Thursday, February 4, 2010

தன் துணைக்குத் தாயுமானவன்

தனது வாழ்நாள் முழுக்க உலகம் மிக அழகியதெனச் சொல்பவன் எப்பொழுதும் எந்தக் குறைகளுமற்றவனாக இருப்பான். வாழ்க்கையில் சிறு சிறு குறைகள், தடங்கல்கள் வேண்டும்தான். அவைதான் வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்கி விடுகின்றன. இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்படைந்துவிடும்.

ஒரு பெண், மனித உடலின் பாதியளவே அதாவது சாதாரண மனிதர்களைப் போல இடுப்புக்குக் கீழ் எதுவுமற்றுப் பிறந்த பெண் தனது வாழ்க்கை மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தது எனவும் உலகம் மிக அழகியதெனவும் சொல்கிறாள். ஏன்?

படங்களைப் பாருங்கள்.















பாலியல் பாண்டங்களாகவும், விளம்பரக் கவர்ச்சிப் பொருளாகவும் உலகம் முழுதும் சித்தரிக்கப்படும் பெண்கள் இது போல ஊனமாகப் பிறந்துவிடின் அவர்களை மூலைக்குத் தள்ளி விடும் உலகில் அவளையும் ஆதரித்து முழுதாக அன்பு செலுத்தி திருமணம் செய்து ஒரு தாயைப் போலக் கவனித்துக் கொள்கிறான் ஒருவன்.

ஊனம் ஆணுக்கோ பெண்ணுக்கோ விதிவிலக்கல்ல. ஊனமுற்றவர்களைப் புறந்தள்ளிவிடுவதில் சமூகம் ஆணென்றோ, பெண்ணென்றோ பாரபட்சம் பார்ப்பதில்லை. எனினும், தனிமைப்படும் ஊனமுற்ற பெண்ணானவள் எதிர்கொள்ள நேரிடும் இன்னல்கள், தனிமைப்படும் ஊனமுற்ற ஆணை விடவும் அதிகமானவை.

இன்றைய சமூகத்தில் அன்பான, அழகான மனைவி இருக்கும்போதே இன்னுமொரு துணையைத் தேடிச் செல்லும் ஆண்களுக்கு மத்தியில் செல்லுமிடமெல்லாம் சுமையெனக் கருதாமல் தூக்கிச் சென்று, அன்பு காட்டி மகிழ்வூட்டி, எந்தக் குறையுமற்று பராமரிக்கும் இந்தக் கணவன் பாராட்டப்பட வேண்டியவன் தானே?
நன்றி : http://rishansharif.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails