Tuesday, June 29, 2010

உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு

உலகில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்கள் : 2050 ஆண்டு!


உலகின் மக்கள் தொகையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்னும் நாற்பது ஆண்டுகளில், இப்போது உலகில் நான்கில் ஒரு பங்காக இருக்கும் முஸ்லீம்கள் மூன்றில் ஒருவர் ஆவர் என சொல்கிறது:
http://indianmuslims.in/one-third-of -world-population-in-2050-will-be-muslim/

ஒரு நாட்டின் மக்கள் தொகை அதே அளவில் தொடர, பிறப்பு விகிதம் இரண்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அமெரிக்காவின் விகிதம் 2.1; வெளி நாட்டினர் குடிபெயர்தலினால் இந்த விகிதம்; ஐரோப்பியாவில், இருபது நாடுகளில் இது சுழி (பூஜ்யம்) அல்லது அதற்குக் கீழ் ("நெகடிவ்") ஆகும். ஜப்பானிலும் அங்ஙனமே உள்ளது. ரசியாவில் 28% மக்கள் தொகை குறையும் (46.8 million to 33.4 million).
ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மட்டுமே மக்கள் தொகை பெருகும்.

இப்போது முஸ்லீம்கள் உலகில் 23% உள்ளனர்; ( 1.57 billion out of 6.80 billion); அவர்களில் அறுபது சதவீதம் ஆசியா(இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) மற்றும் இருபது சதவீதம் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிகா) அவர்கள் 2050-ல் உலகில் மூன்றில் ஒருவர் (33%) ஆவர். ஐரோப்பியாவில் முஸ்லீம்கள் தற்போது ஐந்து சதவீதம் உள்ளனர்; அவர்கள் இருபது சதவீதமாவர்.

(ஐயோவா, அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர்: திரு அனீஸ் அன்சாரி எழுதியது. )

http://vignaani.blogspot.com/2010/05/2050.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails