Saturday, June 19, 2010

குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் 2 வது தடவை விசா மாற்ற காத்திருக்க வேண்டியதில்லை

 
குவைத் சிட்டி : குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களின் 2 வது ஸ்பான்ஸரிடமிருந்து தங்கள் விசாவை மாற்ற காத்திருக்க வேண்டியதில்லை என்று சமூக மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமைச்சரகம் முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி அல்-ஷாஹித் செய்தி தாள் தெரிவிக்கின்றது.

தற்போதுள்ள விதிகளின் படி குவைத்தில் ஒரு தடவை விசா டிரான்ஸ்பர் செய்து இரண்டாவது ஸ்பான்ஸரிடத்தில் வேலை செய்ய கூடியவர்கள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருந்தால் ஓராண்டும் மற்றவர்கள் இரண்டு ஆண்டும் பணிபுரிய வேண்டும். ஆனால் தற்போது மற்றவர்கள் ஓராண்டும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாறிக் கொள்ளலாம். இவ்விதிகள் விசா 18 வகை வைத்துள்ளவர்களுக்கு பொருந்தும்.

அரசாங்கத்தின் இம்முடிவை வெளிநாட்டவர்கள் வரவேற்ற போதிலும் இவ்விதிகள் குவைத்தில் தன் முதல் ஸ்பான்ஸரிடம் வேலை செய்பவர்களுக்கு பொருந்தாது என்பதை மிகப் பெரும் குறைபாடாக சொல்கிறார்கள். ஏனென்றால் இன்னும் விசா டிரான்ஸ்பர் செய்யாமல் முதல் ஸ்பான்ஸரிடம் வேலை செய்பவர்கள் குறைந்தது தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வேலை செய்தால் மட்டுமே இன்னொரு ஸ்பான்ஸரிடம் மாறிக் கொள்ள முடியும்.

அது போல் விசா 20 வகையில் வீட்டு வேலை செய்யும் நபர்களுக்கு அவர்களின் ஸ்பான்ஸர்கள் அவர்கள் ஊருக்கு செல்வதற்கான விமான கட்டணத்தை அரசாங்கத்திடம் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. ஏனென்றால் பல சமயங்களில் வீட்டு வேலை செய்ய கூடியவர்கள் விசா இல்லாமல் பிடிபடும் போது அவர்களின் ஸ்பான்ஸர்கள் கையை விரித்து விடுவதால் தேவையில்லாமல் நீண்ட நாட்கள் சிறைப்பட வேண்டிய அவலம் இருக்கிறது. அதை மாற்றி வைப்பு தொகையிலிருந்து அரசாங்கமே விமான டிக்கெட் எடுத்து அனுப்பி விடுவதற்காகவே இவ்வேற்பாடு என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source : இந்நேரம்.காம் -குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் 2 வது தடவை விசா மாற்ற காத்திருக்க வேண்டியதில்லை

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

can you make it clear.

Suppose if a person(Indian) works in a Kuwait private company for 4 months, can he join 2nd job without NO OBEJECTION LETTER from the first employer.

LinkWithin

Related Posts with Thumbnails