Wednesday, May 26, 2010

ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லீம் அசோஷியேஷன்

ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லீம் அசோஷியேஷன் கடந்த 1976 ஆம் ஆண்டு அமீரகத்தின் வணிகத்தலை நகராம் துபாயில் துவங்கப்பட்டது.

ஈமான் அமைப்பு கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றிவரும் சமுதாயப் பணிகள் எளிதில் மதிப்பிடக் கூடியதல்ல. ஈமான் அமைப்பில் ஆரம்பம் முதல் தங்களை இணைத்துக் கொண்டு இன்றும் சேவை புரிந்து வரும் பலரும் நம் மத்தியில் உள்ளார்கள்.


ஈமான் அமைப்பு அமீரகத்தில் துபாய் இந்தியத் துணைத் தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள INDIAN COMMUNITY WELFARE COMMITTEE (ICWC)- இணைத்துக் கொண்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்கள் அல்லலுறும் பட்சத்தில் அவர்களுக்கு உடன் உதவிடும் பணியில் ஈமானின் செயலாளர்களில் ஒருவராகிய ஏ. முஹம்மது தாஹா ஈடுபட்டுள்ளார்.


ஈமான் அமைப்பின் பணிகளில் சமுதாய விடியலுக்காக செயல்படும் திட்டத்தில் சிறப்பான இடத்தில் இருப்பது ஏழை மாணவ மாணவியர்களின் மேற்படிப்புக்காக கல்வி உதவித் தொகை வழங்கி வருவது. இதன் மூலம் ஐநூறுக்கும் மேற்பட்டோர் தங்களது உயர்கல்விக் கனவை நனவாக்கியுள்ளனர்.


ஈமான் அமைப்பு வருடம்தோறும் மீலாது விழா பேச்சுப் போட்டிகளை அனைத்து சமூக மக்களும் பங்கேற்கும் வண்ணம் நடத்தி பல்வேறு சிறப்புப் பரிசுகளை வழங்கி வருகிறது. இதற்கு இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், எமிரேட்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களும் ஈ.டி.ஏ அஸ்கான், அல் ஹசீனா ஜுவல்லரி, லேண்ட்மார்க் ஹோட்டல், இந்தியன் சில்க் ஹவுஸ், ஜெனாரட் வாட்சஸ், மவ்லான் ஹஜ் உம்ரா சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பரிசுகளை வழங்கி வருகின்றன.


ஈமான் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள லூத்தா மஸ்ஜித் எனப்படும் குவைத் பள்ளியில் இங்கு சமுதாய மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு ரமலான் மாதத்தில் தினமும் 5000 க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த சகோதரர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது முக்கிய நிகழ்வு. இதில் பல்வேறு தமிழ் அமைப்புகளும், இந்திய துணைத் தூதரக அதிகாரிகளும் பங்கேற்று சிறப்பு சேர்த்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாய் அமைந்து வருகிறது.


இதுமட்டுமல்லாது மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி, தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இத்தகைய பல்வேறு நிகழ்வுகள் நடைபெறக் காரணமாய் இருந்து வரும் ஈமான் அமைப்பிற்கு தலைவராக விளங்கும் ஈ.டி.ஏ. அஸ்கான் நிறுவனக் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுதீன் அவர்களும் இணை மேலாண்மை இயக்குனர் கல்விக்குழுத் தலைவராக அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் அவர்களும் இருந்து வழிகாட்டி வருகின்றனர். ஈமான் அமைப்பின் பிற நிர்வாகிகள் விபரம் வருமாறு :


துணைத்தலைவர்கள் கே.எம்.அஹமது முஹைதீன்
கவிஞர் எம்.ஏ.அப்துல் கத்தீம்
எம். அப்துல் ரஹ்மான்
பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி
கல்விச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா
யு. முஹம்மது ஹிதாயத்துல்லா
விழாக்குழு செயலாளர் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன்

ஊடகத்துறை பொறுப்பாளர் : முதுவை ஹிதாயத்
ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாஸின்
தணிக்கையாளர் எஸ்.எம். பாரூக்

அலுவலகப் பொறுப்பாளர் இஸ்மாயில் ஹாஜியார்


தொடர்பு முகவரி ஈமான்
தபால் பெட்டி எண். 13302
துபாய்
தொலைபேசி 04 266 1415
தொலைநகல் 04 266 4142
இணையதளம் www.imandubai.org
மின்னஞ்சல் iman1976@emirates.net.ae

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails