Tuesday, February 2, 2010

இறுதி நபியின் இறுதிப்பேருரை

1417 ஆண்டுகளுக்கு முன் ….
புனித ஹஜ் நெருங்கிக் கொண்டிருந்தது! ஹிஜ்ரி 10-ஆம்; ஆண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின்
இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக மதீனாவிலிருந்து புனித மக்காவை நோக்கிப்புறப்பட்டபோது ஆயிரக்கணக்கான நல்லறத்தோழர்களும் அவர்களோடு பயணமாகினர்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவை அணுகிய போது, அரபு நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும், ஏன் வெளிநாடுகளிலிருந்தும் கூட ஆயிரமாயிரம் ஹாஜிகள் பெருமானார்(ஸல்)அவர்களின் திருக்கூட்டத்துடன் வந்து இணைந்தனர்.அவர்கள் ஒன்றேகால் இலட்சத்தையும் தாண்டிவிட்டனர்.
அரபாத் பெருவெளியில் திரண்டது இந்த மனித வெள்ளம்! எங்கு நோக்கினும் மனிதக்கூட்டந்தான்! இருபத்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் பெருமானாரைப் பேசவும் விடாமல் விரட்டியடித்த அதே மக்கள் இன்று மக்காவின் அரபாத் பெருவெளியில் குழுமினர்.
இந்த இருபத்து மூன்றாண்டுகளிலே எப்படிப்பட்ட அற்புதம் நடந்துவிட்டது! என்பதை எண்ணிப்பார்க்கவே பெரும் அதிசயமாக உள்ளது.
பெருமானார்(ஸல்)அவர்களுக்கு வாழ்வே இல்லையெனத் துரத்தியடித்த அதே மக்காநகரம் இன்று அவர்களின் ஒரு சொல்லுக்காகக் காத்துக்கிடந்தது!
பெருமானாரைக் கொலைசெய்வதையே தங்கள் இலட்சியமெனக் கொண்டிருந்தவர்கள், இன்று அவர்களது உயிர்த் காக்கும் தோழர்களாய், அவர்களுக்காக உயிர்த்தியாகம் செய்வதே தங்களின் பாக்கியம் என நினைப்போராய்ச் சுற்றி நின்றனர்!!
பெருமானாரை இரத்தக்காயத்துடன் விரட்டியடித்த தாயிப் நகர மக்கள், இன்று அவர்களது ஆதரவாளர்களிலே முன்னணி வீரர்கள்!

பெருமானார் அவர்களைத் தூற்றுவதையும், தீங்கிழைப்பதையும், தொழிலாகக் கொண்டிருந்தோர், பெருமானாரின் புகழ்பாடுவதை பெருமையாக எண்ணினர். இன்று!
சுருங்கச்சொன்னால், ஒரே அணியில் மாபெரும் சக்தியாக எதிர்;த்து நின்ற அந்த அரபு நாடு இன்று அவர்களது சுட்டுவிரலிலே அசைந்தாடியது. ஏன்னே இறைவனின் சக்தி!
பெருமானார்(ஸல்) அவர்கள் மேடையிலே ஏறிநின்றார்கள்.சுமார் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மக்களுக்கு மேற்கொண்ட பிரமாண்டமான அந்த மக்கள் வெள்ளத்தின் கண்களும் காதுகளும் கூர்மையாயின. ஏங்கும் நிசப்தம்! ஊசி விழுந்தால்கூட கேட்கத்தக்க அமைதி!

பெருமானார்(ஸல்) அவர்களின் கருணை வழியும் கண்கள் அந்த மனித வெள்ளத்தை நிதானமாகவே நோக்கின.
பெருமானார்(ஸல்) அவர்கள் பேசினார்கள் :-
(ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்)
அப்பொழுது தான் இறைவன்

(மக்களே!) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும், கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
(மக்களே!) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.
(மக்களே!) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது. இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

(மக்களே!) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல.,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.
(மக்களே!) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும்,கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)
(மக்களே!) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.
மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.
மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள!
ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.

உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்
முதலாவது எனது திருவேதமான திருக்குர்ஆன!
இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்!உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.
ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள்.உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.
மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம்.
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! இறையச்சம் கொண்டோரைத்தவிர, ‘அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்.)
சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.
(மக்களே!) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறைவேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில்
கூறுவீர்கள்?
‘நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!’
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.

இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,
‘அல்லாஹும்மஷ்ஹது ! அல்லாஹும்மஷ்ஹது !! அல்லாஹும்மஷ்ஹது !!!
இறைவா! நீயே இதற்கு சாட்சி! இறைவா! நீயே இதற்கு சாட்சி!
இறைவா! நீயே இதற்கு சாட்சி!

என்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.
, الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا
இன்று நான் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைப் படுத்திவிட்டேன். உங்கள் மீது என் அருட்கொடையை நிறைவாகப் பொழிந்துவிட்டேன். உங்களுக்கு (உரிய) வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை அங்கீகரித்துவிட்டேன்.(5:3) என்ற அருட்செய்தியை உலகுக்கு அறிவிக்குமாறு அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தியை (வஹியை)அனுப்பினான். (அறிவிப்பவர்: உமர் (ரலி), ஆதாரம்: புகாரி)
பெருமானார்(ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதை இதன் மூலம் இறைவனே நற்சான்று பகர்ந்து விட்டான். இதுவே இறைவன் அங்கீகரித்த ‘இறைவனின் மார்க்கம்’ என்பதை உலகிற்கு இதன் மூலம் அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த வசனம் அருளப்பட்டதை அறிந்த யூதர்களில் சிலர், உமர் ஃபாரூக் (ரலி) அவர்களிடம் வந்து, மக்கள் தலைவரே! உங்களுக்கருளப்பட்ட அந்த வசனம் எங்களுக்கு மட்டும் அருளப்பட்டிருக்குமாயின் நர்ஙகள் அதற்காக அந்த நாளை ஒரு ஈதாக- பெருநாளாகக் கொண்டாடி மகிழ்ந்திருப்பேமே! என்று கூறினர். அப்போது அமீருல் முஃமினீன் அவர்கள் அது எந்த வசனம் ? எனக் கேட்டார்கள் ;. அது தான் சூரா மாயிதாவில் வரும் 3-வது வசனம் என்றார்கள் வந்தவர்கள். இதைக் கேட்டதும் , அது எந்த வசனம் ? எங்கே? எப்போது? அருளப்பட்டது என்பதை நான் நேரிலே கண்டு தெரிந்து கொண்டவன் என கண்ணீர் மல்கக் கூறினார்கள் கலீஃபா அவர்கள்.
நூற்றாண்டுகளில் சாதிக்க முடியாத மிகப்பெரிய சாதனையை அரும்பெரும் அதிசயத்தை அனாதையும் ஏழையுமான ஒரு தன்னந்தனி மனிதனால் இருபத்தி மூன்றே ஆண்டுகளில் எவ்வாறு சாதித்து வெற்றி காண முடிந்தது என்று உலகே வியந்து நிற்கிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பேருரை உலகோர் அனைவருக்கும் இறுதி நாள் வரை நின்றிலங்கும் அழியாப் பேருரையாகும். ஆயிரத்து நானூற்றிப் பதினேழு ஆண்டுகளுக்கு முனனர்; ஆற்றப்பட்ட அந்த அறவுரைகள் இன்றும் கணீரென்று நம் மனதிலே ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இதைப் பின்பற்றுவோர் ஒருபோதும் வழிதவறவே மபட்டார்கள்! வழி தவறவே மாட்டார்கள்!!
உலக மக்களே! குறிப்பாக முஸ்லிம் சமுதாயமே! உயிருள்ளவரை இதனை ஏற்றுப் பின்பற்றி நடப்பீர்களாக! அப்போது தான் நீங்கள் உலக அரங்கில் ஒளிவிட்டுப் பிரகாசிப்பீர்கள்.! உலகமே உங்கள் காலடியில் மண்டியிட்டு நிற்கும்! நீங்கள் தான் ‘இறுதி நபியின் உம்மத்தார்’ என உலகுக்குப் பறை சாற்றுங்கள்.! புது சகாப்தம் உருவாட்டும்!உங்கள் அதிசய வாழ்வைக்கண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக அன்று போல் இன்றும் இணையட்டும்.!! இறைவன் அதற்கு அருள் பொழிவானாக! ஆமீன்.
ُ إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْح وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجا

அல்லாஹ்வின் உதவியும்,வெற்றியும் வரும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்க(மான இஸ்லா)த்தில் இணைவதைப் பார்ப்பீர்கள். (அல்-குர்ஆன் 110:1,2)
source: albaqavi.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails