Monday, May 24, 2010

இஸ்லாமிய அறிஞரான டாக்டர் ஸாகீர் நாயிக் இன்று இலங்கை விஜயம்

ஞாயிறு, 23 மே 2010 21:20 
சர்வதேச புகழ்மிக்க இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஸாகீர் நாயிக் இன்று மாலை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜம் இய்யதுஷ் ஷபாபின் ஏற்பாட்டில் கொழும்பு சுகதாச வெளியரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள மார்க்க சொற்பொழிவில் இவர் உரையாற்றவுள்ளார். மத ஒப்பீட்டுத்துறை ஆய்வுத்துறை நிபுணரான  டாக்டர் ஸாகீர் நாயிக் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கடந்த வருடம் இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 2009ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 100 இந்தியர்கள் என்ற பட்டியலில் 82ஆவது இடத்தை இவர் பெற்றிருக்கிறார்.


இதேபோன்று, இந்தியாவின் தலைசிறந்த 10 மார்க்க அறிஞர்களின் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்திலுள்ளார்.

 -----------------------------------------------------------------
பதிவான கருத்துக்களை வாசிக்க...

எழுதியவர்: masthan, May 24, 2010
இவர் உண்மையிலேயே மூன்றாவதாக வரவேண்டிய மனிதர் இல்லை
இவர் முதல் இடத்திற்கு வரவேண்டிய ஒரு நல்ல நபர் 
 
எழுதியவர்: riyaz, May 24, 2010
salam
May ALLAH give him long life..remember him in ur dua...
எழுதியவர்: mohamedalijinnah, May 25, 2010
டாக்டர் ஸாகீர் நாயிக் நினைவு ஆற்றலைக் கண்டு உலகம் வியக்கின்றது
 
Source : http://www.inneram.com/201005238487/2010-05-23-15-50-13

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails