Monday, May 31, 2010

ஏ.டி.எம்மில் ஒரே நாளில் லட்சம் ரூபாய்!

எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரே நாளில் ஏ.டி.எம் வழியாக அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று கொள்ளும் வசதி நாளை முதல் செய்யப்படவிருக்கிறது.

பணம் எடுப்பதற்கு வசதியாக வங்கிகள் வழங்கியுள்ள ஏ.டி.எம் மெஷின் வசதியில், ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.

ஒரு சில வங்கிகளின் ஏ.டி.எம்களில் 25 ஆயிரம் ரூபாய் வரை தான் எடுக்க முடியும். எச்.டி.எப்.சி.,வங்கி ஏ.டி.எம்களில் 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும். தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை ஏ.டி.எம்மில் பணம் எடுக்க எச்.டி.எப்.சி. வங்கி வழிவகை செய்துள்ளது.

நாளை முதல் தனது வங்கி ஏ.டி.எம்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை பெறுவதற்கு எச்.டி.எப்.சி வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இதே போல இந்த வங்கியின் 'டெபிட் கார்டு'களை பயன்படுத்தி கடைகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை பெறுமானமுள்ள பொருட்களை வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியை மற்ற வங்கிகளும் வெகுவிரைவில் அமல்படுத்த உள்ளது. ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே டெபிட் கார்டில் பொருட்களை வாங்கும் வசதி முன்பு இருந்தது. இதே போல குழந்தைகளுக்கான 'கிட்ஸ் அட்வான்ஸ் டெபிட்' கார்டில் 2,500 ரூபாய் வரை பொருட்களை பெறவும், 1,500 ரூபாய் வரை பணம் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான டெபிட் கார்டில் முன்பு 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடிந்தது. தற்போது 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெறறுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
http://www.inneram.com/201005318633/can-withdraw-1-lakh-from-hdfc-atms
ஏ.டி.எம்மில் ஒரே நாளில் லட்சம் ரூபாய்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails