Saturday, July 17, 2010

இஸ்லாமிய பெருநாட்கள்

                    இஸ்லாமிய பெருநாட்கள்


உலகத்திலுள்ள மதங்கள் அனைத்தும் பெருநாட்கள் கொன்டாடுகின்றன. ஓவ்வொரு பெருநாளுக்கும் காரனங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தத்துவங்கள் கூறப்படுகின்றன. காலம் காலமாக இவை தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன. ஒன்று மதத் தலைவர்கள் அல்லது தீர்க்கதரிசி அவதரித்த நாளாக இருக்கும் அல்லது அந்த மதத் தலைவர் முக்தி பெற்ற நாளாகவோ, மரித்த நாளாகவோ இருக்கும். ஊலகத்தில் அநீதி தலை தூக்கி நின்ற போது அதை சம்ஹாரம் செய்ய பகவான் உலகத்திற்கு அவதாரமெடுத்து வந்த நாளாக இருக்கும் இப்படி சொல்லிக்கொன்டே போகலாம். வுpழா எடுப்பதற்கு ஒரு காரணம் அல்லது பின்னணி கற்பிக்கப்பட்டு அந்தந்த விழாக்களை எடுத்து அந்தந்த மதவாதிகள் மகிழ்வதைப் பார்க்கிறோம்.

ஓவ்வொரு பெருநாளும் ஒவ்வொரு விதமாக கொன்டாடபடுகிறது. அப்பெருநாளுக்குக் கற்பிக்கப்பட்ட காரணங்களையொட்டி விழா எடுக்கப்படுகிறது. அவைகளையொட்டிய முறைகள் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு பெருநாளுக்கும் புத்தாடைகள் - அதற்கு தகுந்தாற்போல் தின்பண்டங்கள் - சடங்குகள், சம்பிரதாயங்கள், களியாட்டங்கள் போன்ற அம்சங்கள் வகுக்கப்பட்டு முறையோடு இயக்கப்படுவதைப் பார்க்கிறோம். இத்தகை விழாக்கள் இங்கு மட்டுமல்ல, எல்லாப் பிரதேசங்களிலும், நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றன. ஒரே விழா எல்லைக்கு எல்லை மாறுபட்ட கருத்துக்களோடும் மாறுபட்ட டுறைகளோடும் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாத்தில் இரு பெருநாட்கள் வருகின்றன. ஒன்று ரம்ஜான் மற்றொன்று பக்ரீத். இவ்விரு பெருநாட்களையும் உலகத்தில் கொண்டாடப்படும் எந்த பெருநாட்களோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இத மற்ற பெருநாட்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை – காரணங்களில், தத்துவங்களில், நடைமுறைகளில் எல்லாம் தனித்து நின்று உலகத்துக்கு ஒரு புதுதத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

வுpழா எடுப்பதில் ஒரு வெற்றி பொதிந்திருக்கும் - தம் பாரம்பரியத்தில் ஒரு வெற்றிக்கு அறிகுறியாக விழா அமைந்திருக்கும். இதுதான் நடப்பு. ஆனால் இஸ்லாமிய பெருநாட்கள் உலக மாந்தர்கள் எல்லாம் பெருமிதம் கொள்ளும் வகையில் தியாகப் பிழம்புகளாக தம்மை ஆக்கிக் கொள்வதற்கும், ஆயத்தப்படுத்தி கொள்வதற்கும் ஓர் முன்னோடி போன்றதுதான் என்பது 1429 ஆண்டுகளாக நீருபிக்கப்பட்டுவிட்டது. தம்மையும், தம் செல்வத்தையும், தாம்பெற்ற அனைத்தையும் இவ்வுலகில் நம்மை படைத்து, பாதுகாத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்காக தியாகம் புரியத் துணிந்துவிட்டதின் பின்னர் ஏற்படும் ஆத்ம திருப்தியும், மகிழ்ச்சியும் இருக்கிறதேத அதை வெளிப்படுத்திக் காட்டுவதுதான் பெருநாள்.

காலம் காலமாக குழந்தை இல்லாமல் காலம் கடந்து முதுமையில் ஒரு அழகான ஆண்மகவைப் பெற்றெடுக்கிறார் நபி இப்ராகிம் (அலை) அவர்கள். உலக ஆசைகளையெல்லாம் அக்குழந்தையின் மீது கொட்டிப் பாசத்தால் நெஞ்சில் இருத்தி வளர்க்கிறார். அத்திருமகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை அத்தகையக் குலக்கொழுந்தை ஒரே குழந்தையை பருவமடையாத அந்த பாலகனைக் கழுத்தை அறுத்துத் தனக்காக குர்பானி – தியாகம் செய்யும்படி கூறுகிறான் அல்லாஹ். உலகம் அதுவரை கண்டிராத சோதணையின் உச்சக்கட்டம், தன்னால் படைக்கப்பட்ட மனிதன் - ஒரு நபி – தன்னை விட மற்றதை மதிக்கிறானா என்று சோதிக்க நாடிய அல்லாஹ் ஆணையிடுகிறான் அப்படி.

‘நான் என்ன, என் குழந்தை என்ன, என் குடும்பம் என்ன, நான் பெற்ற அனைத்தையும் உனக்காகத் தியாகம் புரிவேன்’ எனக்கூறி தான் பெற்ற பாலகனை, பாசங்கொட்டி வளர்த்த மழழைக் குழந்தையை கீழே கிடத்தி கூர்மையான தன் வாளை – கழுத்தின் மேல் செலுத்தத் துனிந்துவிட்ட அவரின் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அதன் மூலம் உலகத்துக்கு ஒரு படிப்பினையை அருளிவிட்டான். நரபலியை தடுத்தது மட்டுமல்ல, மனிதன் பிரபஞ்சங்கள் அனைத்தையும் படைத்து இயக்கி வரும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வுக்காக அனைத்தையும் தியாகம் புரிய சித்தமாக இருக்கக் கூடியவனே அடியான் எனக்கோடிட்டுக் காட்டிவிட்டான். அந்த வழிவந்த நாம், இத்தியாகத்தில் வெற்றிபெற்ற நாம், பக்ரீத் பெருநாளைக் கொன்டாடுகிறோம்.

அடுத்து ரம்ஜான் பெருநாள். இம்மாதத்தின் முப்பது நாட்களும் மனிதன் பகல் நேரத்தில் உண்னாமலும், பருகாமலும், புணராமலும் இருக்க கடமைப்பட்டவன். பகல் முழுவம் பசித்திருந்து, தாகித்திருந்து இச்சைகளை கட்டுபடுத்தி தன்னைத் தானே வருத்திக்கொள்வதன் மூலம், அல்லாஹ்வின் நல்லடியார்களின் கூட்டத்தில் தன்னை இனைத்துக்கொள்ள முயல்கிறான் மனிதன். இரவு பகல் விழிதிருந்து இறைவனை தொழுது, பொய் பேசாமல், புரம் பேசாமல் மட்டுமல்ல மனதார எண்ணாமலும் கூடத் தனனைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு அல்லாஹ் விதித்துள்ள கட்டளைகளை மேற்கொண்டு பொறுமையின் பிம்பமாய் அதே நேரத்தில் தியாகத்தின் சின்னமாய் முப்பது நாட்களையும் வெற்றிகரமாக கழிக்கின்றானே அதை எண்ணிப் பெருமைப்பட்டவனாக, அத்தகைய தியாகத்தில் வெற்றி பெற்றவனாக பெருநாளை கொன்டாடுகிறான் ஒரு முஸ்லிம். தனக்கென வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற அடிப்படை தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவான் வேண்டி, தான தர்மங்களைச் செய்தவனாக அதிலும் அனைத்தையும் சர்வ வல்லமை பொருத்தி அல்லாஹ்வுக்காக எதையும் செய்யமுடியும் என பக்குவத்தை அடைந்தவனாகப் பெருநாளை கொன்டாடுகிறான் முஸ்லிம்.

ஆக இந்த இரு பெருநாட்களையும் மற்ற பெருநாட்களோடு ஒப்பிட முடியாது - கூடாது. இப்பெருநாட்கள் தியாகத்தின் தியாகத்தின் அடிப்படையிலேயே, அத்தியாகத்தை செய்ததில் வெற்றி பெற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றன என்ற உண்மையைப் நாம் புரிந்துக்கொன்டால் நம் பெருநாட்களின் தத்வங்கள் நமக்கு புரிந்துவிடும்! புரிந்து கொன்ட அந்த தத்துவத்தின் அடிப்படையிலே நாம் நடைபோட ஆரம்பித்தால் தியாக உணர்வு நம்மை வழி நடத்தும். அந்த வழியிலே நாம் செல்வோமானால் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் நம்மை நேரான பாதையில் சீராக நடத்திவிட்டான் என்பது புரிந்துவிடும். ஆதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றி பெற்றவர்களாவோம்.
Source :http://muduvaihidayath.blogspot.com/2010/07/blog-post_3893.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails