சிந்தையில் ஹைக்கூ இரா .இரவி
பெரிய மீன்கள்
சின்ன மீன்களைத் தின்றது
அரசியல்
இலவசங்களால்
வசமாக்கி திருடினர்
மூளையை
மாற்றுங்கள் பெயரை
தொலைக்காட்சி அன்று
தொல்லைக்காட்சி என்று
பதக்கங்கள் பெற்றும்
பெருமை இல்லை
மேடையில் கொலைபாதகன்
நிதிக்கு அதிபதியானால்
சில நீதிபதியும்
உன் வசம்
இயக்கையைச் சிதைக்க
மனித இனம் சிதைந்தது
சுனாமி
பெண்கள் இட ஒதிக்கீடு
உள்ஒதிக்கீடு இருக்கட்டும்
மன ஒதிக்கீடு தருக
பெரிய மனிதர்களிடமும்
சின்னப்புத்தி வளர்க்கும்
சின்னத்திரை
குழந்தைகளுக்குக் கொடுக்கும்
குச்சி மிட்டாய்
வாக்களிக்கப் பணம்
கோடிகள் கொள்ளை அங்கே
வறுமையில் தற்கொலைகள் இங்கே
வலிமையான பாரதம்
முதலிடம்
பெண்களை அழவைப்பதில்
தொலைக்காட்சிகள்
பித்தலாட்டம்
மூலதனம்
ராசிக்கல் சோதிடம்
விளக்குமாறுக்கு பட்டுக்குஞ்சம்
ஆபாச நிகழ்ச்சிகளுக்கு
செந்தமிழ்ப்பெயர்
வேதனையிலும் வேதனை
போகப் பொருளாகச் சித்தரிப்பதை
பெண்களே ரசிப்பது
குடியால் கோடிகள்
குடிமகன் தெருக்கோடியில்
குடு்ம்பம் நடுத்தெருவில்
நல்ல முன்னேற்றம்
சீருடையில் மாணவன்
மதுக் கடையில்
என்று தெளியுமோ
போதையில் பாதை மாறிய
தமிழன்
விளைநிலங்களும்
மின்சாரமும் இலவசம்
வெளிநாட்டவர்க்கு
விரைவில் கிட்டும்
உலக அளவில் முதலிடம்
ஊழல்
கொடிகளை விட
கோடிகளே முக்கியம்
அரசியல்
சமாதானமானார்கள்
சண்டையிட்டப் பெற்றோர்கள்
குழந்தையால்
முந்தைய சாதனையை
முறியடித்தனர் அரசியல்வாதிகள்
மெகா ஊழல்
யாரும் வாங்காமலே
மலர்ந்தன பூக்கள்
வாடினாள் பூக்காரி
இரா .இரவி
Source : http://eraeravi.wordpress.comசிந்தையில் ஹைக்கூ இரா .இரவி
இரா.இரவி தமிழகக் கவிஞர். இவரது கவிதைகள் முழுவதையும் கவிமலர் என்ற இணையதளத்தில் பதிப்பித்து உள்ளார். இந்த இணையத்தில் கவிதைகள், ஹைக்கூ (குறுங்கவிதைகள்), நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கிய விழா புகைப்படங்கள், விருந்தினர் புத்தகம், ஆங்கிலத்தில் ஹைக்கூ கவிதைகள் என பல்வேறு பகுதிகள் இடம் பெற்றுள்ளன. மதுரையில் சுற்றுலாத் துறையில் பணி புரிந்து வருகிறார்.
வெளிவந்த நூல
கவிதைச் சாரல் 1997
ஹைக்கூ கவிதைகள் 1998
விழிகளில் ஹைக்கூ 2003
உள்ளத்தில் ஹைக்கூ 2004
என்னவள் 2005
நெஞ்சத்தில் ஹைக்கூ 2005
கவிதை அல்ல விதை 2007
இதயத்தில் ஹைக்கூ 2007
சிறப்புக்கள்
26-01-92 குடியரசு தின விழாவில் சிறந்த அரசுப் பணியாளர்களுக்கான விருதினை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்றுள்ளார்.
.
இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்
.
இவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது
.
சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
.
இவரது 100க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளை விஞ்ஞானி நெல்லை சு. முத்து "புத்தாயிரம் "தமிழ் ஹைக்கூ என்ற நூலில் மேற்கோள் காட்டி உள்ளார்.
இவரது இணையத்தளக் கவிதைகளை சென்னை இலயோலா கல்லூரி மாணவர் இரவிக்குமார் ஆய்வு செய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.
.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ்த்துறை மாணவர் அன்பு ஷிவா இவரது கவிதைகளை ஆய்வு செய்து வருகிறார்
.
கவிஞர் இரா.இரவியின் கவிதை நூல்களை மாற்றுத்திறனாளி திரு.பிரகாசம் M Phil. ஆய்வு செய்து வருகிறார்.
2 comments:
mikka nandri
அம்மா ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
காணிக்கைக் கேட்காத
கண் கண்ட கடவுள்
அம்மா
நடமாடும்
தெய்வம்
அம்மா
கருவறை உள்ள
கடவுள்
அம்மா
உயிர் தந்த உயிர்
உயிர் வளர்த்த உயிர்
அம்மா
மனதில் அழியாத ஓவியம்
மறக்க முடியாத காவியம்
அம்மா
ஆடுகளும் மாடுகளும் கூட
உச்சரிக்கும் உயர்ந்த சொல்
அம்மா
வாய் பேசாத ஜீவன்களும்
பேசிடும் ஒரே சொல்
அம்மா
மகனின் வாழ்வு ஒளிர்ந்திட
உருகிடும் மெழுகு
அம்மா
உச்சங்களின் உச்சம்
உலகின் உச்சம்
அம்மா
அன்பின் சின்னம்
அமைதியின் திரு உருவம்
அம்மா
திசைக் காட்டும்
கலங்கரை விளக்கம்
அம்மா
கரை சேர்க்கும் தோணி
உயர்த்திடும் ஏணி
அம்மா
நேசம் பாசம் மிக்கவள்
வேசம் அறியாதவள்
அம்மா
*
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Post a Comment