Sunday, July 25, 2010

சென்னை புகாரி ஓட்டலை மூட முயற்சி! கோர்ட் உத்தரவால் திரும்பி சென்றனர்


சென்னை: சென்னை அண்ணா சாலையில்   பிரியாணிக்கு புகழ்பெற்ற பிரபல புகாரி ஓட்டல்    உள்ளது. இந்த ஓட்டலில் சென்னை மாநகராட்சி சுகாதார   அதிகாரிகள்  திடீர் சோதனை நடத்திய போது அந்த ஓட்டலின் சமையற் கூடம் சுகாதாரமற்று இருந்ததாகவும், உணவுகள் தரமற்று  இருந்ததாகவும் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து புகாரி ஓட்டல்   நிர்வாகத்துக்கு மாநாகராட்சி சார்பில் 26 கேள்விகளுடன் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டது.  இந்நிலையில் திடீரென முன் அறிவிப்பின்றி திருவல்லிக்கேணி   மண்டல செயற்பொறியாளர், உதவி வருவாய் அலுவலர் ஆகியோர் தலைமையில் ஓட்டலை மூடி  சீல் வைப்பதற்காக சுகாதார அதிகாரிகள் சென்றனர். இந்த நடவடிக்கையின் போது    பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க முன் கூட்டியே ஓட்டல் முன்பு ஏராளமான காவல்துறையினர்    குவிக்கப்பட்டிருந்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள்  அங்கு சென்றதும் ஓட்டல் நிர்வாகத்தினர் ஓட்டலை மூட எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும்   பதட்டமும் ஏற்பட்டது. ஓட்டல் நிர்வாகம்  சார்பில் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்று இருப்பதாக  தெரிவித்தனர்.  கோர்ட்டு உத்தரவு நகலையும் அதிகாரிகளிடம் காட்டினார்கள்.


இதையடுத்து  ஓட்டலுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல்  திரும்பி சென்றார்கள்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails