Tuesday, May 18, 2010

மாநில அளவில் அதிக மார்க் பெற்ற மாணவி மேல்படிப்பு தொடர பண உதவி நாடுகிறார்!

மாநில அளவில் பிளஸ் 2தேர்வில் உளவியல் பாடத்தில் முதலிடம் பிடித்த காயல்பட்டணம் பள்ளியைச் சேர்ந்த‌ ஏழை மாணவி பாத்திமுத்து, தனது மேல்படிப்பு தொடர பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்செந்தூர்அடுத்த காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமுத்து. இவர் இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் -123, ஆங்கிலம் -92, மனை இயல் -125, உளவியல் -172, எழுத்து மற்றும் செய்முறை தேர்வு - 366. மொத்தம் - 878/1200. பாத்தி முத்து கூறுகையில் எனது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் தான் காரணம். நர்சிங் அல்லது ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். அதற்கு போதுமான பண வசதியில்லை. எனக்கு பண உதவி செய்தால் மேல்படிப்பை தொடர தயாராகவுள்ளேன் என்றார்.

உதவி செய்ய விரும்புவோர் இவர்களிடம் தொடர்பு கொள்ளலாம். பாத்திமுத்து, பா/ கா . நாகூர் முத்து , 49 பள்ளிமார்தெரு, காயல்பட்டணம், தூத்துக்குடி மாவட்டம் , மொபைல் எண்: 9698386885. ப‌ண‌ம் அளிக்க‌ விரும்பும் ந‌ல் உள்ள‌ங்க‌ள் A/c. No.: 10743 Indian Overseas Bank, Kayalpatnam என்ற‌ வ‌ங்கி க‌ண‌க்கில் செலுத்த‌லாம். 
Source : http://www.tutyonline.net/view/31_3942/20100515192639.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails