Friday, June 18, 2010

பிரபல இஸ்லாமிய பிராசகர் ஜாகிர் நாயக்குக்கு இங்கிலாந்தில் நுழைய தடை



லண்டன் : இந்தியாவை சேர்ந்த பிரபல இஸ்லாமிய பிராச்சரகரான ஜாகிர் நாயக் வரும் வாரத்தில் இலண்டன் மற்றும் இங்கிலாந்தின் இதர நகரங்களில் உரையாற்ற இருந்த நிலையில் அவர் இங்கிலாந்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ டாக்டர் ஜாகிர் நாயக் வெளியிட்ட பல கருத்துக்கள் அவரின் வருகையை நாம் ஏற்க முடியா நிலையில் உள்ளது. இங்கிலாந்துக்கு வருகை தருவது என்பது சிறப்பாக இருக்க வேண்டுமே அது உரிமையாக ஆக முடியாது” என்றார். மேலும் ஜாகிர் நாயக் 2006 ல் ஆற்றிய உரையில் ஓசாமா பின் லேடனை பற்றி கூறும் போது அவர் தீவிரவாதியா இல்லையா என்பது தனக்கு தெரியாது என்றும் செய்தி தாள்களை வைத்து தான் ஒரு முடிவுக்கு வர இயலாது என்றும் கூறியிருந்தார்.
மேலும் உலகின் மிகப் பெரும் தீவிரவாதியான அமெரிக்காவை அவர் அச்சுறுத்துகிறார், எனவே அவர் தீவிரவாதி என்றால் அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகளே என்று சொன்னார். இதை அடிப்படையாக கொண்டே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. டாக்டர் ஜாகிர் நாயக் அமெரிக்காவில் தீவிர கிறிஸ்துவ பிராசகர் டாக்டர் வில்லியம் கேம்பல் மற்றும் இந்தியாவில் ரவிசங்கர் ஆகியோருடன் விவாதம் நடத்தி சர்வதேச கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : http://www.inneram.com/201006188881/zakir-naik-banned-in-uk 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails