குர்ஆன் செயற்பாட்டுக் குழு: புனித அல்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுவது, முஸ்லிமல்லாதவர்களையும் இஸ்லாத்தின் பால் ஈர்ப்புக் கொள்ளச் செய்யும் என உகண்டாவைச் சேர்ந்த குர்ஆனை மனனம் செய்த ஹாபிழும் காரியுமான ஒருவர் தெரிவிக்கின்றார்.
தெஹ்ரானில் இடம்பெற்று வருகின்ற 27ஆவது சர்வதேச குர்ஆன் போட்டியில் கலந்து கொண்டுள்ள உமர் அப்து பிசாசு தொடர்ந்து குறிப்பிடும் போது, புனித அல்குர்ஆனின் போதனைகள் மற்றும் கட்டளைகள் என்பவற்றின் படி செயற்படுவது, இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிம்மதியையும் விமோசனத்தையும் உறுதிப்படுத்துகின்றது. புனித அல்குர்ஆன் வசனங்களை அழகிய முறையில் ஓதும் போது, அவற்றைச் செவிமடுப்பது உள்ளங்களைக் கவர்ந்திழுக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் புனித அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதுவதுடன் மாத்திரம் தமது கடமையை சுருக்கிக் கொள்ளாமல் அதன் பரிசுத்த கட்டளைகளையும் எண்ணக்கருக்களையும் வாழ்வில் அமுல்படுத்தி சிந்தித்துணர வேண்டியதும் அவசியமாகும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.
தெஹ்ரானில் இடம்பெற்று வருகின்ற சர்வதேச குர்ஆன் போட்டி தொடர்பாகக் குறிப்பிட்ட அவர், இம்முறை போட்டியில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்துள்ளது என்றார்.
அல்ஜீரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச குர்ஆன் போட்டிகளிலும் பிசாசு கலந்து கொண்டிருக்கிறார். ஈரானின் சர்வதேச குர்ஆன் போட்டியில், உலகின் ஷீஆ இஸ்லாம் இஸ்லாமிய ஐக்கியத்தை விருத்தி செய்ய உதவுகின்றது எனும் கொடியுடன் கலந்து கொண்டுள்ளார்.
குவைத், அல்ஜீரியா, சுவீடன், டென்மார்க், கட்டார், மலேசியா, அவுஸ்திரேலியா, தூனிசியா, ஐக்கிய அரபு இராச்சியம், ஈரான், ஓமான், நதர்லாந்து, நைஜீரியா, லெபனான், உகண்டா, லிபியா மற்றும் பிரித்தானிய உள்ளிட்ட 60 நாடுகளைச் சேர்ந்த 43 ஹாபிழ்கள் மற்றும் 50 காரிகள் ஆகியோரின் பிரசன்னத்துடன், ஈரானின் 27ஆவது சர்வதேச குர்ஆன் போட்டி தெஹ்ரானில் இடம்பெற்று வருகின்றது.
இது ஜூலை 14ம் திகதி நிறைவு பெறும்.
No comments:
Post a Comment