முன்னறிவிப்பு
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
என்னிடமிருந்து ஒரு செய்தியை நீங்கள் தெரிந்திருந்தாலும் அதையும் பிறருக்கு சொல்லி விடுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதார நூல்: புகாரி
மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையை உணர்ந்து மக்களுக்கு நேர்வழி கிடைக்க ஆசைப்பட்டு அல்லாஹ் கொடுத்த அறிவைக் கொண்டு சிந்தித்தும் மார்க்க அறிஞர்களின் உரையாடல்களை கேட்டும் கட்டுரைகள் வரையப்பட்டுள்ளன.
நமது மார்க்கம் ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதால் பல்வேறு இணையதளங்களில் குர்ஆன் ஹதீஸ்களை படித்தும் அவற்றை சேகரித்தும் இங்கு கட்டுரைகள் வரையப்பட்டுள்ளன.
இங்கு சில கட்டுரைகள் பிற இணையங்களிலிருந்து சேகரிக்கப் பட்டிருந்தால் அதற்கான லி்ங்கையும் கொடுத்துள்ளேன் மற்றபடி எனக்கு ஞாபகமறதி ஏற்பட்டு இணையதள லிங் மறந்திருந்தால் இணைய லிங் விடுபட்டிருக்கும் எனவே சம்பந்தப்படட இணையதள மாடரேட்டர்கள் தங்கள் கட்டுரைகளை இந்த தளத்தில் கண்டால் உடனே அறிவுறுத்தினால் அதற்கான லிங்கை முன்வந்து கொடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!
ஏகத்துவம் ஓங்கி வளர ஆசைப்படும் சகோதரர்கள் இங்குள்ள கட்டுரைகளை ஆராய்ந்து பார்த்து தாராளமாக தங்களுடைய பிளாக்குகளில் பதிக்கலாம்! ஆனால் இந்த கருத்துக்களை மார்க்க அறிஞர்களை தரக்குறைவாக சாடுவதற்காக கிண்டல் செய்வதற்கோ பயன்படுத்தாதீர்கள்!
மார்க்கத்திற்காக தங்களை அர்பணித்து பணியாற்றும் சிறந்த தலைவர்களின் அறிய தகவல்கள் இருந்தால் அதை இங்கு கொடுத்து மக்கள் பயனுறச் செய்யலாம்!
அல்லாஹ் நம் உள்ளங்களையும், செயல்களையும் அறிபவனாக உள்ளான் அவன் நம் அனைவருக்கும் நிரப்பமாக நற்கூலி வழங்குவானாக!
முன்னறிவிப்பு:
Source : http://islamicparadise.wordpress.com/2010/02/26/1/
No comments:
Post a Comment