முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம் |
"பேட்டை முதலாளி" என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும் தோல் வியாபாரத்தில் தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்தவருமான கண்ணியமிகு காயிமுஸ்லிம் லீக் லிம்களை இந்திய அளவில் தலைநிமிர்ந்து நிற்க வைத்த பெருமை படைத்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி. நாட்டுப்பற்று மிக்கவர். தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவுப் பகலவன் பெரியார், ஏழைப்பங்காளன் காமராஜர் போன்றவர்களுடன் இணையாகப் பேசப்பட்டவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ஆம் ஆண்டு நான் புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எவரும் எதிர்பார்க்காத அமோக வெற்றியை ஈட்டியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பினை ஏற்றபோது குரோம்பேட்டையிலிருந்த காயிதே மில்லத் அவர்களது வீடு தேடிச் சென்று வாழ்த்துப் பெற்றார். அந்த அளவிற்கு உயர்ந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாஹிப். தமது நீண்ட மேலாடையில்(ஓவர்கோட்) மெலிந்த உருவமானாலும் உயர்ந்து விளங்கினார். |
Thursday, March 31, 2011
ஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே?
Labels:
காயிதே மில்லத்,
முஸ்லிம் லீக்,
ராஜாஜி
Monday, March 28, 2011
உலக அழகிக்கு முஸ்லிம் பெண் போட்டி !
இங்கிலாந்து, மன்செஸ்டரில் வசிக்கும் சன்னா புஹாரி என்ற 24 வயதுடைய முஸ்லிம் பெண் (பெயர் தாங்கி) முதன் முதலில் உலக அழகிக்கு போட்டி போடப் போவதாக தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து முஸ்லிம் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . ஆனால் இஸ்லாமியர்களை அவமதிக்கும் உள்நோக்குடன் அந்த பெண்ணை உலக அழகியாக தேர்ந்தெடுப்பார்கள்.
Some commentators have pointed out my alleged hypocrisy in on the one hand telling the likes of reptilian creature Phillip Hollobone MP who wants to ban the Niqab to get the hell out of a Muslim Sisters wardrobe with my opposition to a beauty pageant.
LM was one of the first to break the news about Shanna Bukhari the Muslim beauty contestant from Rochdale who wants to represent Britain in Miss Universe.
Some commentators have pointed out my alleged hypocrisy in on the one hand telling the likes of reptilian creature Phillip Hollobone MP who wants to ban the Niqab to get the hell out of a Muslim Sisters wardrobe with my opposition to a beauty pageant.
LM sees no contradiction or inconsistency in my view. Surely all reasonable folk can see the distinction between ones normal and customary day to day cultural attire with a "beauty event" whose sole purpose is sexual gratification of men. My opposition is not ultimately focused on Shanna Bukhari but on a "beauty pageant" that seeks to sexually titillate men in an event that is decades past it's sell by date.
Read moreFriday, March 25, 2011
இஸ்லாம் பற்றி அறிஞர் அண்ணா
என்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான். என்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது. சில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள்ளிவிட்டது. ஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.
எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல! நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து, குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது. திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
நன்றி : vapuchi.wordpress.com/அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா
குழந்தையின் கண்கள்
கண் பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 4
இந்த நிலையில், பிறந்த குழந்தையின் கண்களின் அமைப்பு பற்றியும் அதன் கண்களில் ஏற்படும் கோளாறுகள் பற்றியும் பேசுவோம்.
பிறந்த குழந்தையின் கண்கள், சிறிதாகக் கோடு கிழித்தாற்போல் இருக்கும். ஆனால், குழந்தையின் கண்களின் வளர்ச்சி, உடம்பில் உள்ள மற்ற பாகங்களை விட, வேகமாக இருக்கும். நான்கு வயதிற்குள் கிட்டத்தட்ட 80% வளர்ச்சி முடிவடைந்துவிடும்.
பிறந்த நிலையில் குழந்தைகளின் கண்கள் தூரப் பார்வை என்ற நிலையில் இருக்கும். கண்ணின் உருவ வளர்ச்சி ஏற்படும் போதுதான், அது இயல்பான நிலையை எட்டும்.
குழந்தைகளின் குறும்பான கரு வண்டு போன்ற கண்கள், நிறைய மேஜிக் வேலைகளையும் செய்யும். திடீரென்று மாறுகண் போல கண்களை உள்நோக்கிவைத்துக் காண்பிக்கும். ‘‘ஐயோ நம் குழந்தைக்கு மாறுகண் உள்ளதோ?’’ என்று பதறி தாய் பார்ப்பாள். ஆனால், அதற்குள் கண்களை நேராக்கி தாயைப் பார்த்து குறும்புச் சிரிப்பு ஒன்று சிரிக்கும். நாம் கண்டது கனவா? அல்லது நனவா? என்று தாய் தன் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டு பார்ப்பது போல, அடிக்கடி இது போல் நடக்கும்.
பெற்றோர் இதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. குழந்தைகள் பிறந்து 6 மாதத்திலிருந்து 9 மாதம் வரை தங்களது கண்களை, மூக்கை நோக்கி கொண்டு செல்வது மிகவும் இயல்புதான். அது வளர வளர இது குறைந்து கொண்டே வந்து பின்னர் இயல்பாகி விடும்.
அதென்ன துணிப்பை போல கண்ணீர்ப் பை?
புதிதாகப் பிறந்துள்ள பட்டுக் குழந்தை அழுதால், 3 மாதங்கள் வரை சத்தம்தான் வரும் கண்ணீர் வராது.
Labels:
கண் பார்வை,
குறும்புச் சிரிப்பு,
பிறந்த குழந்தை
Wednesday, March 23, 2011
அனைத்துப் பிரிவு பொறியியல் மாணவகளுக்கும் இலவச ‘லேப்டாப்’: திருவாரூரில் கருணாநிதி அறிக்கை!
"தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
திருவாரூரில் நேற்று தி.மு.க., கூட்டணி சார்பிலான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தி.மு.க., தலைவரும், வேட்பாளருமான கருணாநிதி, எந்த மண்ணில் நான் தோழர்களோடு விளையாடி கழித்தேனோ, எந்த மண்ணில் தோழர்களோடு படித்தேனோ, அந்த மண்ணில் வேட்பாளராக நிற்க, எனக்கு ஏற்பட்ட ஆசையின் காரணமாக நான் இங்கு நிற்கிறேன்.
Labels:
கட்டப் பஞ்சாயத்து,
பஸ் பாஸ்,
லேப்-டாப்
Tuesday, March 22, 2011
படித்துப்பாருங்க ! பகிர்ந்துக்கொள்ளுங்க !
உங்கள் கண்களை மூடிக்கொண்டு, இதயத்தை சற்றுதிறந்து வைத்துக் கொள்ளுங்கள் ... இப்போது கற்பனையில் உங்கள் முன்னால் ... ஓரு ஜனாஸா, நான்கு பேர் நான்கு மூலைகளையும் சுமந்தவண்ணம் உங்களை நெருங்கி வருகின்றனர். உங்கள் முன்னிலையில் ஜனாஸா வை...க்கப்படுகின்றது. அதற்கான தொழுகையை நிறைவேற்றுவதற்காக அனைவரும் அணிவகுத்து நிற்கின்றனர்.. நான்கு தக்பீர்கள் சொல்லப்படுகின்றன. கடைசி த்தக்பீருடன் தொழுகை முடிகின்றது. இப்போது உங்கள் மனதில் ஒரு நெருடல் ... அந்த மையித் யாருடையது என்பதை பார்க்கவேண்டும் போல் ஓர் உணர்வு. அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்கள். அதன் முகத்தை மூடியிருக்கும் அதன் திறையை மெதுவாக அகற்றுகின்றீர்கள். ? ? ? இப்போது ... இப்போது ... நீங்கள் பார்த்தது யாரையோ அல்ல உங்கள் சொந்த முகத்தைதான் ! ! ! நீங்கள்தான் அங்கே மையித்தாக வைக்கப்பட்டுள்ளீர்கள். ஆசைப்பட்டு உங்களை மாய்த்துக்கொண்டு உழைத்துத் திரிந்த உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது. மாடிக்கட்டடங்கள் கட்டுவதற்காக ஹஜ் போகாது சேர்த்த உங்கள் பணம் பிரயோசனமற்றதாகிவிட்டது.
தொழும் நேரங்களை மறந்த்து நீங்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் வீணாகிவிட்டது.. உங்கள் ஆடம்பரவாகனங்கள், குழந்தைச் செல்வங்கள், அன்புமனைவி ... எல்லாமே முடிந்துவிட்டது. இப்போது உங்களுக்காக எஞ்சி இருப்பது நீங்கள் உடுத்தி இருக்கும் உங்கள் கFபன் பிடவைமட்டுமே! உங்கள் உற்றார் உறவினர்கள் உங்களை சுமந்து உங்கள் நிரந்ததர வீட்டில் வைத்துவிட்டார்கள். ஒரு பிடி மண் உங்கள் மேல் விழுகிறது. உலகமே இடிந்து விழுந்துவிட்டது போல் உணர்கிறீர்கள். கொஞ்சமாகத் தெரிந்து கொண்டிருந்த வெளிச்சம் இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது. இந்தநிமிடம் .... காரிருளில் நீங்கள் மட்டுமாக தனித்துவிடப்பட்டுவிட்டீர்கள் ... எல்லோரும் நடந்துசொல்லும் நிலமட்டத்திற்கு கீழால் ஆரடி நிலத்தில் நீங்கள் மட்டும் ... நீங்கள் மட்டும் தனித்துவிடப்பட்டுவிட்டீர்கள். காசோ பணமோ, குழந்தைகளோ, மனைவியோ இல்லாததனிமை ... குறந்தபட்சம் ஓர்கையடக்கத் தொலைபேசியாவது, இல்லாததனிமை ... இரண்டு மலக்குமார் உங்களை நோக்கிவந்து கொண்டிருக்கிறார்கள் ... இப்போது நீங்கள் என்ன ? பதில் கூறத்தயாராகி இருக்கின்றீர்கள் ... அந்த நிமிடத்தை கொஞ்சம் கற்பனையில் கொண்டுவந்து, (இந்தக்கேள்விகளை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள் ...) நான் உண்மையான ஒருமுஃமீனா ??? குரானின் ஒளியில் வாழ்கிறேனா ?? தொழுகையை விடாது தொழுகிறேனா ?? வருடம் ஒரு முறை வரும் ரமலானில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கின்றேனா ?? கடமையான ஹஜ்ஜை உரியமுறையில் நிறைவேற்றுகின்றேனா ? போன்ற இன்னோரன்ன கேள்விகளுக்கு ஆம் என்ற விடையை தைரியமாக கூறப்போகின்றீர்களா ? இல்லை ... காலத்தை வீணாகக் கடத்திவிட்டேனே ... ஒரு முறையாவாது அல்லஹ்வின் திருப்பொருத்தத்திற்காக ஹஜ் செய்திருக்கலாமே, 500/= நோட்டுக்களை விளம்பரத்துடன் கொடுத்ததற்குப்பதிலாக, யாருக்கும் தெரியாமல் நன்மைகளை கொள்ளை அடித்திருக்களாமே.. என் நோயை சாட்டுவைத்து நோன்புகளை விட்டுவிட்டேனே, கொஞ்சம் மனச்சாட்சிக்கு பொருத்தமாக நடந்து கொண்டிருக்களாமே.. வட்டி எடுக்காமல் லாபமோ நட்டமோ வியாபாரத்தையே முழுமனதாக செய்திருக்களாமே.. குரான் கூறிய ஹிஜாபின் வாழ்க்கையை வாழ்ந்திருக்களாமே அன்னிய ஆடவர்களின் முன்னால் என் அழங்காரத்தை மறைத்து கணவனுக்கு மட்டும் காட்டி இருக்கலாமே ... குழந்தைகளை சிறந்தமுறையில் வளர்த்திருக்கலாமே.. தொலைக்காட்சியின் முன்மண்டியிட்டதற்குப்பதிலாக சுஜூதில் இறைவனை நெருங்கி இருக்கலாமே..
தொலைபேசியில் அரட்டை அடித்ததற்குப்பதிலாக குரானுடன் உரையாடி இருக்களாமே, இல்லைஏதாவதுபயனுள்ளபுத்த்கத்தைவாசித்துஇருக்களாமே.. என கைசேதப்படப் போகின்றீர்களா?????? சிந்தியுங்கள்!! உலக வாழ்க்கை என்பது ஒரு முறைதான், அதுகாத்திருக்கும் ஒரு இடமல்ல.. காத்திருந்தாலும் இழந்தால் மீண்டும் கிடைப்பதில்லை. இம்மை என்பது ஒரு பயணம் தாமதிக்காமல் எம்மை மறுமையின் வாசலில்கொண்டு சேர்த்திடும்.. அந்தப் பயணத்தில் கண் மூடித்தனமாய் காலத்தை கழிக்காமல் திட்டமிட்டு எம்மை நாம் வளப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல்.. எம்வாழ்வும் இவ்விறைவாக்குகளின்பிரதிபளிப்பாகிவிடும். நஊதுபில்லாஹிமின்ஹா !

தகவல் Hassane Marecan
by: Salaam Indhia
Sunday, March 20, 2011
Dr. H.M. நத்தர்சா கவிதை படிக்கிறார் @ Pothigai TV.
சென்னை புதுக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மு.நத்தர்சா அவர்கள் படைப்பிலக்கியவாதி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வழங்கியுள்ளார். புதுவையரசின் 1996- ஆம் ஆண்டிற்கான கம்பன் புகழ்ப்பரிசு பெற்றவர். வரலாற்று ஆய்வுநூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக் கோவைகளில் இக்கால இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் குறித்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இஸ்லாமிய சிறுகதைகள் குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Source
Source
சவூதி: சலுகைகளின் சர்க்கரை மழை!
சவூதி: சலுகைகளின் சர்க்கரை மழை!
ஆளும் வர்க்கத்திற்கெதிரான மக்கள் கிளர்ச்சி அரபுநாடுகளில் ஆங்காங்கே தொடர்ந்துவரும் நிலையில், அடுத்துள்ள ஏமனிலும், பஹ்ரைனிலும் நடப்பதன் பக்க விளைவுகள் பெரிய அரபு நாடான சவூதியிலும் ஒருசில பகுதிகளில் மிகக் குறைவான அளவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உணரப்பட்டன.
இந்நிலையில், சவூதி அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மண்ணின் மைந்தர்களிடம் தொலைகாட்சி வழியே பிரத்யேக உரையொன்றை நிகழ்த்தினார். இறைவனுக்கு அடுத்தபடியாக, அரபு தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தன் குடிமக்களுக்கு மனமுவந்து நன்றி தெரிவித்த சவூதி மன்னர், தான் மனம்திறந்து உரையாடுவதாக அப்போது கூறினார். மக்களே தன் கவுரவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதில், குடிமக்களுக்கான அநேக சலுகைகளை அள்ளி இரைத்துள்ளார்.
சர்க்கரைப் பந்தலில் தேன் மழைப் பொழிந்ததைப் போன்ற அந்த சலுகைகள் விவரம்:

Tuesday, March 15, 2011
2011 ஹஜ் பயண விண்ணப்பங்கள் நாளை முதல் கிடைக்கும்!
"2011 ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வழங்கப்படும்" என்று தமிழ் நாடு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.
"தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ் 2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை(நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011(நாளை) முதல் பெற்றுக் கொள்ளலாம். அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில்,
* ஒரு குழு/உறையில் விண்ணப்பங்கள், ரத்த-உறவு முறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும். இவ்வுறையி/குழுவில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.
தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் !
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும். (அல் குர்ஆன்-62:9)
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (அல் குர்ஆன்-62:10)
மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் மிகச் சிறந்தது ஜுமுஆ நாளாகும்.
[நூல் - முஸ்லிம்]
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறு நாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்,
தியானம் செய்யுங்கள்,
தொழுகை
Monday, March 14, 2011
அமீரக தமிழ் மன்றம் மகளிர் நாள் விழா
மகளிரே!! வாருங்கள்!!
அமீரகத் தமிழ் மன்றம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
பெருமையுடன் வழங்கும்
முழுக்க முழுக்க மகளிருக்காக
மகளிரே நடத்தும் மகளிர் நிகழ்ச்சி
ஒரு பிரபலமான பெண்மணி முன்னிலையில்
வெள்ளிக்கிழமை 6 மே 2011
* நீங்கள் கலந்து கொள்ள ஆர்வமாயிருக்கிறீர்களா?
* · உங்களது தனித்திறமையை உலகிற்குக் காட்ட வேண்டுமா?
* · வித்தியாசமான சிந்தனைகளை வெளிப்படுத்த விருப்பமா?
* · சவால்களைச் சந்திக்கும் தைரியம் இருப்பவரா?
* · கவர்ச்சிகரமான பரிசுகளை அள்ளிச்செல்ல வேண்டுமா?
உங்களைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்

அமீரகத் தமிழ் மன்றம்,
மகளிர் நிகழ்ச்சி
Saturday, March 12, 2011
Thursday, March 10, 2011
சக்கோலி (கோழிக் கறியை ரோஸ்ட் செய்ய)
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
அரிசி மாவு - 1/2 கிலோ
தேங்காய் - 2 (சிறியது)
மிளகுத் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகப்பொடி (சோம்பு) - 2 டேபிள் ஸ்பூன்
மல்லிப் பொடி - 1/2டேபிள் ஸ்பூன்
பல்லாரி(பெரிய வெங்காயம்) - 2
சின்ன வெங்காயம் - 15
கறுவா - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 3
இஞ்ஜி, பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.
முன்னேற்பாடு :
தேங்காய் - 1, மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, பெருஞ்சீரகப்பொடி- 1 டேபிள் ஸ்பூன், கறுவா ஆகியவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை :1. கோழிக் கறியை ரோஸ்ட் செய்ய:
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித்தழையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கோழிக் கறியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறுவா, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றுடன் இஞ்ஜி, பூண்டு பேஸ்ட் போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கும் பொழுது 2 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும். அதில் தக்காளியைச் சேர்த்து நன்கு கரையும் வரை வதக்கவும்.
வதங்கிய பின் கோழிக் கறித் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பிறகு மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்த் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன், பெருஞ்சீரகப்பொடி (சோம்பு) - 1 டேபிள் ஸ்பூன், மல்லி பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும். கோழிக் கறி வெந்தவுடன் மல்லி இழை தூவி இறக்கவும்.
Labels:
கிச்சன,
சமையல்,
மகளிர் உலகம்
Tuesday, March 8, 2011
காங்கிரஸுக்கான கூடுதல் மூன்று இடங்களை திமுக, பாமக, முஸ்லிம்லீக் பகிர்ந்தளிக்கும்!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிகமாக கோரிய மூன்று தொகுதிகளைத் திமுக கூட்டணியிலுள்ள திமுக, பாமக மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவை கட்சிக்கொரு தொகுதியாக பகிர்ந்தளிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி மு க - காங்கிரஸ் கூட்டணியின் பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாக இன்று டெல்லியில் சோனியாகாந்தி வீட்டில் பிற்பகல் தொடங்கியது.
இதில் தி.மு.க. சார்பாக மு.க. அழகிரி மற்றும் தயாநிதிமாறனும் காங்கிரஸ் சார்பாக பிரணாப் முகர்ஜி, அகமது பட்டேல் மற்றும் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகவும், காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் ஆலோசனைக்குப்பிறகு டெல்லியில் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரசுக்கு,அக்கட்சி கோரியபடி தான் நிர்ணயித்த தொகுதிகளை விட மூன்று தொகுதிகள் அதிகமாக தி.மு.க.ஒதுக்கியுள்ளது.
காங்கிரசுக்கு,அக்கட்சி கோரியபடி தான் நிர்ணயித்த தொகுதிகளை விட மூன்று தொகுதிகள் அதிகமாக தி.மு.க.ஒதுக்கியுள்ளது.
அதிகமான மூன்று தொகுதிகள் பாமக விடமிருந்து பெற்றுத் தரப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில், அதற்கு பாமக எதிர்ப்புத் தெரிவித்தது.
இந்நிலையில், கூட்டணி கட்சியினரிடையே நடந்த பேச்சு வார்த்தையினைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (1), முஸ்லீம் லீக் (1) தொகுதிகளை விட்டுத்தர விருப்பம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source : http://www.inneram.com/2011030814188/dmk-pmk-and-muslim-leegue-will-share-for-congressஇசைமுரசை இசை மூலம் அதனைச் செய்ய வைத்திருக்கிறான்
சுமார் 15 ஆன்டுகளுக்கு முன் ஈரோடு என் வாசகி சகோதரி மும்தாஜ் பஷீரின் மகன் திருமணத்துக்கு வாழ்த்துரை வழங்க குடும்பத்துடன் சென்றிருந்தேன். அத்திருமணத்தில் கச்சேரி நிகழ்த்த அண்ணன் இசைமுரசு அவர்கள் வந்திருந்தார்கள். இருவரும் ஒரே லாட்ஜில் தங்கியிருந்தோம். அண்ணன் மாடிப்படியில் சற்றே ச்றுக்கி விழ, காலில் நல்ல அடி பட்டு வீங்கிவிட்டது. மும்தாஜின் கணவர் பஷீர் பதறிப்போனார். என்னிடம் இருந்த வலி மருந்துகளைக் கொடுத்தேன். கச்சேரி கூடத் தேவையில்லை. நீங்கள் மணமக்களை வாத்திவிட்டுச் செல்லலாம் என்றார். ஒப்புக் கொள்வது போல மேடைக்கு வந்த அண்ணன், வாத்துரை வழங்கினார். உடல் சுகவீனம் காரணமாக ஓரிரு பாடல்கள் மட்டும் பாடுவதாகச் சொல்லி விட்டு கச்சேரியை ஆரம்பித்தார்… பாடினார் பாடினார்… பாடிக்கொண்டே இருந்தார். வழக்கம் போல் கச்சேரி முடிக்கும் நேரம் வரை பாடிமுடித்துவிட்டுத்தான் விடைபெற்றார்… மறக்க முடியாத நிகழ்ச்சி. இசைமுரசு போன்றவர்கள் எப்போதாவது அல்லாஹ் சமுதாயத்துக்கு அளிக்கும் அன்பளிப்பு. அவரைப் போன்றவர்களை பிறருடன் ஒப்பிடுவது சரியல்ல.
மார்க்கத்தை- வரலாற்றை மக்களுக்குக் கொண்டுசெல்வதில் பல வழிகள் உள்ளன. அல்லாஹ் இசைமுரசை இசை மூலம் அதனைச் செய்ய வைத்திருக்கிறான்.அதனை அவர் மிக நிறைவாகச் செய்துகொண்டிருக்கிறார்.
குறைசொல்லுபவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்…. இயங்குபவர்கள் இயங்கிக் கொண்டே இருப்பார்கள்.
ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிக்கும் தொழிலை நகர்ப்புரத்தில் செய்யாமல் சொந்தக் கிராமத்தில் செய்கிறான் என்றார்கள்… சனி ஞாயிறுகளில் கூட்டத்தில் பேசுவதற்காக ஆஸ்பத்திரியை விட்டுவிட்டு ஊர் ஊராக சுற்றித் திரிகிறான் என்றார்கள்.
நான் எனக்குச் சரியென்று பட்டதைச் செய்தேன் … செய்துகொண்டிருக்கிறேன்.
ஒரு முஸ்லிம் தனக்காக மட்டும் வாழ உரிமை இல்லை… சமுதாயத்துக்காக வெளியே வந்து மெனக்கட வேண்டிய அவசியம் இருக்கிறது…. அதன் பயனை செயல்படும்போதுதான் புரிந்துகொள்ள முடியும்… நம் செயல்பாடுகள் சரியான வழியில் செல்லும்போது இத்தகைய இடையூறுகலைப் பொருட்படுத்தக் கூடாது…

இசைமுரசு அண்ணன் சமுதாயத்துக்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து.
அல்லாஹ் அவர்களுக்கு எல்லா சிறப்புக்களையும் அளித்து அரவணைத்திருக்கிறான்.
டாக்டர் ஹிமானா சையத்
Sunday, March 6, 2011
அற்புதப் படைப்பாளன் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
சென்னையில் இயங்கி வரும் 'இக்ராமுல் முஸ்லிமீன் சாரிட்டபில் டிரஸ்ட்' எனும் அமைப்பின் சார்பாக, "அற்புதப் படைப்பாளன்" - இப்பிரபஞ்சத்தின் இறைவன் பற்றிய கருத்தரங்க நிகழ்ச்சியை வரும் 13/03/2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்த உள்ளோம் - இன்ஷா அல்லாஹ்.

நிகழ்ச்சியில்:-
- சகோ. முஹிப்புல்லாஹ் (முன்னாள் புத்த பீட்சு - சுவாமி ஆனந்தாஜி),
- சகோ. M. C. முஹம்மது (முன்னாள் கிருத்துவ போதகர் - கிருஸ்து ராஜா),
- சகோ. அஹமது ஸுஃப்யான், ஆகியோர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகின்றனர் மற்றும்
- டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) &
- முஃப்தி உமர் ஷெரிஃப் ஆகியோர் சிறப்புரையாற்றவிருக்கின்றனர்.
Labels:
கட்டுரை -Articles,
பொதுவானவை
Saturday, March 5, 2011
தமிழக முஸ்லிம்களின் பலம் ....
தமிழக முஸ்லிம்களின் பலம் ..தமிழக முஸ்லிம்களின் பலம் ..கண்டிப்பாக படித்து பகிர்ந்து கொள்ளவும்...
தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.
அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
Labels:
ஒற்றுமை,
சட்டமன்றத் தொகுதி,
வாக்களிப்போம்
Friday, March 4, 2011
குழந்தைகளின் ஆளுமை விருத்திக்கு அண்ணல் நபியின் அழகிய வழிகாட்டல் (தொடர்-1)
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
இஸ்லாமிய நெறியில் குழந்தை வளர்ப்பு எனும் போது அவர்களது லௌகீக நலன் நாடிய ஆளுமைகள் மட்டுமன்றி, அவர்களின் ‘ஹிதாயத்’ எனும் ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாகக் கொள்ளப்படும். இந்த வகையில் குழந்தைகளின் ஆன்மிக-லௌகீக முன்னேற்றத்திற்கு நபி(ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகளை இங்கே சுருக்கமாகத் தொகுத்துத் தர விரும்புகின்றோம்.
1. பிரார்த்தனை:
நபி(ஸல்) அவர்கள் தமது எதிரிகளின் குழந்தைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காகக் கூடப் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இது எதிர்கால சந்ததிகளின் சீர்திருத்தத்திற்கு அவர்கள் வழங்கிய முக்கியத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
நபி(ஸல்) அவர்கள் தாயிப் நகருக்குப் பிரச்சாரத்திற்குச் சென்ற போது, அம்மக்கள் நபி(ஸல்) அவர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர். நபி(ஸல்) அவர்களின் பொன்னான மேனியில் ஏற்பட்ட காயங்களிலிருந்து வடிந்த இரத்தத்தால் அவர்களின் பாதணிகள் தோய்ந்து போகும் அளவுக்குத் தாக்கப்பட்டார்கள்.
அப்போது அவர்கள் செய்த பிரார்த்தனை உருக்கமானதாகும். அப்போது அல்லாஹ்தஆலா நபியவர்கள் விரும்பினால் அந்த மக்களை அழித்து விட மலைக்குப் பொறுப்பான மலக்கை அனுப்பினான்.
எனினும் நபி(ஸல்) அவர்கள்;
‘இவர்கள் இல்லாவிட்டாலும் இவர்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவன் ஒருவனை மட்டும் வணங்குபவர்கள் உருவாக வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்’ எனக் கூறினார்கள்.
தனது எதிரிகளின் குழந்தைகள் கூட அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களாக உருவாக வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். நாம், ‘நமக்குச் சந்ததி தேவை!’, ‘எனக்குப் பேரப்பிள்ளை தேவை!’, ‘எனக்கு ஆண் பிள்ளை தேவை! என்றுதான் ஆசைப்படுகின்றோம்ளூ அதற்காகத்தான் பிரார்த்திக்கின்றோம்ளூ நேர்ச்சை செய்கின்றோம். என்றாவது, ஒரு நாளாவது ‘அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது!’, ‘அவன் ஒருவனை மட்டுமே வணங்கும் சந்ததி தேவை!’ என்று பிரார்த்தித்துள்ளோமா? எனச் சற்று சிந்தித்துப் பாருங்கள்!
நபி(ஸல்) அவர்கள் குழந்தையின் உருவாக்கம் ஷைத்தானியத்திலிருந்து உருவாகாமல், ஆன்மிகத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று வழிகாட்டினார்கள்.
Labels:
இஸ்லாமிய நெறி,
குழந்தை வளர்ப்பு,
பிரார்த்தனை
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
குர்ஆனிலிருந்து..رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
3. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
4. எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:16رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ
5. என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். 3:38رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
6. எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. 3:147رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
7. எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
8. எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ
9. நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85Thursday, March 3, 2011
கடன் வாங்கலாம் வாங்க - 14
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
சகோதர, சகோதரிகள் சென்ற தொடரை படித்துவிட்டு பட்ஜெட் போட துவங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ் வெற்றி நமதாகும். 13வது தொடரில் சிக்கனத்தை பற்றி பார்த்தோம். மேலும் சேமிப்பு, சிக்கனம் இவைகளை தொடர்வோம்.
பிள்ளைகளின் சேமிப்பு :
தாய்மார்களுக்கு : வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு தனித்தனியாக ஒரு உண்டியல் வாங்கி கொடுத்து விடுங்கள். மண் உண்டியல் உடைந்து விடும். தகரம், இரும்பில் உண்டியல்கள் கடையில் கிடைக்கிறது. இதில் காசு நிறைய சேர்த்து விட்டால் உனக்கு தேவைப்பட்ட பொருட்களை வாங்கி கொடுப்பேன் என்று சொல்லுங்கள். மேலும் தங்களிடம் காசு கேட்டால் நீ சேர்த்து வைத்துள்ள காசில் எடுத்து வாங்கிக் கொள் என்று சொல்லுங்கள். பிள்ளைகளுக்கு ஒரு பொறுப்பு வருவதை உணர்வீர்கள்.
வாங்கும் பொருட்களில் சிக்கனம் :
ஒரு கிரைண்டர் வாங்கினால் ஒரு கிரைண்டர் இலவசம். ஒரு மிக்ஸி வாங்கினால் ஒரு மிக்ஸி இலவசம். ஒரு ஸ்டவ்விற்கு ஒரு ஸ்டவ் இலவசம். இது போன்ற பொருட்களை வாங்காதீர்கள். ஒரு பொருள் குறைந்த பட்சம் 5 வருடத்திற்காவது உழைக்க வேண்டும் என்றால் நல்ல தரமான கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்களை வாங்குங்கள்.
விலை குறைவாக இருக்கிறது என்று இலவசத்துடன் வரும் பொருட்களை வாங்காதீர்கள். பாதி விலையில் கிடைக்கிறதே என்று பயன்படுத்திய பொருட்களையும் வாங்காதீர்கள். எந்த மின் சாதனங்கள் (உதாரணத்திற்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின்) வாங்கினாலும் தரமான கம்பெனியின் பொருட்களையே வாங்குங்கள். பொருட்கள் வாங்கும்பொழுது ஒரே கடையில் வாங்கி விடாமல் இரண்டு மூன்று கடைகளில் சென்று விலைகளை பார்த்து எங்கு குறைவாக கிடைக்கிறதோ அந்த கடையில் வாங்குங்கள்.
Labels:
கவனமாக,
நிறைய சேர்த்து,
முயற்சி
Wednesday, March 2, 2011
முஸ்லிம்கள் பற்றி செய்தி வெளியிடுவதில் பொறுப்பின்மை
திருக்குரானின் அடிப்படையிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளை வைத்தும் ‘இஸ்லாம் தீவிரவாதத்தை என்றும் அனுமதிப்பதில்லை’ என்று பல அறிஞர்கள் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகிறார்கள். அப்படி இருந்தாலும், தீவிரவாதம் பற்றிய செய்திகள் வரும்போது முஸ்லிம்கள் பெயர் மட்டும் ஹைலைட் செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. இவ்வாறான செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதால், உளவியல் ரீதியாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஒரு விதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, இது ஒரு பொதுவான சமூகப் பிரச்சினை என்று கருதப்பட வேண்டும்! இளம் மனங்களில் சந்தேகமும், குழப்பமும் இருந்தால், அது அவர்களது முன்னேற்றத்தை பெருமளவு பாதிக்கும்.
ஊடக நண்பர்கள் ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் அல்லாத பல இயக்கங்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றன. அவ்வாறான சக்திகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும்போது, அந்தந்த அமைப்புகள் பெயரில்தானே செய்திகள் வெளியிடப்படுகின்றன? அப்போதெல்லாம், செய்திகளில் அந்த இயக்கங்களின் பெயர்கள் வெளி வருமே அன்றி அவர்கள் சார்ந்த மதம் பற்றி குறிப்பிடப்படுவதில்லை. நம் நாட்டில் காஷ்மீரில் மட்டுமா தீவிரவாதம் இருக்கிறது? அஸ்ஸாமிலும், மேகாலயாவிலும், நாகாலாந்திலும், பீஹாரிலும், ஆந்திராவிலும், மேற்கு வங்கத்திலும் ஏராளமான தீவிரவாத சக்திகள் செயல்படுவதை செய்திகளில் பார்க்கிறோம். திரும்ப திரும்ப இந்த மாதிரியான தவறான செய்திகள் வரும்போது, சாதாரண மக்களும் முஸ்லிம்களைப் பற்றி சந்தேகம் கொள்வது இயற்கையாக நிகழ்கிறது. இது ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கலாமா? யோசித்துப் பாருங்கள்!இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தீவிரவாத நாச வேலைகளால் பாதிப்புகள் ஏற்படும்போது எல்லா மதத்தினரும் துன்பப்படுகிறார்கள். உதாரணமாக, காஷ்மீரில் தாக்குதல் நடந்தபோது அங்கே பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அங்கே வாழும் முஸ்லிம்கள்தான். பாகிஸ்தானுக்கு செல்லும் ரயிலில் குண்டு வைத்தபோதும், ஐதராபாத் பள்ளி வாசலில் குண்டு வைத்தபோதும் அதிக அளவில் இறந்தவர்கள் முஸ்லிம்கள்தானே? எனவே, தீவிரவாதத்தை எதிர்க்கும் அவசியம் முஸ்லிம்களுக்கு பெருமளவு இருக்கிறது. தீவிரவாதம் முஸ்லிம்களுக்கும் ஒரு பெரிய பிரச்சினைதான், மற்றவர்களுக்கு மட்டுமல்ல – என்பதை அனைவரும் உணர வேண்டும்!
அடிப்படையாக நோக்கினால் ஒன்று தெளிவாகப் புரியும் – சிந்தனைகளில் கோளாறு ஏற்படும் நேரங்களில் மனிதன் தீவிரவாதியாக மாறுகிறான். இதில் மதம் பற்றி பேசுவது சற்றும் சரியாக இருக்காது. எந்த மதமும் அந்த மாதிரி மனிதர்களை நியாயப்படுத்துவதில்லை. எனவே தீவிரவாதம் பற்றி கருத்துக்கள் கூறும்போது ஒரு மதத்தைப் பற்றி அவதூறாகப் பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. “பொறாமை, துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை இதயத்திலிருந்து அகற்றி அதைத் தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள் ஆகியோர் மீது கருணை காட்டி அவர்களின் மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவச் செய்ய வேண்டும்” என்று நம்புகிற முஸ்லிம் நல்உள்ளங்களை புண்படுத்தும் செயல் அறவே கைவிடப்பட வேண்டும்!
- தஞ்சை வெங்கட்ராஜ் ( thanjaivenkatraj@gmail.com)Source: www.keetru.com
http://muthupet.orgமுஸ்லிம்கள் பற்றி செய்தி வெளியிடுவதில் பொறுப்பின்மை
Tuesday, March 1, 2011
அளவற்ற அருளாளன் .. நிகரற்ற அன்பாளன்.
by டாக்டர் ஹிமானா சையத்
பார்க்க முயல்வது இயல்புதானே? அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன? " என்று கேட்டார் நண்பர்.
"எந்த அளவுகோலைக் கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்?
மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா? அல்லது பிற அளவுகோல் கருவிகளின் துணையுடனா? " என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன்.
அவர் பதில் சொல்லாமல் புன்முருவலுடன் என்னையே கூர்ந்து நோக்கினார்.
பதில்பெறத்துடிக்கும் மாணவனின் துடிப்பையும்,ற்றுத் தர முனையும் ஆசிரியர் ஒருவரின் முனைப்பையும் ஒரு சேர அவரது கண்கள் என்னுள் பாய்ச்சின.என் கிளினிக்கில் சில வாரங்களுக்கமுன் நிகழ்ந்த ஒரு உரையாடல் சம்பவம் என் நினைவுக்கு உடனே வந்தது.
வெளிநாட்டில் தொழில் புரியும் என் நண்பர் அவர். அவரது மனைவியின்
உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தாயகம் வந்திருந்தார். என் பரிந்துரையில் மதுரை, சென்னை நகரங்களுக்கு விரிவான மருத்துவ ஆய்வுகளுக்கும் சிகிச்சைக்கும் சென்றுவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொடுத்த இரண்டு பெரிய கோப்புகளைச் சுமந்து கொண்டு அவர் வந்திருந்தார். அவரது மனைவிக்கு சிறுநீரகக் கோளாறு. ரத்தத்திலிருந்து உடலுக்குத் தேவையற்ற -அப்படித் தங்கினால், தீமை விளைவிக்கும் நச்சுப் பொருட்களை அப்புறப்படுத்தும் தனது
தலையாய பணியிலிருந்து இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகத்
தவறிவிட்டன. நோயாளி உயிர்வாழ வேண்டுமானால், அந்த நச்சுப்
பொருட்களை செயற்கையாக வெளியேற்றியாக வேண்டும். வாரம்
இருமுறை அல்லது மும்முறை!
"ஒரு முறை அப்படி நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சிகிச்சை செய்து கொள்வதற்கு கிராமத்திலிருந்து அருகிலுள்ள மதுரை நகருக்குச் சென்று வர எவ்வளவு செலவு பிடிக்க்லாம்? " நண்பர் கேட்டார்.
"அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்"
என்கிறோம். என்றாலும் மனித மனம் அந்த அளவு என்ன? என்று அளந்துபார்க்க முயல்வது இயல்புதானே? அந்த வகையில் உங்கள் விளக்கம் என்ன? " என்று கேட்டார் நண்பர்.
"எந்த அளவுகோலைக் கொண்டு அளந்து பார்க்க நினைக்கிறீர்கள்?
மனிதன் படைத்த ஸ்கேல், தராசு இவற்றாலா? அல்லது பிற அளவுகோல் கருவிகளின் துணையுடனா? " என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன்.
அவர் பதில் சொல்லாமல் புன்முருவலுடன் என்னையே கூர்ந்து நோக்கினார்.
பதில்பெறத்துடிக்கும் மாணவனின் துடிப்பையும்,ற்றுத் தர முனையும் ஆசிரியர் ஒருவரின் முனைப்பையும் ஒரு சேர அவரது கண்கள் என்னுள் பாய்ச்சின.என் கிளினிக்கில் சில வாரங்களுக்கமுன் நிகழ்ந்த ஒரு உரையாடல் சம்பவம் என் நினைவுக்கு உடனே வந்தது.
வெளிநாட்டில் தொழில் புரியும் என் நண்பர் அவர். அவரது மனைவியின்
உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து தாயகம் வந்திருந்தார். என் பரிந்துரையில் மதுரை, சென்னை நகரங்களுக்கு விரிவான மருத்துவ ஆய்வுகளுக்கும் சிகிச்சைக்கும் சென்றுவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கொடுத்த இரண்டு பெரிய கோப்புகளைச் சுமந்து கொண்டு அவர் வந்திருந்தார். அவரது மனைவிக்கு சிறுநீரகக் கோளாறு. ரத்தத்திலிருந்து உடலுக்குத் தேவையற்ற -அப்படித் தங்கினால், தீமை விளைவிக்கும் நச்சுப் பொருட்களை அப்புறப்படுத்தும் தனது
தலையாய பணியிலிருந்து இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகத்
தவறிவிட்டன. நோயாளி உயிர்வாழ வேண்டுமானால், அந்த நச்சுப்
பொருட்களை செயற்கையாக வெளியேற்றியாக வேண்டும். வாரம்
இருமுறை அல்லது மும்முறை!
"ஒரு முறை அப்படி நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சிகிச்சை செய்து கொள்வதற்கு கிராமத்திலிருந்து அருகிலுள்ள மதுரை நகருக்குச் சென்று வர எவ்வளவு செலவு பிடிக்க்லாம்? " நண்பர் கேட்டார்.
Labels:
அளவுகோல்,
கணவன்-மனைவி,
கிட்னி
Subscribe to:
Posts (Atom)