Monday, February 8, 2010

பாரதி..!


பாரதி - உன் பாடல் தீ
பாரிருள் அறுக்கும் பரிதி - நீ..!
நீ நடந்த வீதி - என்றும்
எங்கள் சந்நிதி..!
நீ சொல்லியதொரு பாதி - யாம்
உரைப்போம் உலகுக்கு மீதி..!
சொல்லுதல் யார்க்கும் எளிது - உனைப்போல்
சொன்னது செயல் அரிது..!

நீ எழுதி நாம் படித்தோம்
தமிழில் கீதை,
நீ எழுதி யாம் படித்த
யாவும் கீதை..! 

பாமரனுகாய் பாட்டு படித்தாய்,
வீரனாய் வாழ்ந்து இருந்தாய்,
இறந்தும் முடியாது தொடர்ந்தாய்..!

பார் எங்கும் உன் பா தங்கும்
வானும் மண்ணும் உன்னை பாட கெஞ்சும்
யாழும் குழலும் உன் கவிதை பாடும்..!
(இவைகள் அவர் பாடல்கள் படிக்கும் போது தோன்றிய சிந்தனை துளிகள், தொடர் சந்தங்கள் இல்லை)
 
நன்றி http://sakthispoem.blogspot.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails