Saturday, July 3, 2010

இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்களை ஓரங்கட்டிய செம்மொழி மாநாடு

கோயம்புத்தூர்: தமிழுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாநாட்டின் ஆய்வரங்க அமர்வுகளின்போது புலவர்கள் மற்றும் பாவலர்கள் ஆற்றிய சேவைகள் குறித்து குறிப்பிடப்படவில்லையென தமிழ் ஆர்வலரான ஸ்ரீநிவாசன் பழனிச்சாமி என்பவர் கூறியுள்ளார். பல்வேறு விடயங்களில் தமிழை மேம்படுத்துவதற்கு அவர்கள் தமது உயிர் மூச்சை இறுதிவரை கொடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். காய்த் இ மில்லத் என்றுபரிவுடன் அழைக்கப்படும் முஹமத் இஸ்மாயில் சாகிப்,1949 செப்டம்பர் 14 இல் அரசியல் நிர்ணய சபையில் தமிழை உத்தியோகபூர்வ மொழியாக்குமாறு பேசியிருந்ததை ஓய்வுவெற்ற வங்கியதிகாரி எம்.கோபாலகிருஷ்ணன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாறு மறந்துவிட்டது. காய்த் இ மில்லத் மறைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தமிழ்,இஸ்லாமிய இலக்கியத்தில் உமறுப்புலவரின் சீறாப்புராணம் பாரிய வெற்றியாக 17 ஆம் நூற்றாண்டில் கணிக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அது புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்று ஓய்வுபெற்ற தமிழ்ப் பண்டிதர் ஜோசப் சந்திரகுமார் கூறியுள்ளார்.
 http://www.inneram.com/201007049158/2010-07-04-02-21-12

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails