Thursday, May 20, 2010

யூ டியூப், பேஸ்புக் இணைய தளங்களுக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத்: இஸ்லாமிய விரோத வீடியோக்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி யூ டியூப் இணையத் தளத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அந்த இணையத் தளத்தை பாகி்ஸ்தானில் பார்க்க முடியாதபடி முடக்கியுள்ளது. நேற்று தான் பேஸ்புக் இணையத் தளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது. அந்த இணையத் தளத்தின் சில பக்கங்களில் நபிகள் நாயகம் குறி்த்த புகைப்படங்களை சமர்பிக்குமாறு கூறி சிலர் விஷமச் செயலில் ஈடுபட்டனர்.

இதை எதிர்த்து சில வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்ததையடுத்து பேஸ்புக் இணையத் தளத்தை வரும் 31ம் தேதி வரை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த இணையத் தளத்துக்கு பாகிஸ்தான் தடை விதித்தது. தனது இணையத்தில் இடம் பெற்ற அந்தப் பக்கங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

இந் நிலையில் யூ டியூபும் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தொலைத்தொடர்புத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த இரு இணையத் தளத்தின் உரிமையாளர்களும் பாகிஸ்தான் அரசை தொடர்பு கொண்டு பேசி, மத நம்பிக்கைகளை புண்படுத்தாத வகையில் தளத்தை நடத்த முன்வரலாம் என்று தொலைத் தொடர்புத்துறை கூறியுள்ளது.

இந்த இரு இணையத் தளங்கள் தவிர பிளிக்கர், என்சைக்ளோபீடியா உள்ளிட்ட மேலும் 450 இணையத் தளங்களையும் பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.

யூ டியூப் இணையத்தை 2008ம் ஆண்டிலும் ஒருமுறை பாகிஸ்தான் முட்க்கியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் 2 கோடி பேர் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சீனாவல் பேஸ்புக் மற்றும் யூ டியூப் இணையத் தளங்களுக்கு நிரந்தரமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Source : http://www.inneram.com/201005208421/2010-05-20-13-20-00

1 comment:

Unknown said...

PAK, really did good work,

thanks for sharing.

LinkWithin

Related Posts with Thumbnails