Tuesday, May 11, 2010

ஹஜ் யாத்திரை விளம்பரம் தேவையா?


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை இறைவனை துதிப்பதற்கான ஒன்றாகவே இருந்து வருகிறது. முன்பெல்லாம் ஹஜ் யாத்தி ரைக்குச் செல்வோர் விருந்தோம்பலை நடத்தி, உறவினர்களுக்கும், ஊர்க்காரர் களுக்கும் பயண செய்தியை தெரிவிப்பார் கள். பகையாளிகளை கூட சந்தித்து தங்கள் பயணத்திற்காக பிரார்த்திக்க சொல்வார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் ஹஜ் பயணத்தை ஒரு விளம்பரமாகவும், புகழுக் கான ஒன்றாகவும் சிலர் பயன்படுத்துவது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இதனால் தூய எண்ணங்களோடு ஹஜ்ஜுக்குப் புறப்படும் ஹாஜிகளுக்கும் மரியாதைக் குறைவு ஏற்படுகிறது.
பள்ளிவாசல்களில் ஜும்மா தொழு கைக்குப் பிறகு பயண செய்தியை அறிவிப்பது விருந்தோம்பல் செய்வது இவையெல்லாம் குற்றமாக பார்க்கப் படுவதில்லை. யாரும் இதை விமர்சிக்கவும் மாட்டார்கள். ஆனால் சமீப வருடங் களாக நிலை மாறி வருகிறது. அரசியல் வாதிகளை அழைத்து வாழ்த் தரங்கம் நடத்துவது, ராட்சத டிஜிட்டல் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், ஆள் உயர போஸ்டரில் ஹஜ் பயணியின் சிரிக்கும் படம், வாழ்த்து சுவரோட்டிகள் என 'அரசியல்' வாடை வீசத் தொடங்கி யுள்ளது.
இவையெல்லாம் முற்றிலும் மார்க்கத் திற்கு விரோத மான செயல்களாகும் இப்படியெல்லாம் செய்து ஹஜ் யாத்தி ரைக்கு செல்வது அதன் நோக்கத்தை சிதைப்பதாகும். இதையெல்லாம் செய் பவர்கள் யார் என்பதை கவனித்தால் அவர்கள் இதற்கு முன்பு மார்க்கத்தை சரிவர பின்பற்றாமல் ஜும்மாவுக்கு மட்டுமே பள்ளிவாசலுக்கு வருகை தருபவர்களாக இருப்பவர்கள் என்பது தான்!
பொதுவாக ஐவேளை தொழுகைப் பேணுபவர்களும், மார்க்ககத் தின்பால் ஈடுபாடு உடையவர்களும் இதுபோன்ற 'அரசியல்' கூத்துகளை நடத்துவதில்லை. சிறிய விருந்துடன் பயண செய்தியை கூறிவிட்டு புறப்படுகிறார்கள். அவர் களை ஊர் மக்களும், ஜமாத்தோடு கூடி வழியனுப்பி வைக்கி றார்கள்.
இப்படிப்பட்ட உண்மையான ஹஜ் யாத்திரீகள் பெருமைக்கும், புகழுக்கும் விளம்பரம் செய்து ஹஜ்ஜுக்கு புறப்படும் நபர் களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். முன்பெல்லாம் மாற்றுமத நண்பர்களும் கூட, மக்காவுக்கு செல்வதை மரியாதை யுடன் நோக்குவார்கள். அவர்களும் தங்கள் முஸ்லிம் நண்பர்களை வழிய னுப்ப பழங்களோடும், இனிப்புகளோடும் வருவார்கள். இப்போதும் வருகிறார்கள்.அவர்களும் கூட இத்தகைய விளம்பர பிரியர்களின் நடவடிக்கைகளினால், ஹஜ் பயணத்தின் நோக்கத்தைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளும் சூழல் உருவாகிறது. இதெல்லாம் குர்ஆன் ஹதீஸ் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்பதை அவர்களுக்கு இதை சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும்.
இந்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உலமாக்கள் இது குறித்து ஜும்ஆ பிரசங்கத்தில் அறிவுறுத்த வேண்டும். ஜமாத் தலைவர்கள் இதற்கு துணை புரிய வேண்டும்.
இல்லையெனில் புனிதமான ஹஜ் யாத்திரை எதிர்காலத்தில் கேலிக்குரிய தாக மாறிவிடும். இதை தடுக்காதவர்கள், நாளை மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.
இதை படிக்கும் சகோதரர்கள் துண்டு பிரசுரங்கள் மூலமாகவோ, பிரதி எடுத்தோ வினியோகித்து சமூகத்தில் தீமைகள் பரவாமல் தடுத்து நிறுத்த உதவ வேண்டும்.

Source : http://iniavan.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails