சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக்கின் தனிநபர் தகவல் கொள்கையை ஜெர்மனிய அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த தளம் சட்டத்தை மீறுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெர்மனிய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் இல்ஸே அய்னர் ஜெர்மன் நாளிதழான போகஸ் என்ற இதழுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். இந்த தளத்தை உபயோகிக்காத நபர்களின் தனிநபர் தகல்களைச் சேமிப்பதை பேஸ்புக் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பேஸ்புக்கின் இலாபத்தில் ஒரு பகுதி சட்டத்தை மீறுவதன் மூலம் கிடைக்கிறது என்பது முக்கிய பிரச்சனையாகத் தனக்கு தோன்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தொடர்பில் இருப்போரின் தொலைபேசி எண்களையும் மற்ற தகவல்களையும் பேஸ்புக்கில் சேமித்து வைத்துக் கொள்கின்றனர். இத்தகவல்கள் அவருடைய சம்மதம் இல்லாமலேயே நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார்.
பேஸ்புக் தளத்தை உபயோகிக்காதவர்களின் தகவல்களையும் பேஸ் புக் சேமித்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனிய தகவல் பாதுகாப்பு அதிகாரிகள் பேஸ்புக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை கடந்த வாரம் தொடங்கி உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment