சவூதி அரேபியாவில் வணிகம் செய்து வரும் சமீர் ஷெய்க் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்ற போது அவருடன் பயணம் செய்த 16 பேர் மங்களூர் விமான விபத்தில் பலியாகி இருப்பது அவருக்கு இரட்டைச் சோகத்தை அளித்துள்ளது.சமீரின் பாட்டி வெள்ளிக் கிழமையன்று மங்களூரில் காலமானார். பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சவூதியில் இருந்து மங்களூர் புறப்பட்டுச் செல்லத் திட்டமிட்ட போது, தனக்கு டிக்கெட் கிடைக்காததால் சவூதியில் இருந்து மும்பை வந்தார். சனிக் கிழமை காலையில் மும்பையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் மூலம் மங்களூர் செல்ல இவர் திட்டமிட்டிருந்தார்.
தன்னுடைய உறவினர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அனுப்பி வைத்தார். இந்த விபத்தில் இவர் தன்னுடைய மனைவி, இரு குழந்தைகள், தாய் மாமன் மற்றும் உறவினர்கள் 12 பேர் ஆக 16 பேரை இழந்துள்ளார்.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்ற பயணமே இறுதியாகிப் போனது சோகத்தை வரவழைப்பதாக உள்ளது.
Source : http://www.inneram.com/201005228460/double-tragedy-for-businessman-who-lost-16-relatives-in-crash
No comments:
Post a Comment