நூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை போதும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நோய்களைத் தடுக்கும் 3 ஜீன்களை பயன்படுத்தி அந்த மாத்திரை தயாரிக்கும் முயற்சியில் அவ்விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுபற்றி நியூயார்க்கின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ கல்லூரியில் வயது தொடர்பான ஆராய்ச்சி மையம் சார்பில் ஆராய்ச்சி நடந்தது.அவர்களது கண்டுபிடிப்பின் படி மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கவும், நோய்களைத் தடுக்கவும் 3 ஜீன்கள் உதவுவது தெரிய வந்தது. அந்த மூன்றில் இரண்டு ஜீன்கள், உடலில் நல்ல கொலுப்புகளை உற்பத்தி செய்கின்றன என்றும், இது இதய நோய்கள், பக்கவாதம், மூளை செயல்திறன் மாறுபாடு (அல்சமீர்) ஆகியவற்றைத் தடுக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. 3வது ஜீன், நீரிழிவு நோயை தடுக்கிறது என ஜெர்மனியில் உள்ள யூதர்களில் 100 வய தைக் கடந்த சிலரிடம் நடந்த மரபணு ஆய்வில் இது தெரிய வந்தது.
அந்த ஜீன்களை உடலில் தூண்டச் செய்ய மாத்திரை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதில் ஏறக்குறைய வெற்றி கிடைத்துள்ளதாக தலைமை விஞ்ஞானி நிர் பர்ஜிலய் தெரிவித்தார். இதே ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு ஆய்வகங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.இதய நோய், அல்சமீர், டயபடீஸ் ஆகியவற்றைத் தடுக்கும் ஜீன்களைத் தூண்டும் மாத்திரை பயன்பாட்டுக்கு வந்தால் ‘ஒரே மாத்திரை... ஓஹோன்னு வாழ்க்கை’ என்பது உறுதியாகி விடும் போலிருக்கிறது.
Source : http://www.inneram.com
No comments:
Post a Comment