குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள்
குழந்தைகளுக்கு ஓதிக் கொடுக்கும் ஆசிரியர்கள்
குழந்தைகளை பாடம் வராததால்
குழந்தைகள் குறும்பு செய்வதால் ..
குழந்தைகளை அடிப்பதை இன்னும் தொடர்கிறார்கள்
சில குழந்தைகளுக்கு வீட்டிலும் , பாடம் படிக்கப் போகும் இடத்திலும் அடி வாங்குவது வேதனையானது
பாரிசில் குழந்தைகளை அடித்தால்
அந்த குழந்தைகளை அரசு தன் வசம் வைத்து வளர்க்க ஆரம்பிக்கும் மற்றும் அடித்தவர்களையும் தண்டிக்கும்
நேரில் கண்ட காட்சி
ஓதிக் கொடுப்பவர் ஆறு வயது பையனை அடித்தார்
அடிக்காதீர்கள் என்றேன்
தவறு செய்தால் அடித்தால்தான் திருந்துவான் என்றார்
அடித்தால் ஓத வர மாட்டான் என்றேன்
ஓத பையன்கள் வருவதில்லை என்று மட்டும் சொல்கின்றார்கள்
ஏன் வருவதில்லை என்று சிந்திப்பதில்லை
Saturday, August 30, 2014
மறக்க முடியாத காலேஜ் அனுபவம் .....
அது இறுதியாண்டு ....மாணவத் தலைவராக நான்
மரியாதைக்குரிய ஷம்சுல் ஹூதா அஜ்ரத் அவர்கள் இறந்து விட்டார்களென செய்தி வந்தது ............அவர்களின் ஊருக்கு செல்ல வேண்டும் கடைசி தொழுகையில் கலந்து கொள்ள வேண்டுமென நிறைய நண்பர்கள் வேண்டினர் ..ஆசித்தனர்
மாணவத் தலைவனான என்னிடம் சொன்னபோது நான் சொன்னேன் பிரின்ஸ்பாலிடம் கேட்க யோசிக்கிறேன் ..ஆகையால் அத்தனை வகுப்பிலிருந்தும் தலா 1 ஆள் வாங்க மொத்தமா கேட்கலாமென .......சரியென வந்தனர்
எனக்கும் தைரியம் அவரிடம் கேட்க ....வந்தார் பிரின்ஸ்பால்

Friday, August 29, 2014
திறமை
நான் ...
எனது....
என்னால் மட்டுமே ...
என்பதெல்லாம்
கருவினை மனமுடையோரின்
கழிச்சொல் வேதாந்தம்
தலைக்கொருத்தனித்திறனை
தன்னுள்ளே கொண்டாலும்
வரைக்குள் வந்ததெல்லாம்
வாழ்க்கைத் தந்த வரமென்று
குறைக்கின்ற ஈனர்க்கு
உறைக்காமல் போனதேனோ .
எனது....
என்னால் மட்டுமே ...
என்பதெல்லாம்
கருவினை மனமுடையோரின்
கழிச்சொல் வேதாந்தம்
தலைக்கொருத்தனித்திறனை
தன்னுள்ளே கொண்டாலும்
வரைக்குள் வந்ததெல்லாம்
வாழ்க்கைத் தந்த வரமென்று
குறைக்கின்ற ஈனர்க்கு
உறைக்காமல் போனதேனோ .
Labels:
எனது.என்னால் மட்டுமே,
நான்
நதிநீர் இனைப்பு / அமீருல் மூமினீன் கால்வாய்
நதிநீர் இனைப்பு பத்தி ரொம்ப நாளா பேசிக்கிட்டும்,அதற்காக ஒரு கமிட்டி அமைச்சு சாதக பாதகங்களை இன்னும் இன்னும் ஆஞ்சுக்கிட்டே இருக்காங்க.
இப்ப அப்படியே வரலாற்றைப் பின்னோக்கி போய் பார்ப்போம்,
அரபுதேசம்,மதீனா நகர்,ஹிஜ்ரி 18,
கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம்.
நாடு மழையின்றி கடுமையானப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் தலைவர் யோசிக்கிறார்கள்,
அவர்கள் ஆளுகைக்கு உட்பட்ட சிரியா மற்றும் எகிப்து மாகாணங்களிருந்து உணவு தானியங்களை வரவழைக்க ஏற்பாடு செய்கிறார்கள்.

இலக்கியமும் - தடங்கல்களும்
இலக்கிய உலகத்தை
அறிவார்ந்த உலகமெனச் சொல்லலாம்.
அப்படிச் சொல்வதில்
பெரிய தவறேதுமில்லை.
பல ‘படிமங்கள்’ கொண்ட
இந்த மாய உலகத்தை
எவ்வளவுக்கு
மெச்சினாலும் தகும்!
தவறேயில்லை.
உலகக் கலைஞர்களால்
காலத்திற்கேற்ப தொடர்ந்து
வடிவமைக்கப்பட்டபடியே இருக்கும்
இதன் பக்கங்களில்
வாசகர்கள் நாளும் கொள்ளும்
தரிசனங்கள் கொஞ்சமல்ல!
இன்னொரு புறம்
அசலாய் விளையும்
வேடிக்கை வினோத
அழிச்சாட்டியங்களுக்கும்
இங்கே பஞ்சமே இல்லை!
அறிவார்ந்த உலகமெனச் சொல்லலாம்.
அப்படிச் சொல்வதில்
பெரிய தவறேதுமில்லை.
பல ‘படிமங்கள்’ கொண்ட
இந்த மாய உலகத்தை
எவ்வளவுக்கு
மெச்சினாலும் தகும்!
தவறேயில்லை.
உலகக் கலைஞர்களால்
காலத்திற்கேற்ப தொடர்ந்து
வடிவமைக்கப்பட்டபடியே இருக்கும்
இதன் பக்கங்களில்
வாசகர்கள் நாளும் கொள்ளும்
தரிசனங்கள் கொஞ்சமல்ல!
இன்னொரு புறம்
அசலாய் விளையும்
வேடிக்கை வினோத
அழிச்சாட்டியங்களுக்கும்
இங்கே பஞ்சமே இல்லை!
Thursday, August 28, 2014
முகநூல் புலம்பல் [ பக்தி 2 ]
முகநூல் புலம்பல் - 8
நிலைத் தகவலைவிட
பரப்பரப்பானது
பின்னூட்டங்களுக்காக
காத்திருக்கும் நேரம்.
--------------------------
முகநூல் புலம்பல் - 9
நம்மை எதிரியாக நோக்குபவரும்
நண்பராகவே இருப்பர்.
------------------------------------
முகநூல் புலம்பல் - 10
எல்லா வைரஸும்
உடம்பைத் தாக்கும்
பேஸ்புக் வைரஸ்
மனதைத் தாக்கும்.
----------------------------------
Wednesday, August 27, 2014
நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத “பித்அத்”கள்
அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: “”அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக் கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்(மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்கக்கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.” (அல்குர்ஆன் : 42:21)
எந்த ஊர் என்றவனே......அந்த ஊர் அறிந்த ஊர் அல்லவா என்று சொல்லி விடும் நோக்கம்தான் இந்த பதிவு !
எந்த ஊர் என்றவனே......
(சுய விமர்சனமா என்றால், யாவரும் சுயம் அறியும் விமர்சனம்)
இனி ஒரு முக்கியமான வேலை பாக்கி இருக்கிறது. சிறிய வயதிலிருந்தே கேள்வி படும், நெடும் தொலைவில் இருக்குமோ என்று நினைக்கும் ஒரு புதிய ஊருக்கு போக; புதுப்பிக்கும் பாஸ்போர்ட்டில், அந்த ஊருக்கான எண்டார்ஸ்மென்ட் செய்ய வேண்டும். வயது 23-ல் இருந்து ஆரம்பித்து, சில நாடுகளை பார்த்தும், அவைகளிலிருந்து உழைத்தும் பிழைத்தும் எல்லாம் ஆயிற்று, இனி அந்த புதிய ஊரையும் அதற்கான பாதையையும் பார்த்து விடத்தான் வேண்டும். அது எந்த ஊர் என்பவரே, அந்த ஊர் நீயும்(ங்களும்) கூட அறிந்த ஊர் அல்லவா என்று சொல்லி விடும் நோக்கம்தான் இந்த பதிவு !

Monday, August 25, 2014
ஏகன் இறைவன் தந்த மார்க்கத்தை பற்றிக்கொள்..
மகனே ......
வாழப் பழகு
பழகப் பழக பழகும் பலவும்
பார்த்துப் பழகு
பார்த்துப் படி
படிக்கப் படிக்க படிப்பினைகள் பெறு
பேசு நேர்கொண்டு
மெய்யும் பொருளும் அறிந்து உரக்க பேசு
இரு உண்மையாய்
இருப்பதில் இறுதிவரை உறுதியாய் உயிர் கொண்டு இரு
செயல் படு
பாடுபட்டு செல்வம் சேர்
ஊருடன் ஒத்துவாழ்
கொடு கொடைகளை
கிடைத்ததை பகிர்ந்து பகிர்ந்ததை பார்த்து மகிழ்ந்திடு

Tuesday, August 19, 2014
தமிழ் மாநில ஜமாத்துல் உலமா தேர்தல் ஒரு பார்வை:
தமிழ் மாநில ஜமாதுல் உலமா தேர்தல் 19/08/14
தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் மாநில பொறுப்பாளர்களின் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். ஆரம்ப காலங்களில் பொது கருத்தொற்றுமையின் அடிப்படையில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், ஒரு சிலர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான ஆலிம்களுக்கு மத்தியில் ஒரு பெயர் முன்மொழியப் படும்பொழுது அவர்களுக்கு பிடிக்காதவர்கள் கூட சபை நாகரிகம் கருதியும் தேவையற்ற விரோதம், குரோதம் ஏற்படும் என்ற அடிப்படையிலும் மௌனமாக இருந்துவிடுகின்றனர். எனவே, ரகசிய வாக்கு அடிப்படையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் சுதந்திரமாக நாம் விரும்பும் நபரை தேர்ந்தெடுக்க முடியும் என்று கருத்து தெரிவித்தனர்.

Monday, August 18, 2014
எல்லாமும் தருவோனே
நிறைவான ஒளியை
பார்த்து
பறந்துவரும் விட்டில்
புச்சிகள்
பார்க்காமலே நேசிக்கும்
பக்தர்கள்
அமைதி வழிநடக்கும்
அடியார்கள்
வணக்கத்தை காணிக்கையாக்கும்
நன்மக்கள்
உன்பக்கம் சார்ந்திருக் கும்
பலஹீனர்கள்
முற்றும் துய்த்து
முழுமையாய் வாழ்ந்து
உன்வழி நேர்வழி நடந்து
உன்னடி சேர
அருள் புரிவாயே
ரகுமானே
பார்த்து
பறந்துவரும் விட்டில்
புச்சிகள்
பார்க்காமலே நேசிக்கும்
பக்தர்கள்
அமைதி வழிநடக்கும்
அடியார்கள்
வணக்கத்தை காணிக்கையாக்கும்
நன்மக்கள்
உன்பக்கம் சார்ந்திருக் கும்
பலஹீனர்கள்
முற்றும் துய்த்து
முழுமையாய் வாழ்ந்து
உன்வழி நேர்வழி நடந்து
உன்னடி சேர
அருள் புரிவாயே
ரகுமானே
Labels:
அருள் புரிவாய்,
இறையோனே,
கேட்டேன்,
சகோதரத்துவம்,
நிறைவான ஒளி,
முழுமை
Saturday, August 16, 2014
"எப்படி உன்னால் கவலையின்றி உறங்க முடிகிறது "
பொழுது மறைந்து
கூடுகளில் வந்து கூடும்
பறவைகளுக்கு
நாளைய கவலைகள்
ஏதுமில்லை !
"எப்படி உன்னால் கவலையின்றி
உறங்க முடிகிறது " என்று
பறவை ஒன்றிடம் கேட்டேன் !
கூடுகளில் வந்து கூடும்
பறவைகளுக்கு
நாளைய கவலைகள்
ஏதுமில்லை !
"எப்படி உன்னால் கவலையின்றி
உறங்க முடிகிறது " என்று
பறவை ஒன்றிடம் கேட்டேன் !
பெரும்பான்மைக்கு பெரிய மனது வேண்டும்
பெரும்பான்மையிடம் பெரிய மனப்பான்மை இல்லை
பெரும்பான்மை தாழ்வு மனப்பான்மை பெற்று சிறுபான்மையை சோதிக்கின்றது
பெரும்பான்மை சிறுபான்மையை கண்டு கொள்ளாமல் சிதறடிக்க திட்டம் போடுகின்றது
சிறுபான்மை ஒன்று சேர பெரும்பான்மை சிறுபான்மையாகும்
குடும்பத்தில் பெரியவர்கள் சிறியோர்களை சிறப்போடு கண்காணிக்க
சிறியோர்கள் பெரியவர்கள் ஆனபின் பெரியோர்களை கணிகோடு கண்காணிப்பர்
குடும்பமென்றால் பெரியோர்களும் சிறியோர்களும் அடங்கியதுதான்
நாடென்றால் பெரும்பான்மையும் சிறுபான்மையும் சேர்ந்ததுதான்
உடலில் ஒரு பகுதியில் புற்று நோய் வர உடல் முழுதும் பரவி உடலையே பாதிக்கும்
உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் உயர்வு
நாட்டில் ஒவ்வொரு மக்களும் உயர்வடைய வேண்டும்

சிறுபான்மை,
பெரும்பான்மை,
மனப்பான்மை
அரசே… அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா
தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது காயல்ப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது. ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவருக்குப் புதிதாக ‘அது’ கண்டறியப்படுகிறது. வெகு சீக்கிரம் ஒரு நாள் ‘அது’ கொன்றுபோடுகிறது.
Friday, August 15, 2014
நெருக்கடிகளின் காலம் - நிஷா
இந்நிகழ்வுகள் என்னை குழப்பக்கயிற்றிலிருக்கி
கேள்விகளின் திரியைத் தூண்டி
ஸ்திரமின்மையின் கூரிய அலகுகளால்
கொத்திக்கொத்தி சலனப்படுத்தி அலைக்கழிக்கின்றன
கருத்துக்களேதுமற்ற வறண்ட புன்னகைகளை
ஒரு தோளிலும்
கடிவாளக் குதிரையின் முரட்டு மனப்புணர்ச்சியின் வெறியை
மற்றொரு தோளிலும்
சுமந்துகொண்டு திரிகிறேன்
திரையரங்குகளிலிருந்து வெளிவரும் சவங்களின் கண்களில்
குழந்தைகள் கர்ப்பமுறும் காட்சிகளின் கோரபிம்பம்
பலவர்ணப் கலவைகளால் சூழப்பட்ட முகங்கள்
தலைவர்களின் புன்னகையில் கொக்கரிக்கின்றன

சிராஜ்-உத்-தௌலா:
வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு
நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை
முதலில் கணித்து,
ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய்
இந்த மண்ணில்
முதலில் நிமிரிந்து நின்றவர்தான்
வங்காளத்தை ஆண்ட
சிராஜ்-உத்-தௌலா.
நாடாளும் ஆசை வந்துவிட்டது என்பதை
முதலில் கணித்து,
ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய்
இந்த மண்ணில்
முதலில் நிமிரிந்து நின்றவர்தான்
வங்காளத்தை ஆண்ட
சிராஜ்-உத்-தௌலா.
Thursday, August 14, 2014
தங்களை இந்த முகநூல் சொந்தங்கள் சார்பாக வாழ்த்துகிறேன். Iskandar Barak
சீசன்ஸ் நீடூர் ..https://seasonsnidur.com/
இப்படியொரு பக்கத்தை ஆன்லைனில் துவங்கி திறம்பட நிர்வகித்து வரும் .......நமது
மரியாதைக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான அண்ணன்
முஹம்மது அலி - நீடூர்
தங்களை இந்த முகநூல் சொந்தங்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.
தங்களின் சேவை தங்கள் சகோதரர் ....மார்கத்திற்கென வாழ்ந்து மரணித்த மரியாதைக்குரிய மர்ஹூம் ..
வக்கீல் நீடூர் சயீத் அவர்களின் புகழ் போலவே நிலைத்து நிற்கட்டுமாக வென துஆ செய்கிறேன்.
சந்தோஷம் அண்ணே. with Abu Haashima Vaver and 6 others.
Iskandar Barak

எது சுதந்திரம் ?
நல்ல நாள் கெட்ட நாள் என்பது கிடையாது .வாழும் நாள் அனைத்தும் உயர்வான நாட்கள்தான்.
அழுக்கு சேர அதனை நீக்க முயல்கின்றோம் மனதில் அழுக்கு சேர நல்லவைகளை கேட்டும், படித்தும் மனதில் படிந்த அழுக்கை அகற்ற முயல வேண்டும் . இவை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் தொடர் முயற்சி தேவை. நீண்ட நேரம் இறைவனை வணங்கி சோர்வு அடைவதை விட தொடர்ந்த தொழுகை வாழ்கையை பண்படுத்தும்
நல்லதை செய் அதை இன்றே செய் .
வாழு, வாழ விடு

Wednesday, August 13, 2014
இஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம் - தி இந்து
இஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம் - தி இந்து
http://tamil.thehindu.com/
நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ்
திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக
யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக
யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக
பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
மேலும் படிக்கஇஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம் - தி இந்துபதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
http://tamil.thehindu.com/
Sunday, August 10, 2014
வாசிப்பு நம் சுவாசிப்பு!
வலைத்தளங்களின் வளர்ச்சியினாலும், முகநூல் போன்ற சமூகத் தளங்களின் ஆதிக்கத்தினாலும் இன்று வாசிப்புப் பழக்கம் வெகு வேகமாக விடைபெற்று வருகிறது. பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதும், அத்தோடு தங்களது அறிவுத் தேடலை போதுமாக்கிக் கொள்ளும் போக்கும் தொடர்கின்றன. சுய தேடல் என்பதைக் கைவிட்டு விலைமதிப்பற்ற நேரத்தை வீணான காரியங்களில் ஈடுபட்டு பாழாக்குகின்ற ஒரு பரம்பரை உருவாகிக் கொண்டிருக்கிறது.
Saturday, August 9, 2014
நீதான்... உன் இறைவனைத்தான்....
உன்னை அழிக்காதே
ஊரை அழிக்காதே
உலகை அழிக்காதே
என்றால் கேட்பாயா?
உன்னை உயர்த்து
ஊரை உயர்த்து
உலகை உயர்த்து
என்றால் ஏற்பாயா?
நீ கேட்பாய்
ஆனால் கேட்க மாட்டாய்
நீ ஏற்பாய்
ஆனால் ஏற்க மாட்டாய்
ஊரை அழிக்காதே
உலகை அழிக்காதே
என்றால் கேட்பாயா?
உன்னை உயர்த்து
ஊரை உயர்த்து
உலகை உயர்த்து
என்றால் ஏற்பாயா?
நீ கேட்பாய்
ஆனால் கேட்க மாட்டாய்
நீ ஏற்பாய்
ஆனால் ஏற்க மாட்டாய்
இஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாம் சார்ந்த பதிவுகளையே அதிகம் பதிவிடுகிறோம்?
பல மேற்கத்திய சிந்தனையாளர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனை உள்ளவர்கள் நினைப்பது போல "MUSLIMS ARE NOT MARKETING ISLAM". ஏன் தெரியுமா?
நான் அறிந்த வரையில் இஸ்லாமை எதிர்கும் ஒரு இந்துவுக்கோ, கிரிஸ்தவனுக்கோ அல்லது புத்திஸ்டுகளுக்கோ அவனது வேதவரிகள் தெரிகிறதோ இல்லயோ ஒருசில புனித-குர்ஆன் வசனங்களை தெரிந்து வைத்து இருக்கிறான்.
எப்படி அவனுக்கு தெரிகிறது?
அவனுடய மத போதகர்கள் / மீடியாக்கள் ஒருசில வசனங்களை அதன் சூழ்நிலைகளை விவரிக்காமல் நேரடி வசனபொருளை மக்களிடம் சேர்க்கும் பொழுது அது ஏதிமறை சிந்தனையை மக்களின் மனத்தில் விதைக்கிறது மேலும் எதிர்மறை சிந்தனை எந்த ஒரு மனிதனின் மனத்திலும் நிரந்தரமாக தங்கி விடும் என்பது மறுக்கமுடியா உண்மை. எனவே ஒரு அச்சம் மற்றும் வெறுப்பு அவன் மனத்தை பற்றிக்கொள்கிறது,
அதன் பிறகு அவன் ஒரு இஸ்லாமியனையோ அல்லது இஸ்லாமிய பதிவுகளையோ நிகழ்வுகளையோ அல்லது குர்ஆன் வசங்களையோ பார்க்கும் பொழுது கேட்கும் பொழுது நடுநிலைத்தன்மையை கையாளுவதை இழக்கிறான்.
நான் அறிந்தவரை இஸ்லாமிய வரலாற்றிலும் தற்பொழுதிய காலகட்டத்திலும் இஸ்லாத்திற்கு வந்த பெரும்பாலானோர் இந்த மன நிலையிலிருந்தவர்தான் நான் உட்பட. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. உண்மையை அறிந்தவர் வாய் மூடி இருத்தல் முறையில்லை எனவேதான் எங்களது பதிவுகள் இஸ்லாம் சார்ந்தே இருக்கிறது.
Wednesday, August 6, 2014
மருத்துவம், அறிவியல் & தொழில்நுட்பம் முஸ்லீம் பங்களிப்புக்கள்:
வளரும் இஸ்லாம்
இலவச மின்புத்தகம்
முஸ்லீம் அறிஞர்கள் சூரியன் செல்லும் கோணம் கணக்கி; பூமியின் அளவை அளவிட; சம இராப்பகல் மாற்றமே கணக்கி; ஒளியியல் மற்றும் இயற்பியல், ஒளி, ஈர்ப்பு, தந்துகி ஈர்ப்பு, மற்றும் அந்தி விலகல் போன்ற நிகழ்வுகள் துறையில், விளக்கினார்; மற்றும் அபிவிருத்தி வான்கோள்கள் அனுபவ ஆய்வு ஆய்வுக்கூடங்கள். அவர்கள் மருந்துகள், மூலிகைகள், மற்றும் மருந்துகளின் உணவுகள் பயன்பாடுகளில் அளித்ததாக; பயிற்சியாளர்களுக்கு மற்றும் externs ஒரு அமைப்பு நிறுவப்பட்டது மருத்துவமனைகள்; சில நோய்கள் மற்றும் அவர்கள் வளர்ந்த சரியான நோயறிதலில் கண்டுபிடிக்கப்பட்டது காரணங்கள்; சுகாதாரம் முன்மொழியப்பட்ட புதிய கருத்துக்கள்; அறுவை சிகிச்சை மயக்கமருந்து செய்யப்பட்ட பயன்பாடு உடன் புதிதாக அறுவை சிகிச்சை கருவிகள் கண்டுபிடித்தனர்; மற்றும் உடற்கூறியல் உள்ள இடர் அறிவியல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிவியல்,
தொழில்நுட்பம்,
முஸ்லீம் பங்களிப்புக்கள்:
Sunday, August 3, 2014
நேர்மையானவராக மாறிய இஸ்ரேலிய யூதர்..(.இவரின் தாத்தாவோ இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்தவர்...)
மனிதராக மாறிய இஸ்ரேலிய யூதர்...
என் கண்ணுக்கு இவர் மஹாத்மா..!
இவரின் தாத்தாவோ இஸ்ரேல் உருவாக காரணமாக இருந்தவர்...
இவரின் அப்பாவோ இஸ்ரேல் ராணுவத்தில் மேஜர் ஜெனரல்...
இவரோ....
Subscribe to:
Posts (Atom)