பிரபஞ்சத்தில் காணப்படும் அசாதாரண சமநிலை
ஹாருன் யஹ்யா
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்¢ (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்¢ பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்¢ உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும். (குர்ஆன் 67:3-4)
(அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது¢ அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை¢ அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை¢ அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான். (குர்ஆன் 25:2)
நாத்திக தத்துவங்களும் கோட்பாடுகளும் பிரபஞ்சம் எவ்வித உதவியுமின்றி தன்னால் இயங்கும் இயந்திரங்கள் போன்றவை என்றும் அதில் செயற்படும் அதிசயமான ஒழுங்கும் அசாதாரண சமநிலையும் தற்செயலாக உருவானது என்று வாதிடுகின்றன. இருப்பினும் விஞ்ஞானம் என்று அழைக்கப்பட்டு வந்த நாத்திகத்தினதும் டார்வினதும் பிழையான தத்துவங்களுக்கு விஞ்ஞான ரீதியிலேயே பதிலளிக்கப்பட்டு விட்டன.
20ம் நூற்றாண்டில் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக வளர்ச்சியடைந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் வானவியல் மற்றும் உயிரியல் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் வாழ்கையும் பிரபஞ்சமும் படைக்கப்பட்டவை என்பதை நிரூபித்துள்ளன. பெரு வெடிப்பு கொள்கையின் மூலம் பிரபஞ்சம் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து படைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்ட போது டார்வினது ஆய்வுகள் குப்பையில் வீசி எறியப்பட்டன. நவீன கண்டுபிடிப்புகள் விஞ்ஞான ஆய்வுகள் இந்த உலகத்தில் பெரும் அதிசயத்தக்க சமநிலைகள் காணப்படுவதை வெளிப்படுத்திய போது நாத்திகத்தின் அடிப்படை ஆதாரமற்ற தத்துவங்கள் மறைய தொடங்கின.
உயிர் வாழ்வதற்கு தேவையான அத்தியவசிய காரணிகளை ஆராயும் போது உலகம் மட்டுமே இந்த குறிப்பிட்ட காரணிகளை கொண்டுள்ளதை காணலாம். வாழ்வதற்கு தேவையான சூழலை ஆராயும் போது அங்கு எம்மை சுற்றி எண்ணிலடங்காத காரணிகள் ஒரே நேரத்தில் எவ்வித முடிவுமின்றி நடைபெற்று கொண்டிருப்பதை காணலாம். பிரபஞ்சத்தில் பல நூறு பில்லியன் பால்வெளிமண்டலங்கள் (கெலக்ஸிகள்) அவை ஒவ்வொன்றும் குறைந்தது நூறு பில்லியன் நட்சத்திரங்களை கொண்டுள்ளது.1 இந்த எல்லா கெலக்ஸிகளிலும் சிலவேளை நட்சத்திரங்களை விட கோல்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவ்வாறு மிதமிஞ்சிய எண்ணிக்கையில் கோல்கள் காணப்பட்ட போதும் உலகில் மட்டுமே உயிர்வாழ தேவையான அனைத்து சூழல்களும் காணப்படுவது அது உருவாக்கப்பட்டுள்ளதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.
பெரு வெடிப்பு ஏற்படுத்திய தாக்கம் முதல் அணுவிற்கு மதிப்பு ஏற்பட்டது வரை - நட்சத்திரங்களில் இரசாயன மாற்றம் ஏற்பட காரணமான நான்கு காரணிகள் முதல் - தண்ணீரின் அடர்தியின் அளவிற்கு சூரியன் ஒளியை செலுத்தியது முதல் - வளிமண்டலத்தில் காணப்படும் வாயுவின் அளவிற்கு பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்ட போது - சூரியனிலிருந்து பூமியின் தூரம் அதன் பாதையில் சுழல்வதற்கு ஏற்றவகையில் நிறுத்தப்படடபோது - மலைகளும் கடல்களும் சரியான முறையில் செயல்படும் பொருட்டு பூமி அதன் பாதையில் சுழலும் வேகம் முதல் : ஒவ்வொரு தரவுகளும் எமது வாழ்கைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதை காணலாம். இன்றைய விஞ்ஞான உலகம் இந்த தரவுகளை அன்துரோபிக் பிரின்ஸிபள் என்றும் பைன் டியுனிங் என்றும் அழைக்கிறது. இந்த கோட்பாடுகள் பிரபஞ்சம் குறிக்கோள் அற்றது, கட்டுப்படுத்த முடியாதது, தற்செயலாக பிணைக்கபட்ட பொருட்களால் ஆனது போன்ற வாதங்களை நிராகரித்து அவை மனித வாழ்வோடு தொடர்புடையது என்பதோடு அவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
நாம் மேலே குறிப்பிட்ட வசனத்தில் அல்லாஹ்வின் படைப்பில் அளவும் ஒற்றுமையும் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள அரபு சொல்லான தக்தீரன் என்பதன் பொருள் வடிவமைத்தல் - அளவு - அளந்து படைத்தல் என்பதாகும். இந்த சொல்லானது அத்தியாயம் அல்-புர்கான்: 2 பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். திப்கன் என்ற அரபு மொழிச்சொல்லின் கருத்து ஒற்றுமையாக - இந்த சொல்லானது அத்தியாயம் அல்-முல்க் : 3 மற்றும் அத்தியாயம் நூஹ் : 15 ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். மேலும் அல்லாஹ் அத்தியாயம் அல்-முல்கில் தபவுதின் என்ற சொல்லை பயன்படுத்துகிறான். இதன் கருத்து ஒத்துழைப்பு வழங்காமை - கட்டுப்படாமை - எதிர்ப்பு என்பதாகும். அதாவது அதில் குறை அல்லது சமநிலையற்ற தன்மையை தேடுபவர்களால் அவற்றை காணமுடியாது என்பதாகும்.
பைன் டியுனிங் அல்லது அசாதாரண சமநிலை என்ற சொல் 20ம் நூற்றாண்டின் இறுதியில் பயன்படுத்தப்பட்டது. இந்த உண்மையை குர்ஆன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே பயன்படுத்திவிட்டது. கடந்த கால் நூற்றாண்டில் பல விஞ்ஞானிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் இந்த பிரபஞ்சம் தற்செயலாக இணைந்த பொருட்களின் தொகுப்பு என்பதை மறுத்துள்ளனர். அதற்கு மாற்றமாக மனித வாழ்கைக்கு ஏற்ற வகையில் அவை அதிசயமான வகையில் வடிவமைப்பு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதை காணலாம். பிரபஞ்சத்தில் காணப்படும் பல தன்மைகள் வாழ்கைக்கு உதவும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. பௌதீகவியளாளர் டாக்டர் கார்ள் கிப்பர்சன் இந்த உண்மையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
1960களில் சில பௌதீகவியளாளர்கள் எமது பிரபஞ்சம் மனித வாழ்கைக்கு ஏற்றவகையில் பைன் டியுனிங் அல்லது சமநிலை படுத்தப்பட்டுள்ளதை அறிந்தார்கள். 2
பிரித்தானிய வானியல் நிபுணர் பேராசிரியர் ஜோர்ஜ். எப். ஏல்லிஸ் இந்த சமநிலையை பற்றி இவ்வாறு கூறுகிறார்
விஞ்ஞான கோட்பாட்டில் அதிசயமான சமநிலை நிகழ்வதால் இது (குழப்பத்தை) இலகுவாக்குகிறது. குழப்பமானதை நாம் உணரும் போதும் இந்த உலகின் நிலையை அவதானிக்கும் பொழுதும் அதிசயமானது என்ற சொல்லை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. 3
ஈர்ப்பு :
தற்போதய அளவை விட ஈர்ப்பு சக்தி பலமாக இருந்தால் அளவுக்கதிகமான அமோனியா மற்றும் மீதேன் பூமியின் வளிமண்டலத்தில் சேமிக்கப்பட்டு -அவை வாழ்கையை பெரும் அளவில் பாதிக்கும்.
தற்போதய அளவை விட ஈர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் பூமியின் வளிமண்டலம் அளவுக்கதிமான நீரை இழந்து வாழ்வதற்கான சூழ்நிலையை இழந்துவிடும்.
சூரியனிலிருந்து பூமியின் தூரம்
தற்போதைய அளவைவிட அதிகமாக இருந்தால் பூமி மிகவும் குளிரடைந்துவிடும். வளிமண்டலத்தின் நீர் சுழற்சி முறை பாதிப்படையும். இந்த பூமி குளிர் பிரதேசமாக மாறிவிடும்.
பூமி சற்று சூரியனுக்கு அருகில் இருந்தால் பூமி எரிந்து சாம்பலாகிவிடும். வளிமண்டலத்தின் நீர் சுழற்சிமுறை மிகவும் பாதிப்படையும். வாழ முடியாத நிலை ஏற்படும்.
பூமி அடுக்கின் பருமன்
அடுக்கு தற்போதைய அளவைவிட பருமனாக இருந்தால் வளிமண்டலத்திலுள்ள அளவுக்கதிகமான ஒட்சிசன் இங்கு மாற்றப்பட்டுவிடும்.
அடுக்கு தற்போதைய அளவை விட குறைவாக இருந்தால் எரிமலை நிகழ்வுகள் அதிகமாகி வாழ்வை கடினமாக்கிவிடும்.
பூமி சுற்றும் வேகம்
தற்போதய வேகத்தை விட குறைவாக இருந்தால் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வித்தியாசம் அளவுக்கதிகமாக அதிகரித்துவிடும்.
இதை விட அதிகமாக இருந்தால் வளிமண்டல காற்று கடும் வேகத்துடன் வந்து சேரும். புயலும் சூறாவளியும் வாழ்வை கடினமாக்கிவிடும்.
பூமியின் காந்த வலையம்
தற்போதய நிலையை விட சக்திமிக்கதாக இருந்தால் மிக கடுமையான மின்காந்த சூறாவளி ஏற்படும்.
அது பலவீனமானதாக இருந்தால் சூரியனிலிருந்து வெளிப்படும் பயங்கரமான துகள்களிலிருந்து பூமி பாதுகாப்பை இழந்துவிடும்.
அல்பேடோ பாதிப்பு (பூமி பெற்று உள்வாங்கும் மற்றும் பிரதிபளிக்கும் ஒளியின் வீதம்)
தற்போதய அளவை விட இது அதிகமானால் பூமி குளிர்ந்த பூமியாக மாறிவிடும்.
தற்போதய அளவை விட இது குறைவாக இருந்தால் பச்சைவீட்டு பாதிப்பு மிதமிஞ்சிய வெப்பத்தை ஏற்படுத்திவிடும். முதலில் பூமியிலுள்ள பனிப்பாறைகள் உறுகி வெள்ளம் ஏற்படும.; பின்பு எரிந்துவிடும்.
வளிமண்டலத்தில் காணப்படும் ஒட்சிசன் மற்றும் நைட்ரஜனின் அளவு
தற்போது காணப்படும் அளவை விட அதிகமாக இருந்தால் முக்கிய தொழிற்பாடுகளின் எதிர்மறை விளைவு அதிகரிக்கும்.
தற்போதய நிலையை விட குறைவாக இருந்தால் முக்கியமான தொழிற்பாடுகள் மிக அதிகமாக குறைந்துவிடும்.
வளிமண்டலத்தில் கார்பன் டை ஒட்சைட் மற்றும் நீரின் அளவு
தற்போதய அளவை விட அதிகமாக இருந்தால் வளிமண்டலம் அதிகமாக வெப்பமடைந்துவிடும்.
தற்போதய அளவை விட குறைவாக இருந்தால் வெப்பநிலையும் வளிமண்டலமும் விழுந்துவிடும்.
ஓசோன் மண்டலத்தின் பருமன்
தற்போதய அளவை விட அதிகமாக இருந்தால் பூமியின் வெப்பநிலை அதிகளவு குறைந்துவிடும்.
தற்போதய அளவை விட குறைவாக இருந்தால் பூமி கடுமையாக வெப்பமாவதுடன் சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும்.
பூகம்பம்
தற்போதய அளவை விட அதிகமாக இருந்தால் உயிரினங்களுக்கு அடிக்கடி தொல்லை ஏற்படும்.
தற்போதய அளவை விட குறைவாக இருந்தால் கடலுக்கு அடியிலுள்ள சத்துகள் தண்ணீரில் கலக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இது கடலிலும் சமுத்திரங்களிலும் உள்ள உயிர்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களையும் பாதிப்படைய செய்யும் விளைவுகள் ஏற்படும்.
பூமியின் சாய்வு
பூமி அதன் பாதையில் 23 பாகையளவு சாய்ந்து காணப்படுகிறது. இந்த சாய்வே பருவங்களில் மாற்றங்கள் ஏற்பட காரணமாக இருக்கிறது. தற்போதைய அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்குமானால் பருவங்களுக்கு இடையிலான வெப்பநிலை அதன் உச்சநிலையை அடைந்துவிடும். கோடைகாலத்தில் தாங்க முடியாத வெப்பமும் மாரி காலத்தில் மிக கடுங்குளிரும் காணப்படும்.
சூரியனின் அளவு
சூரியனை தற்போதய அளவைவிட சின்ன நட்சத்திரமாக இருந்தால் பூமி உறைந்து போகும் அல்லது தற்போதைய அளவைவிட பெரிதாக இருந்தால் பூமி என்;றோ எரிந்து போயிருக்கும்.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு
இதை விட அதிகமாக இருந்தால் சந்திரனின் சக்திவாய்ந்த ஈர்ப்பானது வளிமண்டலத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தியிருக்கும். பூமி தன்னை தானே சுற்றும் அந்த பாதையிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
இதை விட குறைவாக இருந்தால் அது மோசமான காலநிலை மாற்றத்திற்கு கொண்டு செல்லும்.
நாம் இங்கு குறிப்பிட்டவைகள் பூமியில் உயிர் தோன்றி வாழ தேவையான மிக சில முக்கிய சமநிலைகளாகும். பூமியும் பிரபஞ்சமும் பல்வேறு தற்செயலான நிகழ்வுகளின் காரணத்தால் தோன்றியிருக்க முடியாது என்பதை நிராகரிக்க இந்த சில உதாரணங்களே போதுமானதாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான பைன் டியுனிங் மற்றும் அன்துரோபிக் பிரின்சிபள்ஸ் கோட்பாடுகள் அல்லாஹ்வின் படைப்பின் சான்றுகளாகும். இந்த அசாதாரணமான ஒற்றுமையும் நுண்ணிய ஒழுங்கும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னறே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வில் உதவிய நூற்கள்
1- Carl Sagan, Cosmos (Avenel, NJ: Wings Books: April 1983), 5-7.
2- Karl Giberson, “The Anthropic Principle,” Journal of Interdisciplinary Studies 9 (1997).
3- George F. Ellis, "The Anthropic Principle: Laws and Environments,” The Anthropic Principle, F. Bertola and U. Curi (New York: Cambridge University Press: 1993), 30.
www.harunyahya.com/other/tamil/articles
No comments:
Post a Comment