Tuesday, June 22, 2010

இஸ்லாமியப் படைப்புகளை வெளியிடுதல் விநியோகித்தல் என்பவை விருத்தி செய்யப்பட வேண்டும்

இஸ்லாமியப் படைப்புகளை வெளியிடுதல் விநியோகித்தல் என்பவை விருத்தி செய்யப்பட வேண்டும்

அரசியல் குழு: இஸ்லாமியப் படைப்புகளை வெளியிடுவதும் விநியோகிப்பதும் இஸ்லாமிய உலகின் தற்போதைய முக்கிய கடமைகளில் ஒன்று என, இஸ்லாமிய சிந்தனைகளுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உலக சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் இக்னாவுக்குத் தெரிவித்தார்.  

இஸ்லாமிய உலக வெளியீட்டாளர்கள் மாநாட்டின் கொள்கை வகுப்பாளர் குழுவின் உறுப்பினர்களுள் ஒருவருமான ஆயத்துல்லாஹ் முஹம்மத் அலி தஸ்கீரி குறிப்பிடும் போது, குர்ஆனிய மற்றும் இஸ்லாமியப் படைப்புகளை வெளியிடுவதற்கும் சர்வதேச அளவில் அவற்றை விநியோகிப்பதற்கும் சிறந்ததொரு அமைப்பியல் உருவாக்கப்பட வேண்டும் என்றார். 

இன்று, இஸ்லாமிய சமூகம் எதிரிகளின் தாக்குதல்களுக்கு அகப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் நம்பிக்கையை மட்டுமன்றி அவர்களது கலாசாரம் ஐக்கியம் மற்றும் நாகரிகம் என்பவற்றையும் குறிவைத்துத் தாக்கும் வௌ;வேறு சவால்களையும் சோதனைகளையும் அது எதிர்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சவால்களை முறியடிப்பதற்கு முழு முஸ்லிம் உலகும் முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  

வெளியீட்டாளர்கள் இத்துறையில் மிக முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர் எனக் குறிப்pட்ட அவர், இஸ்லாமிய நூல்களை வெளியிடுவதனூடாக, அவர்கள் சமூகத்தில் இஸ்லாமி கலாசாரத்தையும் விழிப்புணர்வையும் விருத்தி செய்ய முடியும் என்றார்.  
குர்ஆனியப் படைப்புகளை சர்வதேச அளவில் விநியோகிப்பதை ஒருங்கிணைப்பதற்காக, குர்ஆனிய வெளியீடுகளை ஏற்றுமதி செய்வோர் சங்கமொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது அவர் வலியுறுத்திக் கூறினார்.  

இஸ்லாமிய வெளியீட்டாளர்களின் முதலாவது சர்வதேச மாநாடு ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தெஹ்ரானில் ஜூன் 20 – 21 இடம்பெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த 60 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். 
601653 

Source : http://iqna.ir/en/news_detail.php?ProdID=602941

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails