Saturday, July 17, 2010

இலங்கையில், பெண்களுக்கான குர்ஆன் ஓதல் மற்றும் தஜ்வீத் கற்கை நெறி நிறைவு

இலங்கையில், பெண்களுக்கான குர்ஆன் ஓதல் மற்றும் தஜ்வீத் கற்கை நெறி நிறைவு
சர்வதேச குழு: இலங்கையில் இடம்பெற்று வந்த குர்ஆன் ஓதல் மற்றும் தஜ்வீத் தொடர்பான பெண்களுக்கான விசேட கற்கைநெறி நிறைவு பெற்றது.
இலங்கையிலுள்ள இஸ்லாமிய தஃவாவுக்கான உலக சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கற்கைநெறி, தலைநகர் கொழும்பிலுள்ள கொஸ்வத்த பிராந்தியத்திலுள்ள அல்நஜ்ம் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
அரபிக்.இஸ்லாமிய அழைப்பு இணையத்தளத்தின் தகவலின்படி, 52 பெண்கள் கலந்து கொண்ட இக்கற்கைநெறி, குர்ஆன் ஓதல், மதிப்பீடு, மற்றும் சரியான உச்சரிப்பு என்பன பற்றிய விளக்கங்களை அளித்தது,
அல்நஜ்ம் பள்ளிவாயலின் பிரதம இமாம் குறிப்பிடும் போது, இக்கற்கைநெறி, புனித அல்குர்ஆனையும் அதன் விஞ்ஞானம் மற்றும் தஜ்வீத் சட்டங்கள் என்பவற்றையும் கற்றுக் கொள்வதற்கு பெண்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்றார். உள்ளூர் பிரதேசங்களில் இவ்வாறான குர்ஆனிய கற்கைநெறிகளை நடத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.
பங்குபற்றியவர்களுக்கு, கற்கைநெறியின் முடிவில் வரவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் 63 வயதுடைய ஒரு பெண்மணியும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails