கிருக்கிஸ்தான் - உஸ்பெக்கிஸ்தான் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களின்போது பாதிக்கப்படுவோருக்கு மனிதாபிமான பாதுகாப்பு வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க கிருக்கிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள உஸ்பெக்கிஸ்தான் மக்களுக்கு உதவ வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதி லியம் பொஸ்கோ வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரக்கணக்கான உஸ்பெக்கிஸ்தானியர்கள் கிருக்கிஸ்தானிலிருந்து தற்போது வெளியேறியுள்ள நிலையில் மேலும் பலர் வெளியேறும் பொருட்டு கூட்டமாக எல்லைகளில் தரித்து நிற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிருக்கிஸ்தானின் தென் பகுதி நகரமான ஒஸ் மற்றும் ஜலால்பாட் பகுதிகளில் கிருக்கிஸ் மற்றும் உஸ்பெக் இனத்தவர்களுக்கு இடையில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்ற மோதல்களில் இதுவரை 138 பேர் பலியாகியுள்ளனர்.
கிருக்கிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் காரணமாக அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிய இடைக்கால அரசாங்கம் இந்த வன்முறைகளின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி குர்மன்பெக் பக்கியேவ் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர்.
பக்கியேவ் தற்போது பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டை அவர் முற்றாக நிராகரித்துள்ளார்.
இனக்கலவரம் காரணமாக இடம்பெயர்ந்து வரும் மக்கள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் மக்களுக்கு உதவி செய்வதற்கு முன்வர வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி லியம் பொஸ்கோ குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் பாலியல் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.
Jazakkallahu hairan
http://mrishan.blogspot.comகிருக்கிஸ் - உஸ்பெக்கிஸ்தான்: பாதிக்கப்பட்டோருக்கு உதவ...
No comments:
Post a Comment