Tuesday, May 11, 2010
மனிதனின் பலவீனம்
மனிதனின் பலவீனம்
ஹாருன் யஹ்யா
இறைவன் மனிதனை ஒரு முழுமையான படைப்பாக படைத்து அவனுக்கு சிறந்த பண்புகளை கொடுத்துள்ளான். அவனது தனித்துவமான சிந்திக்கும் திறனும், ஒரு விடயத்தை புரிந்து கொள்ளும் விதமும், நாகரீகத்தை அறிந்து அதை அதிகரிக்க செய்யும் அறிவு ஆகியவை மற்ற அனைத்து விலங்குகளையும் விட அவனை மேன்மைபடுத்துகிறது.
இவ்வாறான அனைத்து சிறப்பம்சங்களை கொண்டுள்ள மனிதனின் உடல் மாத்திரம் ஏன் அடிக்கடி உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறுவது ஏன்? சாதாரணமாக பார்க்க முடியாத மைக்ரோப் அல்லது பெக்டீரியாக்களால் தாக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதேன்? ஒவ்வொரு நாளும் அவன் தன்னை சுத்தப்படுத்துவதற்காக சில மணிநேரங்களை ஒதுக்குவது ஏன்? உடலை பாதுகாக்க வேண்டியிருப்பதேன்? அவன் வயோதிபத்தை அடைவது ஏன் ?
மக்கள் இந்த தேவைகளை இயற்கையானவை என நினைக்கிறார்கள், இருப்பினும் மனிதன் தேவையுடையவனாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது. மனிதனின் ஒவ்வொரு தேவையும் விசேடமாக படைக்கப்பட்டவையாகும். மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (ஸ_றத்து அன்-நிசா: 28)
என்ற வசனத்தின் மூலம் இதன் உண்மையை புரிந்து கொள்ளலாம்.
மனிதனது அத்தியவசிய தேவைகள் அனைத்தும் ஒரு காரணமாகவே படைக்கப்பட்டுள்ளன. அதாவது அவன் இறைவனது அடிமை என்பதையும் இந்த உலகம் தற்காலிகமான இடம் என்பதையும் அவனுக்கு விளக்குவதற்காகவேயாகும்.
மனிதனுக்கு அவனது பிறந்த திகதியிலும் பிறந்த இடத்திலும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அதை போன்று அவன் எப்போது எந்த இடத்தில் இறப்பான் என்பதும் தெரியாது. மேலும் அவனது வாழ்வில் ஏற்படக்கூடிய துன்பமான நிகழ்வுகளை தடுத்து நிறுத்த அவன் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
மனிதன் பலவீனமானவன் அதனால் அவன் வாழ பலவகையான பராமரிப்புகள் தேவைப்படுகிறன. அவன் உலகில் திடீரென ஏற்படும் நிகழ்வுகளால் செய்வதறியாது பாதுகாப்பற்றவனாக இருக்கிறான். அதைபோன்று தன்னை உயர்ந்த நாகரீகத்தை உடையவனாக கருதுபவனாக இருந்தாலும் அல்லது ஒதுக்குப்புறமான மலைப்பிரதேசத்தில் அபிவிருத்தி அடையாத கிராமத்தில் வாழ்பவனாக இருந்தாலும் அவன் திடீரென ஏற்படும் சுகவீனங்களால் பாதிப்படைபவனாக இருக்கிறான். எந்த நேரத்திலும் குணப்படுத்த முடியாத அல்லது பயங்கரமான நோய் ஏற்படக்கூடியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் ஒரு விபத்து ஏற்பட்டு அதன் மூலம் அவனது உடல் சக்தி அல்லது தனது பொறாமைப்படும் அழகு திரும்ப பெறவே முடியாது என்ற நிலை ஏற்படும். மேலும் இது அனைவருக்கும் எல்லா தகுதிகளிலுள்ளவர்களுக்கும் எல்லா இன மக்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி ஏற்படும். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை கொண்ட புகழ்பெற்ற ஒருவருக்கும் ஒரு சாதாரண இடையனுக்கும் ஒரு நாள் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முழுமையாக அவனது உடலமைப்பு மாறக்கூடும்.
மனித உடல் 70-80 கிலோ எடையுள்ள எலும்புகள் மற்றும் சதையால் மூடப்பட்ட பலவீனமான படைப்பாகும். அதை மிக சிறிய தோல் பாதுகாக்கிறது. இந்த பலவீனமான தோல் மிக இலகுவில் பாதிப்படைய கூடியது. அளவிற்கு அதிகமான சூரிய ஒளி அல்லது காற்றால் அது உலர்ந்து விடும். மனிதன் இயற்கை காரணிகளால் பாதிப்படையாமல் இருக்க அவனது அவன் வாழும் சூழலிருந்து பாதுகாப்பு பெற வேண்டியவனாக இருக்கிறான்.
மனிதன் அதிசயமான உடலமைப்புடன் இருந்தாலும் அதன் சதை, எலும்புகள், நரம்புகள், இதய நாளங்கள், கொழுப்பு அனைத்தும் அழுக கூடியதாக இருக்கிறது. மனிதன் தற்போதுள்ள சதை மற்றும் கொழுப்பை தவிர்ந்த ஏனைய பொருட்களால் படைக்கப்பட்டிருந்தால் அந்த பொருள் பெக்டீரியா அல்லது ஏனைய நுண்ணங்கிகளுக்கு உள்ளே வராமல் தடுப்பவையாக இருந்திருந்தால் மனிதன் ஒருபோதும் நோயால் பாதிக்கப்பட மாட்டான். அறையில் சிலகாலம் வைக்கப்பட்டால் அழுகி புழுக்களால் உண்ணபடக்கூடிய சதையானது, மிகவும் மிருதுவான பலவீனமான பொருளாக உள்ளது.
மனிதன் இறைவனை அடிக்கடி சிந்திக்கும் பொருட்டு அவனது உடலின் அத்தியசவசிய தேவைகளை உணர்கிறான். குளிரான காலநிலையில் அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் ஏற்பட காரணமாகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியமான வாழ்விற்கு அத்தியவசிய தேவையான 37 செல்சியஸ் வெப்பத்தை பாதுகாக்க தவறுகிறது. அவனது இதய துடிப்பு குறைவடைய இரத்த ஓட்டம் குறைவடைகிறது. அதனால் இதய இரத்த குழாய்களில் அழுத்தம் அதிகரிக்கிறது. உடல் வெப்பத்தை மீண்டும் பெரும் பொருட்டு நடுக்கம் ஏற்படுகிறது. கைகள் கால்கள் மற்றும் விரல்களிலுள்ள இரத்த நாளங்களில் துடிப்பு குறைந்து 35 செல்சியஸாக உடல் வெப்பநிலை குறையும் போது உடல் அபாய நிலையில் இருப்பதாக உணரப்படும். ஒருவரது உடல் 35 செல்சியஸ் வெப்பநிலையை அடையும் போது கலைப்பு ஏற்பட்டு அடிக்கடி தூக்கத்திற்குள் நுழைகிறான். மூளை மெதுவாக செயல்படுகிறது. உடல் வெப்பம் சற்று குறைந்தாலும் அத்தகைய நிலை ஏற்படும். கடுமையான குளிர் உடல் வெப்பநிலையை 33 செல்சியஸிற்கு குறைக்கும் போது சுயநினைவு இழக்க நேரிடும். அதேநேரம் 24 செல்சியஸாக உடல் வெப்பநிலை குறையும் போது சுவாச தொகுதி தொழிற்பட மறுக்கிறது. 20 செல்சியஸில் மூளை பாதிப்படைகிறது. கடைசியாக 19 செல்சியஸில் தவிர்க்க முடியாத மரணம் ஏற்படுகிறது.
இவை மிக சில உதாரணங்களாகும். இந்த தகவல்களை உங்களுக்கு கூற காரணம், மனிதன் அவனது உலக வாழ்வை கேள்விக்குறியாக்கும் இத்தகைய காரணிகள் இருந்த போதும் மனிதன் அவனது வாழ்கை முறையில் திருப்தியடைய தவறுகிறான். இந்த கட்டுரையின் நோக்கம் மனிதன் இவ்வுலக வாழ்கையை கண்மூடித்தனமாக விரும்பி அவனது வாழ்நாள் முழுவதையும் கனவுகளுக்காக செலவிடுவதிலிருந்து தவிர்ந்து இதற்கு மாறாக எப்பொழுதும் இறைவனையும் மறுமையெனும் உண்மையான நிரந்தர வாழ்வை பற்றி சிந்திக்க வேண்டும என்பதாகும.;.
மனிதனுக்கு முடிவில்லாத சுவர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது. இவ்வுலக வாழ்வில் காணப்படும் உடல் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளிலிருந்து விடுபட்ட வாழ்வை சுவர்க்கத்தில் மனிதன் அனுபவிப்பான். அவனது விருப்பங்களை அனைத்தும் அவனது காலடியில் இருக்கும். மேலும் பசி, தாகம், கலைப்பு மற்றும் விபத்துகள் எதுவம் சுவர்க்கத்தில் இருக்காது.
மனிதன் இறைவனின் வழிகாட்டலில் தேவையுடையவனாக இருக்கிறான். இதைபற்றி குர்ஆன் கூறும் போது
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்¢ ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்¢ புகழுக்குரியவன். (ஸ_ரத்து ஃபாத்திஹா : 15)
Source : http://www.hyahya.org/other/tamil/articles/pages/022-weekness.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment