Wednesday, June 23, 2010

அப்துல் கலாம் புறக்கணிப்பா- செம்மொழி மாநாட்டில் வெடித்தது முதல் சர்ச்சை

 
தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆனால்  மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.

உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை  அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான  ஏவுகணை மனிதர் ஏ பி ஜே  அப்துல்கலாம்  அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைகப் பட்டுள்ளனர்.
ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு  புறக்கனிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து  சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து  மாநாட்டு பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க  மறுத்து வருகின்றனர்.

அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும்  மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.
 

1 comment:

அணில் said...

//அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள்.

இருக்காதா பின்னே! சிந்திப்பவர்களுக்குத் தெரியும் யார் உண்மையில் தமிழ்ப் பற்றுடன் சமூகப் பற்றும் உள்ளவரென்று.

LinkWithin

Related Posts with Thumbnails