Monday, May 24, 2010

ஹலோ…girls உங்களைதான்…



நம் பெண்கள் நல்ல முன்னேற்ற பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள்….கல்வியிலும் அலுவலகங்களிலும் தனி இடத்தை பிடித்திருக்கிறார்கள்.நாம் வெளியில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தான் இந்த பதிவு….இப்படிதான் இருங்கள் என்று சொல்லவில்லை,இப்படியும் முயன்று பாருங்களேன்…வேறு மாற்று வழிகள் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்……..
இன்னும்;முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்;தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது;இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;மேலும்,(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,அல்லது தம் தந்தையர்கள்,அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள்,அல்லது தம் புதல்வர்கள்,அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள்,அல்லது தம் சகோதரர்கள்,அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள்,அல்லது தங்கள் பெண்கள்,அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்,அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர ,(வேறு ஆண்களுக்குத்)தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;மேலும்,தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;மேலும்,முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றிப் பெறும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்’
(24: 31)

1.உங்கள் ஆடைகள் கண்ணியமானதாக இருக்கட்டும்.ரொம்ப ‘டைட்டா’கவும் இல்லாமல் அதிக ‘லூசா’கவும் இல்லாமல்,கண்களை உறுத்தாமல் கச்சிதமாக இருக்கட்டும்….
2.உடலை முழுக்க மூடும் ‘புர்கா’ அல்லது ‘அப்பாயா’ போடுவது உடை விஷயத்தை எளிதாக்கிவிடும்.அப்படியில்லையென்றால்,முழுக்கை ‘சல்வார்’ அல்லது முழுக்கை ‘குர்தா’ போன்றவை அணிந்து தலையை மூடும் scarf போட்டுக் கொள்ளலாம்…..
3.அதிக அலங்காரத்தையோ வாசணை திரவியங்களையோ முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்….
4.ஆண்களிடம் நட்பாகப் பழகுவது தவறில்லை.ஆனால், அது ஒரு கண்ணியமிக்க நட்பாக மட்டுமே இருக்கட்டும்.மாறாக,தேவையில்லாத ‘வெட்டி’ அரட்டைகளுக்கும் ‘வழிசல்’களுக்கும் இடம் கொடுப்பதாக இருக்க வேண்டாம்….
5.யாரேனும் தங்களிடம் நட்பின் பேரில் உரிமை எடுத்துக் கொள்ள முற்பட்டால்,அவர்களிடம் கடுமையாக நடக்க தயங்காதீர்கள்….
6.புண்ணகை முகமாக இருங்கள்.ஆனால்,தேவையில்லாமல் சிரிக்கும்,வரையில்லாமல் பேசும் பெண்களில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டாம்….
7.தங்கள் நன்பர்களைப் பற்றி பெற்றோரிடம் எந்த ஒளிவுமறைவும் வைத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஆண்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள்.அது உங்கள் நன்பர்களை உங்களுடன் வரைமுறையோடு பழகச் செய்யும்…..
8.’late night’ போன்களையும் ‘sms’களையும் தவிருங்கள்……
9.தற்போது batch party,batch tour போன்றவை சகஜம்.அச்சமயங்களில் முடிந்தளவு பெண்கள் கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்ளுங்கள்.
10.எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவராக தங்களைக் காட்டிக் கொள்ளாதீர்கள்…..
11.பிரச்சனைகளை பொறுமையுடன் கையாள்பவராக இருங்கள்…..
மொத்தத்தில்,பிறரின் பார்வைக்கு நீங்கள் ஒரு மதிப்புமிக்க கண்ணியமான பெண்ணாகத் தெரிய வேண்டுமே தவிர பேதை பெண்ணாக அல்ல……
Posted by anbudan 
Labels: டிப்ஸ்
Thanks to : http://islampreaches.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails