இஸ்லாமாபாத்: பேஸ்புக், யூடியூப் ஆகியவற்றை தடை செய்த பாகிஸ்தான் இன்று முதல் ட்விட்டரையும் தடை செய்து விட்டது.
நாடு முழுவதும் ட்விட்டர் தளத்துக்கான சேவையை இன்டர்நெட் சேவையாளர்கள் துண்டித்ததால், ட்விட்டர் தளத்துக்குள் போக முடியாமல் பாகிஸ்தானியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். ட்விட்டர் தளத்துக்குள் போக முயன்றபோது, "this site is restricted" என்ற தகவலை பாகிஸ்தானியர்கள் காண முடிந்தது.
கடந்த 2 நாட்களாக பேஸ்புக், யூடியூப் ஆகியவற்றை தடை செய்து வந்த பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை தனது நடவடிக்கையின் ஒரு பகுதியாக ட்விட்டருக்கும் இன்று பூட்டுப் போட்டது.
இஸ்லாம் மத விரோத கருத்துக்கள் இந்த இணையதளங்களில் இடம் பெற்றிருப்பதால் இவை தடை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்து பேஸ்புக்கில் படங்கள் இடம் பெற்றிருந்தன. இதை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த இணையதளத்தை தடை செய்யுமாறு லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் விளைவாக பேஸ்புக்கை தடை செய்தது பாகிஸ்தான் அரசு. தொடர்ந்து யூடியூபையும் தடை செய்தது. இந்த நிலையில் இன்று ட்விட்டருக்கும் தடை போடப்பட்டு விட்டது.
பாகிஸ்தான் தொலைத் தொடர்புத்துறையினரால் இதுவரை 450 இணையத் தள முகவரிகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : http://www.inneram.com/201005218443/2010-05-21-15-00-27
பேஸ்புக், யூடியூப்-பைத் தொடர்ந்து ட்விட்டரையும் தடை செய்தது பாகிஸ்தான்
No comments:
Post a Comment