பிரித்தானியாவின் முதலாவது முஸ்லிம் அமைச்சர் என்ற பெருமையை சயீதா ஹுஸைன் வர்ஸி (39 வயது) பெறுகிறார்.
அமைச்சுப் பதவிக்கு தெரிவாகியுள்ள சயீதாவுக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லையென அரசாங்கத் தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த ஆலைத் தொழிலாளியின் மகளான சயீதா வியாழக்கிழமை டவுணிங் வீதியில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு கரடி பொம்மையொன்றுக்கு இறை தூதரின் பெயரை வைக்க மாணவர்களுக்கு அனுமதித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிரித்தானிய பாடசாலை ஆசிரியையான கிலியன் கிபொனின் விடுதலைக்காக பாடுபட்டதன் மூலம் சயீதா பிரபலம் பெற்றார்.
கடந்த வருடம் வட லண்டனிலுள்ள லூடன் நகரில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களின் முட்டை வீச்சுத் தாக்குதலுக்கு அவர் ஆளானார்.
அவர் சரியான முஸ்லிம் ஒருவராக நடக்கவில்லை எனவும் ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு ஆதரவளித்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்கள் குற் றஞ்சாட்டியிருந்தனர்.

No comments:
Post a Comment