைய அரபு மக்களுக்கு முஹம்மது நபி(ஸல்) போதித்த ‘ஒரே இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் அதுவே வெற்றியைத்தரும் என்ற போதனை அவர்களுக்கு அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தியது. தங்களின் மூதாதையர்களின் வணக்க வழிபாட்டை கேவலப்படுத்துகிறார், இழிவு படுத்துகிறார் என்று ஆத்திரத்திற்குமேல் ஆத்திரம் கொண்டனர்.

Wednesday, November 14, 2012

படிக்கட்டுகள்... ஏற்றம் - 22

தலைமைத்துவம் [Leadership]  என்பது ஏதோ கட்சிக்கும், நிறுவனங்களுக்கும் , ஏதோ ஒரு குழுவுக்கும் என்றோடு இல்லாமல் தலைமைத்துவம் என்பது நம் வாழ்வில் நிழல்போல் வரக்கூடிய ஒர் தன்மை.

ஒரு மனிதனின் தலைமைத்துவத்தின் தொடக்கம் அவனது மனைவியின் அங்கீகாரத்தில் ஆரம்பிக்கிறது. கல்யாணமான புதிதில் தான் ஒரு ஹீரோ என சொல்கிறமாதிரி நடப்பதை [அல்லது நடிப்பதை]நம்ப ஆரம்பிக்கும் மனைவியிடம் அங்கீகாரத்திற்கு மனிதன் தன்னை சில கஷ்டங்களுக்கும் உட்படுத்தி தன் சாதனையை நிலை நாட்ட ஆரம்பிக்கிறான். சிலர் முயற்சிகள் அற்றுப்போய் 'காமெடி பீஸ்" மாதிரி  நடக்க ஆரம்பித்தவுடன்  'என்ன நீங்க சொன்ன மாதிரி நடந்துக்க தெரியலையே' என்று என்று சொல்லும்போதே தலைமைத்துவத்தின் ஆணிவேரில் ஹைட்ரோகுலோரிக் ஆசிட் ஊற்றப்படுகிறது என்று அர்த்தம்.

சில சமயங்களில் குடும்பத்தில் நீங்கள் பெரிதாக நம்பியிருக்கும் சிலர் பேசுவதை எதிர் கொள்ளும்போது அந்த வார சீரியல் 'தொடரும்" போடும் போது உறைந்து நிற்கும் கேரக்டர் மாதிரி பல சமயங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதெற்கெல்லாம் கலங்கி நிற்பது ஒரு நல்ல லீடர்ஷிப் குவாலிட்டி அல்ல.

இது தெரியாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் 'ஙே" என்று விழிக்க ஆரம்பித்தால்  கால ஒட்டத்தில் "ஒப்புக்கு" அழைக்கப்படும் பெரியவர்கள் லிஸ்ட்டில் மட்டும்தான் நம் பெயர் இருக்கும். குடும்பத்தில் எடுக்கப்படும் பல முடிவுகளை நீங்கள் கேள்விப்படும் நேரத்தில் அந்த முடிவுகள். முடிவுக்கே வந்திருக்கும்.

இது உங்களை பயங்காட்டும் ட்ரைலர் அல்ல. "தூங்காத நிலை" என்று ஒரு நிலை வாழ்க்கையில் இருக்கிறது. மனிதன் படுத்து தூங்கும் செயலுக்கும் இதற்கும் புலிமார்க் சீயக்காய்தூளுக்கும் புலிக்கும் உள்ள சம்பந்தம்தான் அது. இதை சிலர் மதத்தோடு சேர்த்து கோடி கோடியாக பணம் பன்றாங்க. இதைப்பற்றி வேறு சமயத்தில் விவாதிக்கலாம்.

Qualities of Good Leaders.

வாழ்க்கையில் எப்போதும் உற்சாகம் குறையாமல் இருப்பார்கள். சரி இவர்களுக்கு சோகமே வராதா என நீங்கள் நினைக்களாம் , வரும்..ஆனால் ஒரு சராசரி மனிதனுக்கு எப்போது பார்த்தாலும் எதிலும் சோகமாய் வந்து கொட்டும் சோகம் அவர்களிடம் இருக்காது. சோகமான நிகழ்வுகளிலும் 'இதிலும் நான் ஏதோ கற்றுக்கொள்ள தான் இறைவன் இந்த சோதனையை எனக்கு தந்து இருக்கிறான்' என்று ஏற்றுக்கொள்வார்கள்.



      Leadership by ACTION, not by Position: 

Tuesday, November 13, 2012

ஹதீது தொகுப்புகள் ஆறு





நபித் தோழர்களும், அவர்களுக்குப்பின் வந்தர்வகளும் ஹதீதுகளைத் தொகுத்தளிக்க ஆரம்பித்தனர்.

அந்த ஹதீதுகள் அவர்களால் முடிந்தவரை மனப்பாடம் செய்யப்பட்டு சில செவி வழிச் செய்திகளாகவும், சில எழுதி வைத்தப் பிரதிகளாகவும் உருவாகின.

முகம்மது நபி இறந்த 200 ஆண்டுகள் தொடங்கி 300 ஆண்டுகள்வரை இஸ்லாத்தில் இணைந்த அரபி அல்லாதவர்கள் ஹதீதுகளின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை நூல்களாகத் தொகுக்க ஆரம்பித்தனர்.

இக்காலக்கட்டத்தில் ஏராளமான ஹதீது தொகுப்புகள் தொகுக்கப்பட்டாலும் முஸ்லிம்களிடையே இன்று ஆறு நூல்கள் மட்டுமே ”உண்மையான ஆறு ஹதீது நூல்களின் தொகுப்பு” எனக் கருதப்பட்டு "ஸிஹாஹ் ஸித்தா" என்ற பெயரில் விளங்கி வருகின்றன.

நூல் 1:   சஹீஹுல் புகாரி
ஹிஜ்ரி 194 - 256 ல் வாழ்ந்த ரஷ்யாவைச் சேர்ந்த புகாரி என்பவரால் தொகுக்கப்பட்டது. நான்கு லட்சம் ஹதீதுகளை இவர் தொகுத்தார். அவற்றுள் சுமார் நாலாயிரம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நூல் 2: ஷஹீஹ் முஸ்லிம்
ஹிஜ்ரி 206 - 261 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 3: ஸூனன் நஸயீ
ஹிஜ்ரி 214 - 303 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நஸயீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 4: ஸூனன் அபூதாவூத்
ஹிஜ்ரி 202 - 275 ல் வாழ்ந்த இராக்கைச் சேர்ந்த அபூதாவூத் என்ப்வரால் தொகுக்கப்பட்டது

நூல் 5: ஸூனன் திர்மிதீ
ஹிஜ்ரி 209 - 279 ல் வாழ்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த திர்மிதீ என்பவரால் தொகுக்கப்பட்டது

நூல் 6: ஸூனன் இப்னுமாஜா
ஹிஜ்ரி 202 - 273 ல் வாழ்ந்த ஈரானைச் சேர்ந்த இப்னுமாஜ்ஜா என்பவரால் தொகுக்கப்பட்டது.

Friday, November 9, 2012

வாங்கிய வரியை ,வாங்கும் வரியை திருப்பிக் கொடுத்தவர் உமர்(ரலி)

முந்தைய முஸ்லிம்கள் ஆட்சிகளில்  மற்ற மார்கத்தை சேர்ந்தவருக்கு எந்த தீங்கும் நேர்ந்துவிடாமல் சிறப்பாக பாதுகொடுப்பு கொடுப்பதற்கு வாங்கும் வரியை ஜசியா வரி என்று அழைப்பார்கள் .
பைத்துல்முகத்திஸ்  இஸ்லாமிய ஆட்சியில் இருந்தபோதும்    பைத்துல்முகத்திஸ் இருப்பிடத்தை சுற்றி முஸ்லிம் அல்லாத மக்கள் குடி இருந்தார்கள். கலீபா உமர்(ரலி) அவர்கள்  ஒரு கட்டத்தில் . அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்த வீரர்களை அவசியம் காரணமாக மதீனா நகருக்கு திரும்ப அழைத்தார்க்கள். வீரர்கள் பாதுக்காப்பு நிறுத்தப்பட்டதால் அங்கு வசித்து வந்த மற்ற மார்க்கத்தை சேர்ந்த  மக்களிடம்  வீரர்களை அழைத்துக் கொள்வதால் அவர்களையே தங்கள் பாதுகாப்புக்கு வேண்டியதை செய்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு  அதற்காக வாங்கப்பட்ட வரியை திரும்ப தந்து விடச் செய்தார்கள் .

Saturday, November 3, 2012

இஸ்லாத்துக்கு வேண்டாம் அற்புதங்கள்

இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்!

அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.

உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!

Friday, November 2, 2012

உலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) உர்.

நீங்கள் ஒரு மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களா என்பது உங்கள் தனிப்பட்ட கொள்கையைப் பொருத்தது .ஆனால் மார்க்கம் வாழ்கையின் முக்கிய முடிவை தீர்மானிக்கக் கூடியது என்பது உண்மை . ஒரு முக்கியம் வாய்ந்த நகரம் இஸ்லாமியர்களுக்கும்,கிறிஸ்தவர்களுக்கும் மற்றும் இஸ்ராலியர்களுக்கும் (யகூதியர்களுக்கும்) முக்கியம் வாய்ந்தது. அந்த நகரம் எது? அதனை அனைவரும் அறிந்துக் கொள்வது சிறப்பு.



நசிரியாவிற்கு அருகில் உள்ளது உர்.   பாக்தாத்திற்கு தெற்கில்  365 km   தூரத்தில் உள்ள உர் மிகவும் புகழ்பெற்ற சரித்திர முக்கியத்துவமாக உள்ளது உலகம் உள்ளவரை அதன் புகழ் மங்காது மற்றும் மறையாது. அதற்கு முக்கிய காரணம் இப்ராஹீம்( Abraham )நபி பிறந்து வளர்ந்த ஊராய் இருப்பதால்.  இப்ராஹீம்( Abraham )நபி . பிறந்தது 1996 B.C.
சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு ஈராக் நாட்டில் உள்ள உர் என்ற ஊரில் இப்ராஹீம் நபி பிறந்தார்.
வர்த்தகத்துக்கும் தொழிலுக்கும் மையமாக அந்நகரம் திகழ்ந்தது.
/>--------------------------------------------------------------------------------------------------------

Tuesday, October 30, 2012

வாழ்த்துகள் To ஹசேனி மரிக்கான் - WE WISH YOU Hassane Marecan

இணையம் எல்லோருக்கும் பொதுவானது.(காணொளி இணைப்புடன்)


                        சந்திப்பு : 'பதிவர்' சகோ. ஜஃபருல்லாஹ் [ஜாஃபர்]

இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் அடுத்தக் கட்டம் என்று அழைக்கும் இவற்றை பயனுள்ள வகையில் நம்முடைய நேரத்தையும், சிந்தனையையும் செலவிட்டு நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் பயனுற உறுதுணையாய் இருப்போம் [ இறைவன் நாடினால் ! ]

'சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. ஜஃபருல்லாஹ் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
நமதூர்  காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.

சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுயதாய அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், .ஊடக ஆர்வலர், அதிரை எக்ஸ்பிரஸ் தள  நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது இவருக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது.

கூகிள் Apps டொமைனை எப்படி சரிபார்ப்பது?

Monday, October 29, 2012

தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 6


மீனாட்சிபுரம் இன்று
 
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/09/120909_tnmuslims6.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1


* 1981 ஆம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சிற்றூரே மீனாட்சிபுரம்

* இஸ்லாம்தான் எங்கள் கொடுமைகளுக்கான ஒரே விடிவு

* மதம்மாற முயன்றவர்களை தமிழக அரசு கைதுசெய்தது

* மதம் மாறியவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்

* ஐவேளை தொழுகை போன்றவற்றைக் கடைபிடிக்க முடியவில்லை என்பதால் சிலர் மாறாமல் இருக்கிறார்கள்

* நூர்ஜகானாய் மாறிய தலித் பெண்ணைத் திருமணம் செய்ய முஸ்லிம்கள் முன்வராததால் தற்கொலை செய்துகொண்டார்

 தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 5

Source : http://anbudanislam

தமிழக முஸ்லிம்கள் - பிபிசி தொடர் 5


கோவை குண்டுவெடிப்பு

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/09/120902_tnmuslims5.shtml?bw=bb&mp=wm&bbcws=1&news=1

* அடிப்படைவாதம் தீவிரவாதமாகி குண்டுவெடிப்புவரை சென்றது கோவையில்தான்

* சிறுதொழிலையே நம்பியிருந்த முஸ்லிம்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள்

* முஸ்லிம் சமுதாயத்திற்குப் பொருளாதார ரீதியான கடன் திட்டங்கள் வழங்கப்படுவதில்லை

* குண்டுவெடிப்பு சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் நாங்கள் நன்றாக இருந்திருப்போம்

* கல்வி ரீதியில் முன்னேறி ஆக்க ரீதியில் செயல்பட்டு அழிவு ரீதியைக் கைவிட வேண்டும்

* ஏதோ ஒரு அமைப்பு செய்ததற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள்
Source ;http://anbudanislam

தனது 189 வாரிசுகளுடன் பக்ரீத் கொண்டாடிய மூதாட்டி!

திருப்பூரைச் சேர்ந்த 107 வயது பாட்டி ஜெஹராவி, தனது 189 வாரிசுகளுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தார்.

திருப்பூரில் பனியன் தொழில் செய்து வரும் ஜெஹராவி பாட்டியின் குடும்பத்தினர்  1 மகன், 3 மகள்கள், பேரன், பேத்திகள் 39 பேர், கொள்ளுப் பேரன், பேத்திகள் 71 பேர் உள்ளிட்ட 189 பேர்  கூட்டுக் குடும்பமாக திருப்பூர் அருகேயுள்ள நல்லூர் பகுதியில் ஒரே காலனியில் வசித்து வருகின்றனர். பாட்டியின் கணவர் சையத் அப்துல் லத்தீப் 40 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

பத்திரிகை அடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, ஜெஹராவி பாட்டி குடும்பத்தினர், இவ்வருட பக்ரீத் பண்டிகை விழாவை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Source : http://www.inneram.com

அப்படி என்னதான் இருக்கிறது நாகூர் ஹனிபாவின் இந்த பாடலில்?

இந்தப் பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இல்லை. முணுமுணுக்காத உதடுகள் இல்லவே இல்லை.  பாராட்டாத உள்ளங்கள் இருக்கவே முடியாது.

அது ஏனோ தெரியவில்லை, நாகூர் ஹனிபாவை ‘இமிடேட்’ பண்ணுவதற்கு அத்தனை இஸ்லாமியப் பாடகர்களும் இந்தப் பாடலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மேடையில் அரங்கேறும் கலைநிகழ்ச்சியின்போது ‘வைகைப்புயல்’ வடிவேலு ரசிகர்களைக் கவர நினைத்தாலும் இந்தப் பாடலை பாடித்தான் அசத்துகிறார்.

சின்னி ஜெயந்த் நாகூர் ஹனீபாவைப்போல் மேடை நிகழ்ச்சியில் ‘மிமிக்ரி’ செய்ய வேண்டுமென்றாலும் இந்தப் பாடலை பாடித்தான் கைத்தட்டல் பெறுகிறார்.

மதுரை மூத்த ஆதீனகர்த்தா அருணகிரி நாதர் தன் ஓய்வு நேரங்களில் விரும்பிக்கேட்கும் பாடல் இதுதானாம். அவரே சொல்லியிருக்கிறார்.

குன்றக்குடி அடிகளார், சோமசுந்தர தம்பிரான் போன்றவர்களின் மடத்திலும் இந்தப் பாடல்தான் ஒலிக்கிறது.

பொது நிகழ்ச்சிகளிலும் கோவில் விசேஷங்களிலும்கூட இப்பாடல் ஒலிபெருக்கிகளில் ஒலிப்பதை நாம் காது குளிர கேட்க முடிகிறது.

அதிகாலை வேளையில் வானொலியில் ஒலிபரப்பப்படும் “பக்தி கானங்கள்” பட்டியலில், எந்தப் பாடல் இடம் பெறுகிறதோ இல்லையோ இந்தப் பாடல் கண்டிப்பாய் இடம் பெற்று விடுகிறது.

கல்யாண வீடியோ கேசட் மற்றும் குறுந்தகடு பதிவில் இந்தப் பாடல் பின்னணியில் கட்டாயம் ஒலிக்கிறது.

அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் பாடலில்? கேள்வி மீண்டும் நம் உள்ளத்தைக் குடைகிறது.

எளிமையான வரிகள்; எல்லா மதத்தினரும் ஏற்கக் கூடிய கருத்துக்கள்; மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனை.

இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும் பாடல் என மறைந்த கிருபானந்த வாரியாரே பல மேடைகளில் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

Saturday, October 27, 2012

முஸ்லிமும் சாதிப்பெயரும்


அறியாமையுடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற பெயரின் காரணமாக எவரையும் ஓரங்கட்டி வைக்கும் அளவுக்கு எனது இறைவன் என்னை முற்போக்காளன் ஆக்கிவிடவில்லை.

அன்புடன் முஸ்லிம்:
மரைக்காயர் ராவுத்தர் போன்ற சாதிப் பெயர்கள் நாம் வாழும் நிலப்பகுதியின் காரணமாக செய்யும் தொழிலைக் கொண்டு உருவானது.

மரைக்காயர் என்றால் மரக்கலராயர். மரக்கலராயர் என்றால் கப்பல் வணிகம் செய்பவர் என்று பொருள்.

இப்படியே ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதியைப் பிரித்தார்கள் பிராமணர்கள்.

தொழில் அடிப்படையில் உருவான பெயர்களை அதனால் நாம் மறுதளிக்கவேண்டும்.

உங்கள் குடும்பப் பெயர் அல்லது ஊர் பெயர் அல்லது புனைபெயர் என்று எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், தவறில்லை.

மரைக்காயர், ராவுத்தர் எல்லாம் ஒரு முஸ்லிமிற்கு அவசியமில்லை.

Source :http://anbudanislam2012.blogspot.in/

 சாஹிப் என்றால் நண்பர்,தோழர்,உரிமையாளர்,'ஐயா' இன்னும் பல பொருள்படும் .ஆனால் அது ஒரு காலமும் ஒரு மார்க்கத்தைச் சார்ந்தவரை குறிப்பிடாது . சாகிப் என்று முஸ்லிம் மக்களை மட்டும் குறிப்பிட்டு அடைமொழி கொடுத்து அழைப்பது மடமை. 
சாஹிப் என்ற வார்த்தையை சொல்லி இந்தியாவில் ஆங்கிலயேன் ஒரு பிரிவை உண்டாக்கினான் .சாஹிப் என்ற வார்த்தை அரபு மொழியிலிருந்து வந்தாலும் உருதுவில்தான் அதிகம் பயன்படுத்தினர். சீக்கியர்களும் பயன்படுத்துகின்றனர்  

சீனா பயண அனுபவம்! - (பகுதி 3)

                                            பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 3


என் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே வந்து நின்றது எங்களது கார்.

நானும் எனது நண்பன் “ஜேம்ஸ்” ம் காரிலிருந்து இறங்கியவுடன்
"நீ ஹாவ்" ( நீங்கள் நலமா ? ) என்றேன் எனது குடியிருப்பின் பாதுகாவலரிடம் அவனோ “ ஹாவ் ” ( நலம் ) என்றான்.



இங்கே அடுக்குமாடி களைப் பொருத்தவகையில் சதுர மீட்டரில் கணக்கீடு செய்து விலைகளை நிர்ணயம் செய்துகொள்கிறார்கள், விலைகளைப் பொருத்தவரையில் மலிவாகவே உள்ளது. மேலும் முறையாக அரசின் அனுமதிப்பெற்று அதில் பூங்கா, வாகன நிறுத்துமிடம், மின் கசிவு தடுப்பு சாதனம், பாதுகாப்பு சாதனம், குழாய் எரிவாயு இணைப்பு போன்றவைகள் அமையப்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் பயன்தரும் அனைத்து இல்லப் பொருள்களும் அடங்கியிருக்கும்.
“ குறிப்பாக நம்மூர் ரியல் எஸ்டேட் எஜமானிகள் கவனிக்கப்படவேண்டியவை, வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்கள் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது என்பது ஓரளவுக் குறையும்.”

Friday, October 26, 2012

துபாயில் தியாகத் திருநாள் காணொளி இணைப்பு - Eid in dubai (video)

துபாயில் தியாகத் திருநாள் காணொளி இணைப்பு - Eid in dubai (video) DUBAI EID AL AHADA PART1 DUBAI EID AL AHADA PART2.

Thursday, October 25, 2012

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை !!!

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தை பிறக்கும் காலம்

ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.

37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.

41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.

குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

பிறக்கும் குழந்தையின் எடை

ஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.

Wednesday, October 24, 2012

போஸ்னியர் நடைபயணமாக புனிதமிகு ஹஜ் பயணம் -(காணொளி இணைப்பு )

நடைப்பயணமாக  புறப்பட்டு ஆயிரம் மைல்களைக் கடந்து நாற்பத்து ஏழு வயது போஸ்னியன் முஸ்லிம்  தனது ஹஜ்ஜுப் புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்காக   இறுதியாக புனிதமிகு மக்காவை  வந்தடைந்தார்.

தனது வாழ்வின் கனவை,நினைவை ,கடமையை நிறைவேற்றுவதில் மன உறுதியுடன் செயல்பட்டார் .

தன்னிடம் அதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லாமையால் நடைப்பயணம் மேற்கொண்டதாக செனட்ஹட்ஜிக் சொல்கின்றார்  அவர்  வைத்திருந்த 200 (ஈரோஸ்) பணத்துடன்   சவூதிக்கு புறப்பட்டதாக சொல்கின்றார்  

Tuesday, October 23, 2012

சீனா பயண அனுபவம்! - (பகுதி 2)

 “ பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 2


சலாம் சகோதரர்களே !
முன்னுரை :
“ பயணங்கள் அனுபவம் – “ சீனா “ இக்கட்டுரையை எழுதக்காரணம், புதிதாக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய நமது சகோதரர்களுக்கு விமான நிலையங்கள் மற்றும் அவர்கள் செல்லக்கூடிய அந்தந்த நாடுகளில் ஏற்படும் பல இன்னல்கள் மற்றும் அவர்களின் பய உணர்வுகள் இவைகளைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக வேண்டி, இப்பதிவுகள் தொடர்ச்சியாகப் பதியப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )

குறிப்பாக இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன் ஆங்கில மொழி பேசும் திறமையை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தொழில் சம்பந்தமாக ஏராளமான தகவல்கள் இக்கட்டுரைகளில் இடம் பெற இருப்பதால், புதிய தொழில் தொடங்க முனைவோர், இப்பதிவுகளை தொடர்ச்சியாகப் வாசித்துப் பயனடைமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாமிய சகோதரிகளுக்கு அழகு குறிப்புகளுக்கு !

  சகோதரிகளுக்கு அழகு குறிப்புகளுக்கு இனிய இசையுடன் ஒரு சிறந்த காணொளி.
கன்னியரை கட்டிக்கொள்ள ஆசை!
கவிதையோடு கலந்த ராகம்.
watch?v=DqYkO9yd6BE&list=FLoabIjVbkTBBMUQ4hGHrCMQ&index=7&feature=plpp_video

Beauty Tips for My Sisters in Islam

Rymes of Praise wedding song

LinkWithin

Related Posts with Thumbnails