Monday, May 3, 2010

இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம்!

பொறியியல்  படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள  58 மையங்களில் இன்று முதல் மே 29 தேதி வரை வழங்கப் பட உள்ளன. அந்தந்த மையங்களில்  காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.

ரூ 500 பணம் செலுத்தி நேரில் விண்ணப்பத்தை பெறலாம்.  எஸ்.சி., எஸ்.சி.ஏ., (அருந்ததியினர்), எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250 மட்டும் செலுத்தினால் போதும். விண்ணப்பத்தைத் அஞ்சலில்  பெற, "செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம்', என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், பொதுப் பிரிவினர் ரூ 700 க்கும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவினர்  ரூ.450-க்கும் டி.டி. எடுத்து, செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 25 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி  செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 ம் தேதி கடைசி நாள். பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம்.www.annauniv.edu/tnea2010 என்ற இணைய தள முகவரிக்கு  சென்று முகவரிக்கு கேட்கப் பட்டுள்ள விவரங்களை டைப் செய்து அதனை அச்செடுத்து விண்ணப்ப கட்டண தொகைக்கான டி.டி யுடன் அஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு மையம், குரோம்பேட்டை எம்.ஐ.டி., புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி ஆகிய 4 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப் பட உள்ளன.
Source : http://www.inneram.com
இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails