Sunday, November 30, 2014

"உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

Surat Al-Kāfirūn (The Disbelievers) - سورة الكافرون

بسم الله الرحمن الرحيم

109:1 Say, "O disbelievers,

(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!( 'இறை மறுப்பாளர்')
109:2 I do not worship what you worship.

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3 Nor are you worshippers of what I worship.

இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4 Nor will I be a worshipper of what you worship.

அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5 Nor will you be worshippers of what I worship.

மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6 For you is your religion, and for me is my religion."

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."




---------------------------------
'காஃபிர்' விளக்கம்
'குஃப்ர்' என்ற மூலச் சொலிலிருந்து பிறந்ததே 'காஃபிர்' என்ற வார்த்தை. அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு 'இறை மறுப்பாளர்'
ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை 'காஃபிர்கள்' என்று அழைக்கப் படுவதுண்டு
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது திரு மூலரின் திருமந்திரம்.
நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்துள்ளனர்.
இந்த பல தெய்வ வணக்கம் என்பதே இடைக்காலத்தில் கலாசார மாற்றங்களினால் புகுத்தப்பட்டது.

Thursday, November 27, 2014

அடிமைத்தனமல்ல… அருட்கொடை!


திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால்

அந்தச் சிறப்பு என் தாய்க்குத் தேவையில்லை

கணவன் காண வேண்டியதைகண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால்

என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்

வரைமுறையற்று வாழ்வதுதான் பெண்ணியம் என்றால்

என் சகோதரி எதிர்பெண்ணியவாதி என்பதில் பெருமையடைகிறேன்

உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா

இல்லை என்பதற்கு அன்னை தெரசா அற்புதச்சான்று

Wednesday, November 26, 2014

இறைத்தூதரைக் கடவுளாகவிடக் கூடாது.

சமீபத்தில் மறைந்த நவீன இலக்கிய மேதை
யு.ஆர்.அனந்தமூர்த்தி பேசுகிறார்:

-------------------------------------------
முஸ்லிம்கள்
தங்கள் இறைத்தூதரைக் கடவுள் எனப்
புரிந்துகொள்ளக் கூடாது என்னும் காரணத்துக்காக
இறைத்தூதரின் பெயரைச் சொன்னவுடன்
கடவுளின்
கருணை சொன்னவர்மேல் இருக்கட்டும் என்கிறார்கள்.
அது அற்புதம்.
ஏனென்றால், இறைத்தூதரைக்
கடவுளாகவிடக் கூடாது.
தங்கள் குருவைக் கடவுளாகவிடக் கூடாது என்னும்
இந்தப் பிடிவாதம் உள்ள வேறொரு மதம்
உலகத்தில் இல்லை.

காந்தியைப் பொறுத்த அளவிலும் இது உண்மை.
தான் வெறுமனே ஒரு மனிதன்
என்னும் புரிதலோடு இறுதிவரை அவர் வாழ்ந்தார்.
வெறும் மனிதனாக இருந்துகொண்டே
அவர் மகாத்மாவானார்.
மகாத்மா என்றவுடனே
அவர் வெறும் மனிதர்தான் என்பதை
மறந்துவிடக் கூடாது.

*
குறிப்பு:
பிரபல கண்ணட எழுத்தாளர் யு. ஆர். அனந்தமூர்த்தி,
2007ஆம் ஆண்டு ஜூலை மாதம்
கர்நாடகாவின் உடுப்பியிலுள்ள MGM கல்லூரியில்
காந்தி ஆய்வு மையத்தைத் தொடங்கிவைத்து
ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது.
மொழிபெயர்ப்பு- திரு நஞ்சுண்டான்.

*
நன்றி: காலச்சுவடு

தகவல் தந்த  Taj Deen அவர்களுக்கு நன்றி 

ஜனாஸா தொழுகையின் போது ஓதுவது...

அஸ்ஸலாமு அலைக்கும்….

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது மறந்திருக்கலாம்....

அவர்களுக்காக இந்தப்பதிவு.....

1.முதல் தக்பீருக்குப் பின்,
_____________________________
முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

ஆதாரம்:- புகாரி, 1335
*****************************************
2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________
இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்.

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி ,4/39
**********************************************
3, 4. மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்ம ஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்.

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)

முஸ்லிம்: 1601.

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் செம்மொழி இதழ்

 செம்மொழி – சமூக இலக்கிய இதழ்

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் செம்மொழி இதழை வாசிக்க ...............
  1. செம்மொழி இதழ் ( July – September 2014 )
  2. செம்மொழி – சமூக இலக்கிய இதழ்

http://mudukulathur.com/?p=14335

Thursday, November 20, 2014

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 5

திப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது. ஜாதியின் பேரில் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த உயர்ஜாதித் தம்புரான்களுக்கு, தங்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரமான சுகவாழ்வு நீடிக்க அவர்களின் ஜாதிச் சடங்கு, சம்பிரதாயங்களை நிலைநிறுத்த வேண்டியது கட்டாயமாக இருந்தது. அதன் காரணமாக, ஆங்கிலேயர்களுடன் இணைந்து திப்புவிற்கு எதிராகப் பரவலான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர்.

உயர்ஜாதித் தீண்டாமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரானத் திப்புவின் சமூக சீர்த்திருத்த முயற்சிகள் அனைத்தும் இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளாகத் திரிக்கப்பட்டதோடு, திப்பு ஒரு இந்து மதவிரோதி என்று பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக வென்றெடுப்பதற்குப் பெரும் சவாலாக விளங்கிய திப்புவை அழிக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக்கு. அதே நேரத்தில், உள்நாட்டு மக்களிடையே உயர்ஜாதி மடாதிபதிகளால் திப்புவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்தப் பொய் செய்தி, ஆங்கிலேயருக்கு எதிரான திப்புவின் போராட்டத்தில் ஒரு பெரும் பகுதி மக்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணை செல்லும் நிலையை ஏற்படுத்தியது இந்திய வரலாற்றின் இருண்டபகுதி என்றே வர்ணிக்கலாம்.

Monday, November 17, 2014

'பெருநாள் காலை' - தாஜ்:

ஆனாலும் பாரு.. என் சின்னப் பொண்ணு மும்தாஜுக்கு, வீட்டோடு மாப்பிளையா பார்த்து கட்டிக் கொடுத்ததுக்கு பொறவு ஆண்டவனா கண்பார்த்து இவனை கொடுத்தான். எம் பேரன் இவனப் பாக்கிறப்ப, எம் மெவனப் பாக்குற மாதிரியே இருக்கு! அவனோட ஜாடை, நடை, அதே பேச்சு, புத்தியெல்லாம்கூட அப்படியப்படியே இருக்குதுன்னா பாத்துகியேன்!

*
சமயங்கல நினைச்சுப்பார்த்தா திக்குங்குது. இந்த துனியாவுல எல்லாம் ஹொதரத்தாதான் இருக்கு போயேன்! அல்லாதான் இவனுக்காவது நல்லப் புத்திய கொடுத்து நீடித்த ஆயுசயும் நிறைஞ்ஜ பரக்கத்தையும் கொடுத்து காவந்துப்பண்ணித் தரணும்."

Saturday, November 15, 2014

பாங்கோசை / - கவிஞர் அப்துல் கையூம்

 பாங்கோசை

நான் முதன் முறையாக மதினா சென்றபோது நள்ளிரவு மணி ஒன்றாகி விட்டது. “பைத்துன் நபவி” பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள இருப்பிடம் இதுவென்று சொல்லி எங்களை ஒரு ஹோட்டலில் இறக்கி விட்டார்கள். விடியற்காலை தொழுகைக்கு கிளம்பினோம். பள்ளிவாசலுக்கு எப்படி போவது? வழி தெரியாதே என்ற கவலை எனக்கு. ரிசப்ஷனில் வீற்றிருந்த எகிப்து நாட்டு பேர்வழியிடம் அப்பாவித்தனமாக “பள்ளிவாசலுக்கு எப்படி போக வேண்டும்?” என்று விசாரித்தேன். என்னை  அவர் ஒருமாதிரியாக ஏற இறங்க பார்த்தார். “விளங்காதவானாக இருப்பான் போலும்” என்று மனதிற்குள் அவர் என்னைப் பற்றி. நினைத்திருக்கலாம். “எல்லோரும் எப்படி போகிறார்களோ அப்படி போனால் போதும் பள்ளிவாசல் வந்து விடும்” என்றார். ஹோட்டலை விட்டு வெளியே வந்து பார்த்தபின்தான்  நான் இந்த கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை உணர்ந்தேன். காரணம், சாரை சாரையாக செல்லும் ஊர்வனங்கள் போல  ஆயிரக் கணக்கில் அன்பர்கள் பள்ளிவாசலை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் என் குடும்பத்தாரும் நேராக பள்ளிவாசல் சென்றடைந்தோம். அந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டபோது என் மனதில் உதித்த கவிதை இது:

Friday, November 14, 2014

தந்தையின் காலம் / தாஜ்

என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கப் படிக்கிறார்கள்.

வீட்டிலென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடு படிக்கிறார்கள்.

மண்ணிலென்
பாதம் பதியும்
இதம் வேண்டி
காலணிகளை விட்டுச் செல்ல
படிப்பாய் தெளிந்தறிகிறார்கள்.

குறுக்கீடு தவிர்க்க
நித்தமும் சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.

என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்கு
புலப்படாதது ஆச்சரியம்.

அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
என்னைக் கண்டு நான் நகலெடுத்த
என் கவிதைத் தொகுப்பொன்று
விரிந்து கிடக்கிறது
இன்னொரு புத்தகமாக.

காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை என்பதும்தான்
எத்தனை சந்தோஷமாக இருக்கிறது.

*
கவிதை காலம்: 1993
 Taj Deen ஆக்கம் தாஜ் தீன் அவர்கள்

வீரம் ....! / ராஜா வாவுபிள்ளை

 
வெட்டிச் சாய்ப்பது அல்ல விவேகமாய் செயல்பட்டு
வெற்றி வாகை சூடுவது யார் அந்த வீரன் !

வில்லங்கம் பண்ணாமல்
விரோதியை விரட்டி அடிப்பது வீரம்

தங்கு தடைகளை நீக்கி
தெளிவான பாதையில்
இலக்கை நோக்கி
வீறு நடை போட்டு அடைதல் வீரம்

சமூக அவலம் கண்டு
கொதித்தெழுந்து குரல் கொடுப்பது வீரம்

கோபமாய் இருக்கும் போது அமைதி கொண்டு பொறுமையை கையாளுதலே வீரம்

தன்னுடைய நிலைமையில், சக்தியில், பொருளாதாரத்தில் தாழ்ந்து இருப்பவர்களை
அரவணைத்து செல்வதே
வீரம்

போருக்கு தயாராக இருந்தாலும்
அமைதிக்கு முதல் தூதுவ னாய் இருப்பதுவே வீரம்

படைப்பினங்களுக்கு
அஞ்சாமல்
படைத்தவனை அஞ்சி
வாழ்வது வீரம்

 
ஆக்கம் ராஜா வாவுபிள்ளை அவர்கள்
 

Wednesday, November 12, 2014

எண்ணங்களும், நிய்யத்துக்களும் வெறுமை எண்ணங்களாக, மனதில் பதியாத நிய்யத்துக்களாகவேதான் நம்மில் பெரும்பான்மையினருக்கு !

பாவம், சோற்றுக்கு முழிக்கும் ஒரு பூனையும், வயிற்றுக்கு பிழைக்கும் ஒரு விறகு வெட்டியும் !
இன்று காலை, ஆஃபீஸுக்கு புறப்படும் நேரம், கடைசி ஏணிப்படிகளில் நடந்து கீழ் தளத்தை அடைந்து, அங்கிருந்து வெளியே புறப்படும் நேரம், எதிர்த்தாற்போல், இடது பக்கத்தில் பெரிய குப்பை பக்கட்டை காலி செய்து விட்டு அதை தோளில் சுமந்து கொண்டு வரும் குப்பைக்காரன், வலது பக்கத்தில், அப்படியே அடுப்புக்கரி கொண்டு தேய்த்து விட்டது போல், அத்தனை கருப்பாக ஒரு கரும்பூனை, சொல்லி வைத்தது போல், கொஞ்சம் சைடு எடுத்து கரெக்ட்டா நேர் குறுக்காக பாய்ந்து போகிறது, எப்படி இருந்திருக்கும் என் மனநிலை, எப்படியும் இருந்திருக்கவில்லை என்பதுதான் எந்த வியாதியும் பிடிக்காத என் புத்தி !

Sunday, November 9, 2014

"முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும்"- தங்கப் பதக்கம் வென்ற மாணவி!

விமான நுட்பப் பொறியியல் என்று வழங்கப் படும் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங் படிப்பில் அண்ணா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஷஃபீரா அனீக்கா என்ற மாணவி. தமிழகத்தின் நாகூரைச் சேர்ந்த அவருக்கு வாழ்த்துகள் கூறி ஒரு சிறு நேர்காணல் செய்தோம்.

ஷஃபீரா அனீக்கா, தமிழக முஸ்லிம் உலகின் கண்ணதாசன் என்று கருதப்படும் மறைந்த கவிஞர் நாகூர் சலீம்தம் பேத்தியாவார் என்பது சிறப்புக் குறிப்பு.

சிங்கையிலிருந்து கணிப்பேசி வழியாக தனது சிறிய தகப்பனார் ஜாஃபர் சாதிக் முன்னிலையில் அவர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:

வாழ்த்துகள் சகோதரி ஷஃபீரா!  இந்தப் படிப்பு (ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங்) பற்றி சொல்லுங்களேன்

Thursday, November 6, 2014

ஏஞ்சலினா ஜோலியின் முயற்சியில் மனிதம் வெல்லட்டும். வாழ்த்துவோம்.

உலகில் வாழும் மனிதர்கள் விஞ்ஞானத்தின் வியத்தகு வளர்ச்சியில் தனது எல்லாத் தேவைகளையும் இலகுவாக அனுபவித்து நாகரிகத்தின் உச்சியைத் தொட்டுவிட்டதாக நினைத்து வாழ்ந்துவரும் இதேக் காலத்தில்தான் கிட்டத்தட்ட 15 மில்லியன் எண்ணிக்கையில் உலகின் பல் பாகங்களில்
தனி மனித அடிப்படை உரிமைகளைக் கூட பெறமுடியாமல் நாடற்ற அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு எந்த நாட்டின் குடியுரிமையும் கிடையாது. இவர்களுக்கு கடவுச்சீட்டும் கிடையாது. ஓட்டுரிமையும் இல்லை.
இவர்கள் இருக்குமிடத்திலிருந்து வேறு நாடுகளுக்குப் பயணிக்கும் வாய்ப்பும் கிடையாது, எனவே இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் என்பதே எண்ணமுடியாப் பெருங்கனவே.

Monday, November 3, 2014

அரபு நாடுகளின் அரியாசனங்களில் ஜனங்களை அமர வைக்கும் வரை-அபு ஹசீமா வாவர்

மாமனிதர்களால்
மண்ணே மணக்கிறது
மண்ணே சிறக்கிறது !

பெருமானார் விட்ட
மூச்சால்
மதினா
மணக்கிறது !

அவர்களின்
பேரப்பிள்ளை
ஹுசைனார் விட்ட
மூச்சால்
கர்பலா
சிவக்கிறது !

ஒட்டுத்துணி அரசர்


யார் இவர்?

சுட்டெரிக்கும் சூரியன் – அவர்
பட்டு மேனியைச்
சுட்டுவிடுமோ என்று

நடைபயின்ற நாயகத்தை
குடைபிடித்த மேகத்தை
இடை மறித்து கேளுங்கள்
விடையைக் கூறும் !

     *     *     *

யார் இவர்?

வானில் உலாவரும்
வண்ண நிலாவை
வழிமறித்துக் கேளுங்கள்

தன்
தேகத்தையே இருகூறாய்
வகிர்ந்துக் காட்டும் ..

பிளந்துக் காட்டியதே – அந்த
பெருமான்தான் என
பெருமை கொள்ளும் !

வேண்டியவை....! வேண்டும் .

வேண்டியவை....!

உயிரும் உரமும்
உடலில் வேண்டும்
ஈகையும் ஈரமும்
உள்ளத்தில் வேண்டும்

கனிவும் கண்ணியமும்
பார்வையில் வேண்டும்
கூ ர்மையும் நேர்மையும்
கணிப்பில் வேண்டும்

LinkWithin

Related Posts with Thumbnails