புதிய கல்லூரிகளை தொடங்க முன்வரும் முஸ்லீம்களுக்கு கல்லூரிகளுக்குத் தேவையான நிலங்களை வக்பு வாரியம் வழங்கும் என்று தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்தியா முழுவதும் 2020 ஆண்டுக்குள் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை சதவீதத்தினை 12.4 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை 700 ஆகவும், கல்லூரிகளின் எண்ணிக்கையை 25 ஆயிரமாகவும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபல் சமீபத்தில் கூறியிருந்தார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் புதிய கல்லூரிகளை தொடங்க முன்வரும் முஸ்லீம்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கல்லூரிகள் தொடங்குவதற்கான நிலங்களை தமிழ்நாடு வக்பு வாரியம் வழங்கும். இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு புதிய கல்லூரிகளை தொடங்கி முஸ்லீம் சமூகத்தை கல்வி வளர்ச்சியில் முன்னேற்றிட சேவையாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment