அன்னாசி பழம் என்றாலே அனேகருக்கு பிடிக்காத ஒன்று. இது அதிக உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியது. இதனால் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்ற நம்பிக்கை மக்கள் கொண்டுள்ளனர். உண்மையில் இது உடலுக்கு மிக நல்லது. இது அதிக உஷ்ணத்தை விளைவிக்க கூடியது அல்ல,
அன்னாசி பழத்தில் வைட்டமின் "B" கூட்டு அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்யும், உடலுக்கு பலத்தை தரும். பல வியாதிகளை குணமாக்கும் அரிய மருந்தாக இயற்கை வைத்தியத்தில் பயன் படுகிறது.
இரும்பு சத்து (ஹீமோகுளொபின்) குறைவாக உள்ளவர்களுக்கு இது சிறந்த டானிக் போன்றது. நன்றாக பழுத்த அன்னாசியை சிறு துண்டுகளாக்கி வெய்யிலில் தூசி படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக் கொண்டு, தினமும் படுக்க செல்லும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஐந்து வற்றல்களை ஊறவைத்து, பின் படுக்கச் செல்லும் முன் ஊறிய வற்றல்களை நன்கு மென்று தின்றுவிட்டு பாலை குடித்து விட வேண்டும்.
இது போல் 48 நாட்கள்(ஒரு மண்டலம்) தொடர்ந்து செய்தால் உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும். உடல் சக்தி பெறும். பித்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு எற்படும் வெள்ளை படுதல் குணமாகும். கோடையில் அன்னாசி சர்பத் சாபிட நாவறட்சி அகன்று தாகம் தணியும்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment