Monday, February 1, 2010

எதுவும் நடக்கலாம்


அன்னையின் அன்பான வாசம்
சமையலறையில்

காதலின் கைபிடியிக்குள் தம்பதிகள்
மணவரையில்

அழகுக்குழந்தைகளின்
ஆட்டம் நடுக்கூடத்தில்

பெரியோர்களின் சிறுநடை
ஒரு மூலையில்

அவசரங்களின் வேலையில்
அவரவர்கள் மூழ்கையில்

அரவணைக்க அழைத்தது
ஆட்டம்காட்டி பூமி

அதிர்ந்து விழுந்தது
அடுக்கடுக்கு மாடி

அத்தனையும் நடந்தது
கண்ணிமைக்கும் நொடியில்

சற்றுமுன் உலவிய உயிர்களனைத்தும்
ஊசலாடியது இடிபாடுகளுக்கிடையில்

எங்கோ நடக்கும் ஒன்றைப்பார்த்தே
ஏங்கி அழுதே மனம்குமுறி

எப்போதும் எதுவும் நடக்கும்
என்பதே இயற்க்கை

இதைஉணர்ந்து உயிர்வாழ்வதுதானே
மனித வாழ்க்கை..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நன்றி : http://niroodai.blogspot.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails