Wednesday, December 22, 2010

குற்றம் செய்வதில்தான் எத்தனை வகை !

படிப்பு வேறு, அறிவு வேறு. படிப்பு பணக்காரனாக வேண்டும் என்ற காரியத்திற்காக அல்ல . பணம் வாழ்வின் வசதிகளை அதிகமாக்கலாம் ஆனால் அது மகிழ்வினை தந்து விடாது .கல்வி தேடுவது வாழ்வின் அடிப்படை.ஆனால் இன்று படித்தவன் குற்றம் செய்வதில்தான் திறமையுடன் உள்ளான் . வழக்கறிஞர்கள் மற்றும் படித்தவர்கள்  நாட்டில் திருட்டுகொலை, கொள்ளை நடந்தியவர்களுக்கு ஆதராகவும் வாதாடுகின்றனர். ஆட்சி செய்பவரும் குற்றம் செய்பவராக இருக்கும் வரை  குற்றம்  செய்தவர்களுக்கு பெரிய தண்டனையளித்தால் மட்டும் அது குற்றவாளியைத் திருத்தாது.குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
இவர் ஊழல் முறைகேடுகளை அவர் சொல்லட்டும், அவர் ஊழலை இவர் சொல்லட்டும் . நாம் இந்த ஊழல் யார் அதிகம் செய்தார்களோ அவர்களின் திறமையினை ஊழல்களின் மேன்மைகண்டு அதனை ஊக்குவிக்கும் நோக்கில் புகழ்ந்து பாராட்டி சொல்வோம். பின்பு அவர்களுக்கு ஒட்டு போடுவோம். இதுதான் தொடர்  கதை - நம் கதி . நம் ஒட்டையே புரட்டிப் போடும் திறமைக்கு ஒரு பாராட்டு பட்டமும் கொடுப்போம் . அவர்களுக்கு சம்பளமும் அதிகம் கொடுக்க வரி உயர்த்த வழி செய்வோம்.

நன்னடத்தை என்பது பொதுவானது .அது  அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டும். (செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு நாடுங்கள் இனி எந்த தவறும்  செய்வதில்லை என உறுதி கொள்ளுங்கள்)
நல்ல பண்பு ,குணம் கண்டறியாத கல்வி குப்பை .
மனித நேயம் ,இறை அன்பு ,மார்க்கம் காட்டிய வழி  இளம் வயதிலேயே சொல்லித் தரப் பட வேண்டும். சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.
பயன் தரும் கல்வி ,அறிவு என்பது சுய நலம் கொண்டதல்ல .அது மனித நேயம் கொண்டது .குடும்ப நலமும் மனித நேயத்தில் அடங்கும். தர்மம் அடுபங்கரையிலிருந்து ஆரம்பமாகின்றது .
பணம் நாடி மற்ற நாடு செல்வோர் தன் குடும்பம் விடுத்து சென்று தம் மக்கள் மழலை மொழி கேட்க முடியாமல்  தவிப்பவர்களில்  கல்வி கற்றவரையும் ,படித்தவரையும் காணலாம் .


1 comment:

தமிழ்மகன் said...

விண்டோஸ் XPக்கு விரைவில் மூடு விழ - மைக்ரோசாப்ட் அறிவிப்பு --- http://mytamilpeople.blogspot.in/2012/06/microsoft-ends-support-of-windowsxp.html

LinkWithin

Related Posts with Thumbnails